அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆலையூரார் உபதேசம்!
1
“கைராட்டையிலே, கேட்குது கீதம்! அதுவே சுதந்திர நாதம்!”

ராட்டையிலுள்ள நூலிலே இராமன் தாண்டவமாடும் காட்சி
கதருக்குள்ளே மேன்மைக்கு அதுவே அத்தாட்சி!

காந்தியாரின் உபதேசம் இது. இது, அவருக்குள்ள ராமபக்தியைக் காட்டுவதா, அல்லது கதரிலுள்ள சிரத்தையைக் காட்டுவதா என்பது ஒருபுறம் இருக்க இந்த உபதேசத்தை நமக்கு அருளும் போக்கும், அதன் விளைவும், கவனிக்கும்போது, சிந்தனையே சுழல்கிறது.

ஆலைகளுக்கிடையே இருந்து கொண்டு, இடு ராட்டே சிறிது பாடுகிறார். ஆதிசயம்! இடு ராட்டே சிந்துக்கு இஹா! அற்புதம்! என்று பாராட்டுக்க் கூறிவிட்டு, பனியாக்கள், ஆலைகள் அமைக்கின்றனர். அற்புதம்!! ஆலையூராருக்கு ஆலை வேண்டாம் என்று கூறுவதைவிட்டு, வேலையின்றித் தன் மக்களை வெளிநாடுகளுக்குக் கூலிகளாக அனுப்பிக் குமுறும் தமிழகத்துக்கு, ஆலை வேண்டாம் என்று கூறுகிறார் - ஏன்? யாரைக் கேட்பது?

மக்கள் பழங்காலக் கருவிகளை, நாளாக ஆக மாற்றிக்கொண்டே சென்றனர். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல வாகையால், வழவல என்பது மட்டுமல்ல, மனிதனின் தேவைகள் அதிகரிக்க தொடங்கின. வகையில், அளவில், முறையில், அதற்கு ஏற்றபடி கருவிகள் மாறித் தீரவேண்டி நேரிட்டது. பாலாடையில் பருகிய குழந்தை பிறகு, கோப்பை தேடும் குமரனாகிறான், தொட்டியில இருந்து பிறகு, கட்டிலும் ஏறவேண்டி வரும்! இந்த மாறுதல் நாம் மனத்தால் எண்ணினால் திக்பிரமை ஆடையுமளவு ஏற்பட்டிருக்கிறது, மாநிலமெங்கும்.

இடை நெய்தலிலும் இது போன்றே, ஆலைகள் தோன்றியுள்ளன. ஆலையும் எடுத்தவுடன் தோன்றிவிடவில்லை. இரவு பகலாக எத்தனையோ நாட்டு அறிஞர்கள் சிந்தித்துச் சிந்தித்து, பன்முறை தோற்று, பிறகு ஓரளவு வெற்றி பெற்று ஒருவர் பெற்ற வெற்றியைப் புதியவர் துணைக்கொண்டு மேலும் ஆராயத் தொடங்கிப் புதிய வெற்றி பெற்றார். இதுவும் திருப்தி தந்துவிடவில்லை. அந்த வெற்றி தேடும் வேலை தொடர்ந்து நடந்துவருகிறது. எங்கும், எல்லாத் துறையிலும், கையால் நூற்று, கையால் நெய்து இடையாக்கும் முறையான நெசவுத்தான் இதிநாட்களில் அதேபோது இருந்த பிரயாணமுறை, குதிரை ஏற்றம், வியாபார முறை பொதிமாடு மீது மூட்டைகளை ஏற்றுதல், போர்முறை, கத்தி கேடயம், வில் அம்பு என்று இருந்தன. இன்று ஒன்றாவது உருவம் தெரிந்து கொள்ளக்கூடியவிதமாக இல்லை, அவ்வளவு அற்புதமாக மாறிவிட்டன. மாறிக்கொண்டே உள்ளன. மாறியபடியே இருக்கும்.

