அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


கொலைகாரன் கோட்சே

அநியாயம் தானுங்கோ
அவனிக் கடுக்காதுங்க!
அக்ரமக்காரன் பேரு
கோட்சே தானுங்க

(அநியாயம்)

மாலையிலே பஜனைக் கூட்டம்
மகாத்மா வந்தா ருங்கோ!
மாபாவி கோட்சே வந்தான்
மகாத்மா காந்தியைக் கொல்ல!

(அநியாயம்)

இந்துவும் முசுலீமும் ஒண்ணுன்னு சொன்னாரு.
இங்கே மதச்சண்டைகள் ஏனுன்னு கேட்டாரு.
இதுக்காகப் பார்ப்பன கோட்சே
கொலைசெய்யத் துணிஞ் சானுங்க!

(அநியாயம்)

கோட்சே கூட்டம் இன்னும்
கொடிகட்டி ஆளுவதா!
கொலைகாரக் கும்பலின் கொட்டம்
தரைமட்ட மாக்கோணும்,
குலமும் ஒண்ணு, கடவுளும் ஒண்ணு
என்றேதான் ஓதணும்...

(அநியாயம்)

(திராவிடநாடு - 1956)