அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஏழ்மையால் எழில் கெட்டு. . .!
1

ஏழ்மையால் எழில் கெட்டு. . .!
விஞ்ஞானத்துறைக் கற்றறிவாளர்களின்
வேண்டுகோள்
"இட்டுக் கட்டிக்' கூறுவதே
எனக்குச் சாதகமாக அமைந்தது
சிறுபான்மையினரின் கருத்தே
ஒரு நாள் நாட்டு மக்களின் கருத்தாகிவிடும்
டில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில்
சிறுபான்மைப் பிரச்சினை பற்றிய பேச்சு

தம்பி!

K. சுவாமிநாதன் B.Sc.
J. மஞ்சேஸ்வர் B.Sc.
K. சீனுவாசன் B.Sc.
S. லட்சுமிவராகன் B.Sc.
S. சுப்பிரமணியம் B.Sc.
P.A. அசுவதநாராயணா B.E.
G. ராமதுரை M.Sc.
C.V. கோகுலரத்னம் B.Sc., B.E.
V. கிருஷ்ணபிரம்மம் B.E.
P.K. வெங்கடேஸ்வரன் B.E.
A. ராமகிருஷ்ண சாஸ்திரி B.Sc., B.E.
K.M. தாமோதரன் M.Sc.
C.V.R. பாபு B.Sc.
R. V. ராமகிருஷ்ணசாஸ்திரி B.Sc.
N. சீனுவாசன் B.E.

G.ரங்கராஜன் M.Sc.
A.R. கோடீஸ்வரராவ் M.E.
N.V.S. சாஸ்திரி M.Sc.
D.V. சுப்பிரமணியம் M.Sc.
S.S. ராகவன் M.Sc.
K.U.M. பிரசாத் M.Sc.
பிரபாகரராவ் B.E.
M.R. லட்சுமணன் M.Sc.
N. ரமணி M.Sc.
K.T. ஜோசப் B.Sc.
M.R. அனந்தசயனம் M.E.
A. கோபாலகிருஷ்ணன் B.Sc.
V.C. ஜேர்μ டட்.D.
S. ஹரிஹரன் B.Sc.
காசி. விசுவநாத் M.Sc.
R. சீதாராமன் B.Sc.
K.J. நாயக் B.E.
K.V. கிருஷ்ணராவ் M.E.
H.R. பார்த்தசாரதி B.Sc.
P. மதுசூதனன் நாயர் M.Sc.
N.D. ஜெயசங்கர் M.Sc.
K.S. நாராயண அய்யர் M.Sc.
K. சுப்ரமணிய அய்யர் M.Sc.
G. சத்தியநாராயணராஜ் B.Sc.
K. ராமசாமி B.E.
D. தட்சிணாமூர்த்தி B.E.
H.N. கிருஷ்ணசாமி B.E.
S.R. சசிகாந்த் B.E.
A.S. பெருமாள் M.Sc.
E.V.L.N. ராவ் Ph.D.
B. ராஜீவலோசனம் B.Sc.
V.N. கிருஷ்ணமூர்த்தி M.Sc.
ஆஷ்லிஷின்மய்ன் B.Sc.
S. வீரேசய்யா B.E.
M.K. மணி B.E.
V. அளகர்சாமி B.E.
K.P. கோபிநாதன் M.Sc.
K. அப்பாராவ் B.E.
B.V. சோமசேகர் B.E.
S. S. கிருஷ்ணமூர்த்தி M.Sc.
S. சுப்பிரமணியம் B.E.
G. பாஸ்கரராவ் M.Sc.
K. ராமசாஸ்திரி M.E.
V.V. ஷான்பீ B.E.
P.M. கோபிநாத் M.Sc.
B.V.S. சர்மா M.Sc.
C.H. ராமச்சந்திரராவ் M.E.
V. முனிரத்தினம் B.E. (Hons)
K.L. நாராயணா M.E.
G. செலமா ரெட்டி M.E.
G. ரமணி M.Sc.
V.N. வசந்தராஜன் M.Sc.
T. நாராயணா B.E.
N. ரகுநாதநாயக் B.E.
P. பிரபாகரராவ் B.E.
K.P.R. பிரபு B.Sc.
B. ராதாகிருஷ்ணராவ் B.Sc.
M. மாதவசம்பிகீதாயா B.E.
H.V. வெங்கடகிருஷ்ணா B.E.
S. விஜயகுமார் சாஸ்திரி B.Sc.
K. நாராயணபட் B.Sc.
K. விசுவநாத்அடிகா B.Sc.
B. ரத்தினாகரபைரி B.Sc.
M.R. பரணேஷ் B.E.
M.K. சதீஷா B.E.
A.P. சிவபிரசாத் B.Sc.
P. சேஷசாயி B.Sc.
A. செல்வராஜன் M.Sc.
N. கோபால் B.E.
H.G. மாதவராஜ் M.Sc.
G.G. சண்ட் B.E.
R.K. யூவத்சவா B.Sc.
K.V.N. சர்மா B.E.
M.V. ராமமூர்த்தி M.Sc.
V. ராமச்சந்திரன் B.Sc.
N. சேஷகிரி B.Sc.
N.S. ஜெயந்த் B.Sc.
H. ராமகிருஷ்ணா B.Sc.

