அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

தார் தேவன் போற்றி!

நாய்முக ஆசுரன் கண்டன்
நமதரும் தார் தேவனை!
நாவில் ஒன்று குறையக் காளை
நல்ல கறிசமைத்து வைத்தான்!
பாரெல்லாம் அறிய அப்போ
பகவானும் என்ன செய்தார்?
பாவி மகன் செய்யும் சூது
படு சூரண மாக வேதான்
காளை இரண்டைக்கன வேகத்தில்
மென்று தின்று ஏப்பம் விட்டார்

(திராவிடநாடு - 25.09.1949)