கையினால் நூற்றுக் கையினால் நெய்து இடையாக்குவது பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மாறுதலாகித் தறியின் முறை மாறி, தறிக்கு மின்சார சக்தி தரும் முறை புகுந்து, ஆலை என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

இந்த ஆலை, இலகாலம் என்று காந்தியார் கூறுகிறார். அவர் இதனை ஏறக்குறைய 1000 மைல் அப்புறம் இருந்து கூற, இங்கிருக்கும் பத்திகை இபீசில் சின்னக் கண்ணாடிப் பெட்டியில், இளில்லை, யட்சணி இல்லை, கரம் தெரிவதில்லை எழுதிக் காட்டிவிடுகிறது விஞ்ஞானம் அவர் கூறும் அந்த நாளை ராட்டையில் இராமன் இவாகனம் செய்யும் ரகசிய சித்தாந்தத்தை, நமக்கு சுகப் பிரமரோ சனக சனாதியரோ, யட்சணியோ இஞ்சநேயரோ அறிவிக்கவில்லை. ஆலை போன்றவைகளை அமைத்துத் தர எந்த விஞ்ஞானம் பயன்பட்டதோ அதே விஞ்ஞானம் அறிவிக்கிறது.

இந்த வேடிக்கை ஒருபுறம் இருக்க, கை ராட்டை வேண்டும் என்று போதிக்கும் காந்தியாரைச் சுற்றி நிற்பவர்கள் ஆலை அரசர்கள்! அது அவருக்கே தெரிகிறது, தெரிந்த மற்றவர்கள் கேட்பரே என்றும் தெரிகிறது. அதற்குத் தக்கதோர் சமாதானம் கூறவேண்டுமே என்று அவர் ஏன் கொள்கைகளுக்கு நேர்மாறாக உள்ள மில் முதலாளிகளின் விருந்தினராக எப்படி இருக்கிறேன் என்று எண்ணுகிறார்கள், அதுதான் ஆகிம்சை என்று கூறுகிறார்.

அது அவருடைய நிலைமையை விளக்க அவர் உபயோகிக்கும் வாதம், அது பற்றி நமக்கு அக்கறையுமில்லை, அந்த வாதம் பொருத்தமா என்பது பற்றி ஆராயவேண்டியதும் முக்கியமல்ல, ஒன்று நமக்குத் தெரியும் தமது கொள்கைகளுக்கு முரணாக நடந்து கொள்பவர்களிடையே உறவு கொண்டாடி வாழும் முறை ஆகிம்சையானால், அந்த ஆகிம்சை புத்தருக்குத் தெரியவில்லை என்று அர்த்தமாகும். ஏனெனில் நிராசையைத் தமது கொள்கையாகக் கொண்ட போது, இசையை எட்டவல்ல அரச போகத்தைத் துறந்தாக வேண்டும் என்று எண்ணி, புத்தர், பாதி ராத்திரியில், அழகு மனைவி துயிலும்போது, குழவியின் கொஞ்சு முகத்தையும் கண்டு சொக்காமல் ஆரண்மனையை விட்டு வெளி ஏறினார். தமது தத்துவத்தின்படி நடந்துகொள்ள அதுவே மார்க்கம் என்று சித்தார்த்தருக்கு, இன்று காந்தியார் கூறும் ஆகிம்சை தெரியாது போலும்! தெரியாதே நல்லதாயிற்று, தெரியாததால்தான் சித்தார்த்தர், புத்தரானார். அது எப்படியோ போகட்டும், காந்தியார் கூறும் சமாதானம் தமது நிலைமையை விளக்குவதற்குப் பயன்பட்டாலும் படாவிட்டாலும், முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயம் அது அல்ல.

ஆலைகள் இலகால விஷம். அவை இகா, என்று காந்தியார் ஆலைக் காலத்திலே கூறுவது மட்டுமல்ல, நெசவுத் தொழிலிலே ஆலைக் காலம் ஏற்பட்டிருப்பதுபோல, பிரயாணத் துறையிலே விமான காலம், வைத்தியத துறையிலே ரேடியோ மூலம் சிகிச்சை, காட்சித் துறையிலே டெலிவிஷன் காலம், சேதி அறிவிப்புத் துறையிலே கம்பியில்லாத் தந்திக்காலம், என்று ஆதியற்புதமான மாறுதல்கள் வேறு எத்தனையோ துறைகளிலே தோன்றியுள்ள காலத்திலே, நெசவு விஷயமாக மட்டும். ஆலைகள் ஏற்பட்டிருப்பதை, மாறுதலைக் கண்டிக்கிறார் - ஆலைகள் விஷம் என்று கூறுகிறார். இது மிக மிகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மற்றத் துறைகளிலேயும், நெசவுத் துறையிலே உள்ள ஆலை போன்ற நவீன சாதனங்கள் ஆட்சி செய்கின்றன. காந்தியார் அவைகளை விட்டுவிடும்படி சொல்லவுமில்லை, அவராலேயே கூட அவைகளின்றிக் காலந்தள்ள முடியவுமில்லை, இத்ம சக்தியிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட அவருக்கு நோய்கண்டபோது ஆறு டாக்டர்கள் தேவைப்பட்டனர்!