G.V. ஆனந்த் M.Sc.
T.V. சத்தியநாராயணா B.Sc.
V.P. நாராயணசாமி B.E.
R. சீனுவாசன் B.E.
B. தத்தகுரு B.Sc.
P. தத்தகுப்தா B.Sc. (Hons)
N.S. மகாதேவன் B.E.
H.K. ராமப்பிரியன் B.Sc.
குமாரி A. பிரதீமா B.Sc.
G. ரமணி B.E. (Hons)
R. விசுவநாதன் B.Sc.
N.C. ஜகன் B.Sc.
P.K. நாகேஸ்வரராவ் B.Sc.
R. சம்பத்குமார் Ph.D.
B. சுகவனம் M.Sc.
T. கங்காதரய்யா B.E.
M.D. இடியாரா B.Sc.
D.S.R. சர்மா M.Sc.
K.G. கிருஷ்ணமூர்த்தி B.E.
K.H. ராமா B.E.
R. தண்டபாணி B.Sc.
V. மதுசூதனராவ் B.Sc.
D.M. பஜிலுல்லா B.Sc.
N. ராமச்சந்திரா B.Sc.
G. புருஷோத்தமம் B.Sc.
A. ராமதாஸ் B.E.
K.V. ராமமூர்த்தி B.E.
K. பாலசந்திரபட் B.Sc.
S. சேஷாசலா B.Sc.
R.K. சீனுவாசமூர்த்தி B.Sc.
D.S. பதாக் B.Sc.
V. சர்மா B.Sc.
S.H. வெங்கடேஷ் M.Sc.
K. நஞ்சுண்டசாமி B.E.
குமாரி S. சீதாலட்சுமி M.Sc.
குமாரி பாக்கியலட்சுமி M.A. Ph.D.
குமாரி K.S. லிங்ஸி M.Sc.
குமாரி D.ஊ. லீலாவதி M.Sc.
குமாரி கிளாடிஸ் சுமித்ரா M.A.
குமாரி ஊ.J. ராமன் M.A.
குமாரி J. அமிர்தவல்லி M.Sc.
N. ராமன் B.Sc.
V. சீனுவாசன் M. A.
S. சத்தாக்கு B.E.
V. ராம்ஜி M.Sc.
K. நாகராஜ் B.Sc.
K. சிவராமன் B.Sc.
H.C. நாகராஜ் B.Sc.
A. அழகர்சாமி B.E.
K. வெங்கடேஸ்வரன் B.Sc.
M.V. ராஜா B.Sc.
V. சீதாராமராவ் B.E.
R. ரவீந்திரன் B.E.
K. நாராயணன் B.Sc.
V.N. சுப்பாராவ் B.Sc.
R. சுந்தரேசன் B.Sc.
R. கிருஷ்ணமூர்த்தி B.Sc.
N. ரங்கநாதன் B.Sc.
R. ராமநாதன் B.Sc.
K.S.L. நரசிம்மன் B.Sc.
C.S. கணேஷ் B.Sc.
N. பார்த்தசாரதி B.Sc.
R. ஆனந்தராஜ் B.Sc.
K.V. வெங்கடாச்சாரி B.Sc.
K.R. சீனுவாசன் B.Sc.
B.P. சானி M.Sc.
N. பத்மநாபன் B.Sc. (Hons)
K.N.N. ரெட்டி M.Sc.
S.K. ராமலிங்கம் M.Sc.
K. சந்தானம் M.Sc.
J. சுப்பிரமணியம் M.Sc.
K. சங்கரராவ் M.Sc.
V. பச்சையப்பன் M.Sc.
N.S. வெங்கடராமன் M.A., M.Sc.
R. கண்ணன்குட்டி B.E.
K. கிருஷ்ணசாமி B.E.
V.R. ரங்கராஜு B.E.
C. கந்தசாமி M.Sc.
K. சீனுவாசராகவன் B.E.
A. சண்முகசுந்தரம் B.E.

