அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

நடைச் சித்திரம்

கற்கின்றேன், நான்
கற்பவை கசடறக் கற்றுக்
கருத்தூன்றித் தெளிகின்றேன்!
கேள்விச் செல்வம்
பெரும் விருந்தெனக்கு!
கேட்பன யாவையும்
ஏற்றுப் போற்றி
எதிரொளிக் கதிர்கள்
வீசிப் பாய்ச்சிடும்
நிலைக்கண்ணாடி யாவேன்,
நான்! போற்றிடும்
அத்துணை
அறிவும், செறிவும்
உருவும்
திறனும் மிக்க
புதுக்கருத் தொன்று
என்னுள்
பூத்து, மலர்ந்திட
வழிவகை
செய்திடுவேன்!
நல்லறிவனைத்தும்
மெத்தவும் பொதிந்த
கருத்தாம் அது!
எந்தன்
புதுவாழ்வுக் கருத்தும்
அதுவே!

(அண்ணாமலைப் பேருரை - 1968)