அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

உணர்வீர்

டாட்டா பிர்லா கூட்டாளி
பாட்டாளிக்குப் பகையாளி,

வாட்டம் போக்காக் காங்கிரசு
நோட்டம் பார்க்குது ஓட்டுப்பெற.
பாட்டாளித் தோழர்களே!
பட்டதுபோதும், விடுபடுவீர்!

உழைத்து வாழும் உத்தமரே
உலகம் உமது உணர்வீரே!
உடனே வருவீர் புதுப்பாதை!
உதயசூரியன் ஒளிதருமே!

(திராவிடநாடு - 19.11.1961)