C.V. ராமகிருஷ்ணன் B.E.
T. நடராஜன் B.Sc.
P. சூரியநாராயணன் B.Sc.
C. ரவீந்திரன் B.Sc.
K.S. சங்கரன் B.Sc.
K.P.S. பிரபு B.Sc.
D. ரவீந்திரா M.E.
P. சத்தியநாராயணா B.E.
M.S. கிருஷ்ணமூர்த்தி B.E.
R. பாலசுப்பிரமணியம் M.E.
C.V. வெங்கடசேஷய்யா M.E.
S. ராமன் B.Sc.
N. ராமன் M.A., M.Sc.
S. ராகவன் M.Sc.
N. விசுவநாதன் B.Sc.
V.V.S. சர்மா B.Sc.
R.J. சீனுவாசன் B.E.
M.K. சிவலிங்கம் M.A.
குமாரி R. லீலா M.A.
M. சீனுவாசன் B.Sc.
P.S. அனந்தராமன் B.E.
H.N. ராமச்சந்திரா B.E.
P.G. லட்சுமணன் B.Sc.
K.R.K. ஈஸ்வரன் M.Sc.
V. கணேசன் B.Sc.
ஜான் S. எபனேசர் M.Sc.
T.S. ராமபத்திரன் B.Sc.
S.A. அக்கீம் B.E.
K. ரங்கா டட்.D.
B. யக்யநாராயணா B.Sc.
M.S. ராதாகிருஷ்ணராவ் B.Sc.
G.R. வெங்கடகிருஷ்ணன் M.Sc.
T.A. வெங்கடராம் B.Sc.
D.N. அஜாரிகா B.E.
N. ராகவேந்திரா B.E.
S.R. யோகநரசிம்மம் M.Sc.
S. அய்யாசாமி M.Sc.
குமாரி P. மாலதி M.Sc.
குமாரி P. வசந்தா B.Sc.
குமாரி P. ராதா M.Sc.
குமாரி B. மீராபாய் M.Sc.
G.K. வெங்கடராவ் B.Sc.
R. நடராசன் M.E.
V. சுப்பிரமணியம் B.Sc.
V. சீராமுலு B.E.
P.R. சீனுவாசன் M.Sc.
K. ஸ்ரீதரன் B.E.
S. குருராஜராவ் B.E.
D.S. தேஷ்முக் M.Sc.
K. ராமமூர்த்தி ரெட்டி B.E.
M.V. பட் B.E.
J. கோபாலகிருஷ்ணன் M.Sc.
A. K. மல்லய்யா B.E.
M.வ. சுப்பிரமணியம் M.Sc.
J.S. கினி B.E.
K. தாமஸ் ஜேகப் B.Sc.
T.M. ராதாகிருஷ்ணன் M.Sc.
T.K. சந்தானம் B.E.
C.P. பிரபாகரன் M.Sc.
U.V. சவுதாரி B.E.
S.B. பாய் B.Sc. (Hons)
K.S. சீனுவாஸ் M.Sc.
M.K. பிரேமராஜன் B.Sc.
K.V. பட் M.Sc.
K.R. ஹெக்டே B.Sc.
K. சீனுவாசன் B.Sc. (Hons)
K.S. சலபதிராவ் B.Sc.
C. சூரியநாராயணா B.Sc.
A. பாலசுப்பிரமணியம் B.Sc.
M.R. கஜபதி B.E.
R. ராமநாதன் B.Sc.
V.B.K. சன்யாசிராவ் B.E.
R.S. சீனுவாசன் B.E.
M.V. ராவ் M.Sc.
G. ராமசாமி B.E.
H. S. முகுந்தா B.E.
B. சத்தியநாராயணா B.E. (Hons)
K. மல்லிகார்ஜுனராவ் B.Sc.
C.H. பிரசாதராவ் B.Sc.
M. சாம்பசிவராவ் B.Sc.

