அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

மனித மேம்பாடு

மனித மேம்பாடே, என் இயக்கம்
தோழமையே, என் மேடை,
தூய மனத்தினர் என்பேன்
உழைத்திடின் மக்கள் நன்மைக்கே,
தொலைவிலே சிறு பொறிகண்டு
துடித்தெழும் போக்கினர் யாரும்,
தோழர்களாம் எந்தனுக்கே,
துணைவராம் புனிதப்போர் தனக்கே.


(துண்டுத்தாளில் அண்ணா எழுதியுள்ளது)