அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

ஜுவஸ் போற்றி!

ஜெகமதைப் படைத்தாய், போற்றி!
தேவனே: ஜுவஸ் போற்றி!
அமரர்தம் முதல்வா போற்றி!
அவுணரை அழித்தாய், போற்றி!
தீரனே, போற்றி, போற்றி!
திரு அருள் தாராய், போற்றி!
இடிப்படை கொண்டாய், போற்றி!
இகபர அரசே போற்றி!
மழைதனைப் பொழிவாய், போற்றி!
மாபுயல் விடுவாய், போற்றி!
மேக சம்ஹாரா போற்றி!
மேதினி காப்போய், போற்றி!
தந்தையை வென்றாய், போற்றி!
தங்கை மணாளா போற்றி!

(திராவிடநாடு - 21.08.1949)