ஆலைகளைக் கொண்டு கொள்ளையடிக் கிறார்கள். காந்தியார் அதனாலேயே அதனைக் கண்டிக்கிறார். மற்றத் துறைகளிலே ஏற்பட்ட நவீனக் கருவிகளையும் தொழில் முறைகளையும் கண்டிக்காமல் ஆலையை மட்டும் விஷம் என்று கூறுவதற்குக் காரணம் அதுதான் என்று அன்பர்கள் அவரர் சார்பிலே வாதிடக்கூடுமட். ஆனால், அந்த வாதமும் பயன்படாது, ஏனெனில், கொள்ளை இலாபம், ஆலையில் மட்டுமல்ல, தற்காலம் நடத்தப்படும் நவீனத்தொழில் எதிலும் கிடைக்கும். குன்மத்துக்குச் செந்தூரம் கொடுத்துவிட்டு சித்தவைத்தியர் வாங்குகிற பணம் அதற்கு ஜெனரல் இஸ்பத்திரியில் ஒரு மாதம் இருக்க வேண்டும் என்று யோசனை தருகிற டாக்டருக்கு நாம்தரும் வண்டி வாடகைப் பணத்தைவிடக் குறைவு, நவீன முறையினால், இலாபம், தொழில் நடத்துபவர் களுக்கு, நெசவுத் தொழிலில் மட்டுமல்ல, எந்த வகையான தொழிலிலும் கிடைக்கிறது, எனவே, ஆலைகளை மட்டும் விஷம் என்று கூறினதற்குப் பொருத்தமான காரணத்தை அன்பர்கள் கண்டறிந்தும் சொல்லமுடியாது.

மற்றத் தொழிலைப் போல அல்ல நெசவு மற்றவைக்கேனும் மெஷின் தேவைப்படலாம், மனிதனால் முடியாமலிருக்கலாம். நெசவு அப்படி அல்ல, கையினால்நூற்றுக் கையினால் நெய்து கொள்ளலாம். ஆகதோன், காந்தியார் அதனை அவ்வளவு வற்புறுத்துகிறார் என்று வாதிடக்கூடும் - அவரல்ல - அவர் சார்பிலே அன்பர்கள்! அதுவும் பயனற்றதாகிறது யோசிக்கும்போது. நெசவுமட்டு மல்ல, எந்தத் தொழிலும் மெஷின் ஈன்றி நடத்தலாம் - நடந்ததுதான், தசரத குமாரன் விமான மார்க்கமாக அல்ல, இலங்கை சென்றது! ஆசோகன் ரேடியோ கேட்டதில்லை! கனிஷ்கன் டெலிபோனில் பேசினதில்லை. நாம் இவைகளைப் பெற்று இருக்கிறோம். நாம் மட்டுமல்ல, ஆலையை இலகாலம் என்று கூறும் காந்தியாரும் இவைகளை உபயோகிக்கிறார்.
நெசவுத் தொழிலுக்கு ராட்டையே போதும், ஆலை, விஷமாகும் என்று கூறும் காந்தியார், அனைத்தையும் முழுமூச்சாகக் கண்டிக்கலாம். மனிதன், இன்று மெஷின் காலத்தினால் பெற்றுள்ள எல்லாக் கருவியும் இல்லாமலேயே, அந்தத் தொழில்களை நடத்தலாம், நடத்தினதுண்டு.

ஏன் காந்தியார், ஆலைகளை மட்டும், குறிப்பாகக் கண்டிக்க முன் வந்தார்? பதில் கூறும்படி கேட்டால், முடியாத காரணத்தால் அன்பர்களுக்குக் கோபம் வரும் எனவே, அவர்களைச் சிந்திக்கும்படி மட்டும் கேட்டுக் கொள்கிறோம்.

