அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


புதுப்போர் ஆரம்பம்

வீதியிலே வந்திடும்
வெள்ளையரைக் கண்டும்மே,
வினயமாகக் கைகூப்பிடுவோம் நின்றுமே
போய்வருவீர் துரைமாரே
போவீர் உமதூருக்கே,
என்று உரைத் திடவேண்டும்
பின்னர் நின்று நிலைத்திடும்
நற்சுயராஜ்யம்.

(திராவிடநாடு - 21.06.1942)