அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

மலர் மணம்

இரவுக்கு ஆயிரம் கண்கள்,
ஆனால் பகலுக்கு ஒன்றே!
ஆயினும் சூரியன் மறைந்தால்
உலகத்தில் ஒளி இல்லையே!
அறிவுக்கு ஆயிரம் கண்கள்
ஆனால் நெஞ்சுக்கு ஒன்றே!
ஆயினும் அன்பு மறைந்தால்
வாழ்வில் ஒளி இல்லையே

(காஞ்சி - 11.09.1966)