K.M. காமத் M.Sc.
A.N. மோகன் B.Sc.
M. ரவீந்திரன் B.Sc.
திருநாராயண அய்யங்கார் B.Sc.
M.J.S. ரங்காச்சாரி M.Sc.
S. ராஜசேகரன் B.Sc.
K. ரகுநாதன் M.Sc.
S.V. விஜயராகவன் B.E.
K. கோபாலன் H.SC.
K.N. சுப்பிரமணியம் M.Sc.
M. சீனுவாசன் B.Sc. (Hons)
V. கிருஷ்ணன் M.Sc.
M.S. வாசுதேவ் B.E.
V.S.V. மணி B.Sc.
K. ரவீந்திரநாத் M.Sc.
S.R. ஜெயின் M.Sc.
D.V. சுப்பிரமணியம் M.Sc.
V.K. வாசுதேவன் உன்னி M.Sc.
குமாரி V. வசந்தசேனா M.Sc.
குமாரி சரோஜம்மா M.Sc.
T.S. கண்ணன் M.Sc.
S.R. சத்தியநாராயணா M.Sc.
குமாரி D.K. பத்மா M.Sc.
N. பாலசுப்பிரமணியம் M.Sc.
H.C. மிருத்யன்ஜனேயா M.Sc.
குமாரி S. K. விஜயலட்சுமம்மா M.Sc.
K.M. தாமோதரன் M.Sc.
N. மகாபத்ரா M.Sc.
R. ரங்கநாதன் B.Sc. (Hons)
K.S. அய்யர் M.Sc.
A. சீனுவாசன் M.Sc.
T. அருணாசலம் M.Sc.
S. ரங்கராஜு M.Sc.
G. ராமன் B.E.
V. சேஷகிரிராவ் M.E.
A.G. நாராயணராவ் B.Sc.
M. அந்தோணிரெட்டி B.E.
M. அரிசங்கர் B.Sc.
P.K. போலோஸ் B.Sc.
சீதாராம ஆசார்யா M.Sc.
L.R. சுப்பிரமணியம் M.Sc.
S. பட்டநாயக் B.Sc.
C. தேவநாதன் B.Sc. (Hons)
C.V. யோகாநந்தா M.E.
N. கிருஷ்ணமூர்த்தி M.Sc.
K.K. கண்ணன் M.Sc.
B.V. தாசரதி B.E.
K. கேசவன் B.Sc.
G.B. சுப்பையா B.E.
ஜோசப்லோபோ B.E.
C.K. சீதாராமன் B.Sc.
T. ஜிஷ்ணு B.E.
D. மல்லையா B.E.
T.V. சுந்தரராஜமூர்த்தி B.A., B.E.
C. குருராஜ் B.E.
R. பார்த்தசாரதி B.Sc.
V. மித்தர் B.Sc.
V.K. மாணிக்கசெல்வம் B.E.
S. வெங்கடசுப்பன் B.E. (Hons)
V. நாகராஜன் டட்.D.
C.V. கல்யாணசுந்தரம் M.A.
R. பாலகிருஷ்ணன் B.Sc.
R. கண்ணப்பன் B.E.
S. பாலசுப்பிரமணியம் B.Sc.
D.S. சத்தியநாராயணா B.E.
S. ராஜசேகரன் B.Sc.
R.S. ராஜகோபாலன் M.Sc.
S. சந்திரசேகரன் B.E.
S. ஸ்ரீதரன் B.Sc.
C. அனந்தநாராயணன் B.Sc.
V. திருவேங்கிடாச்சாரி B.E.
R.S. பட்கோகேஷ்வர் B.E.
R.G. புவனேஸ்வரன் B.Sc.
R. மீனாட்சிசுந்தரம் B.E.
S. ராமப்பிரசாத் B.E.
V. பசுபதி B.Sc.
N. ராதாகிருஷ்ணன் B.E.
H. பரூமிக் B.E.
S.C. முகோபாத்யாயா B.E.
வ.V. வெங்கடேஷ் B.E.
R. ஜம்புநாதன் M.Sc.
H.R. வைத்தியநாத் B.Sc.
N. K. சீனுவாசன் B.Sc.
R. நாகராஜா M.Sc.

பட்டியலைப் பார்த்தனையா! பட்டதாரிகள், அதிலும் தொழிலியல், பொறியில், மின் இயல் போன்ற விஞ்ஞானத் துறையின் பட்டங்கள், மிக நீண்டகாலமாகப் புதுமுறைத் தொழில் வளம் பெறாமல் பஞ்சத்தில் அடிபட்டுக் கிடந்தோர் நாட்டினைப் புதுப்பொலிவு பெற்றிடச் செய்திடும் பொறுப்பினை மேற்கொள்வதற்கான தகுதியும் திறமையும் பெற்றிருப்பவர்களின் பட்டியல். இருண்ட சிற்றூர்கள் ஒளி பெற்றிடவும், துவண்டிடும் தொழிலினை முறுக்கேற்றிடவும், மனிதனைக் கசக்கிப் பிழிந்திடும் கடின உழைப்பைக் குறைத்திட யந்திர வலிவினைத் துணையாக்கிடவும், பொருள்களின் தன்மையினை நுணுகிக் கண்டறிந்து பயனை மிகுதியாக்கிடவும், எந்த விஞ்ஞான அறிவுத்திறமை தேவையோ, அதனைப் பெற்றுள்ள அறிவாளர்களின் பட்டியல்! இவர்கள் காட்டாறு களைக் கட்டுப்படுத்துவர், கரம்பைக் கழனியாக்குவர், கடல்நீரைக் குடிநீராக்கிடுவர், வேகம், வலிவாக மாறிட வழி செய்வர் - இவர்களைப் பாரதியார் "புதிய பிரம்மாக்கள்' என்பார்! அத்தகைய சிறப்பியல்பு பெற்றவர்கள்; பெற்றுள்ள திறமையினை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ள பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளவர்கள் - பெங்களூர் விஞ்ஞானத்துறைக் கல்லூரியில் பயின்று வருபவர்கள்! இவர் போன்றோரின் கரம் பட்டுப்பட்டுத்தான் நாடு செல்வபுரியாகிடவேண்டும். இவர் போன்றாரின் தொகை பெரும் அளவு பெற்றதனால் பிரிட்டனும் ஜெர்மனியும், ரμயர்மம், அமெரிக்காவும், இத்தனை வளர்ச்சி கண்டன. ஆனால். . . . !

பெருமிதமல்லவாகொள்ள வேண்டும், பழமைப் பிடியிலே சிக்கிக் கிடந்திட்ட நாட்டை மீட்டிடத் திறமை பெற்றுள்ளவர் களின் பட்டியலைக் காணும்போது; புதிய உற்சாகமும் நம்பிக்கையுமல்லவா பெற வேண்டும்; அதற்கு மாறாக இந்தப் பட்டியûலையும் காட்டிவிட்டு, பெருமூச்செறிவது ஏன்! ஆனால். . . . என்று இழுப்பு எதற்காக என்று கேட்கிறாய் புரிகிறது.

இவர்களின் தகுதியையும் திறமையையும், இவர்களால் நாடு பெற இருக்கும் பெருமையையும் வளர்ச்சியையும் எண்ணும்போது, எல்லோருக்கும் ஏற்படுவதுபோல எனக்கும் இனிப்பான உணர்ச்சிதான் எழுகிறது. என்றாலும். . .

நான் இந்தப் பட்டியலைத் தந்துள்ளதன் நோக்கம், விஞ்ஞானத் துறையினரின் தொகை வளர்ந்து வருவதனைக் காட்டுவதற்காக இருப்பின், மகிழ்ச்சி குறைவின்றிக் கொள்வேன். நான் இந்தப் பட்டியலைத் தந்திருப்பது, அதற்காக அல்ல, எப்படிப்பட்டவர்களின் கருத்தையெல்லாம் துச்சமென்று மதித்திடும் துரைத்தனம் நடத்தப்படுகிறது, எவ்விதமான தகுதி திறமை படைத்தவர்களெல்லாம் ஏனோதானோக்களாக்கப் பட்டுவிடுகின்றனர் இந்த ஆளவந்தார்களால் என்பதை அறிவதனால் எனக்கு ஏற்பட்டுள்ள வேதனையைப் பங்கிட்டுக் கொள்வதற்கு உன்னை அழைக்கவே இந்தப் பட்டியலைக் காட்டினேன்.