போகட்டும் ஆலை இலகாலம் போன்றது என்ற இந்த உபதேசத்தை ஏன், அகில இந்தியக் காங்கிரசிலே தீர்மானிக்க கள்ளுக்கடை ஒழிப்புப்போல ஆலை ஒழிப்பு இயக்கமொன்று நடத்தக்கூடாது! இதுவும் கேள்வி அல்ல, சிந்தனைக்கு!

அத்தகைய ஒழிப்பு இயக்கத்தை அவர் துவக்காததைக் கூட மறந்துவிடுவோம், ஏன் அவர் இப்போதாவது ஆலைக்காரரைக் கூட்டிவைத்து அறிவுரை கூறலாகாது? அதுவும் செய்யவில்லை. போகட்டும். ஏன், ஆலைகள் இலகாலம் என்ற உபதேசத்தை நமக்கு மட்டும் செய்யவேண்டும்?
நமது மாகாண முதலமைச்சர் சென்ற கிழமை வடநாடு சென்று காந்தியாரைத் தரிசித்தார். அதுபோது, காந்தியார் “ஆலைகள் விஷம் போன்றவை இப்போது பல மாகாணத்தவர்கள் புதிது புதிதாக ஆலைகள் அமைக்கவேண்டும் என்று ஆவல் கொண்டுள்ளனர். இது இகாது கூடாது” என்றுரைக்க பிரகாசம். “ஆம்! ஐயனே! அதற்கென்ன ஐயம் மெய்யனே!” என்று பேசியதோடு நிற்கவில்லை. “ஏன் மாகாணத்திலே புதிய நெசவாலைகளை ஏற்படுத்தப்போவதில்லை. அந்த எண்ணமே எனக்கில்லை கதர்த்திட்டமே ஏன் கருத்துக்கேற்றது. அது ஆபிவிருத்தியானதும், இப்போது ஏன் மாகாணத்தில் உள்ள ஆலைகளையும் மூடிவிடுகிறேன் என்றாராம். இவ்விதம் முதலமைச்சர் தமது குருபக்தியைக் காட்டிக் கொண்டார்.

நமக்கு இருக்கும் கவலை எல்லாம், ஏன் குரு நமது மாகாணத்தவருக்கு மட்டும் இந்த மகத்தான உபதேசம் புரிகிறார். ஆலை அரசர்கள் கொலு வீற்றிருக்கும் பம்பாய் குஜராத் மார்வார், கோலாப்பூர், ராம்பூர், ஷோலாப்பூர், ஆமதாபாத், கான்பூர் ஆகிய ஆலை நகர்களிலே, அடிக்கடி பவனிவருபவர். ஆலை அரசர்களுக்கு அடிக்கடி தரிசனம் தருபவர், அந்தச் சமயத்திலே இந்த உபதேசத்தை அவர்களுக்கு அருளாத காரணம் என்ன? அந்த ஆலை அரசுகள் அப்பு உபதேசத்தை அவர்களுக்கு அருளாத காரணம் என்ன? அந்த ஆலை அரசுகள் அப்பு அழுக்கின்றி இருப்பதுடன், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளருவதை அவர் அறியாரா? அறிந்தும் அதனைத் தடுக்காத காரணம் என்ன? அவருடைய கோபப் பார்வையை அப்பக்கம் திருப்பினால் போதாதா? அவர்களை ஆலைபுரிகளில் ஆரசோச்ச விட்டு வைத்து, எதற்காகவோ வந்த பிரகாசத்தை அருகழைத்து அப்பனே! ஆலைகளிலே இசை கொள்ளாதே! அந்தோ அது விஷம். பொல்லாதே! என்று உபதேசம் செய்கிறார்கள் இவைகளைப் பற்றி நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

“ஆலைகள் விஷம்தான் ஐயனே! அந்த விஷம் பரவிய இடமாக விளங்கும் தங்கள் தேசத்திலே அதுபற்றிக கொஞ்சம் அழுத்தமாகக் கண்டித்துப் பேசும்” என்று பிரகாசம் காரு கூறினாரா? இல்லை! ஆலைகளிலே ஆடியேன் காந்திதாசனுக்கு ஆணுவளவும் இசை கிடையாது, கதரே ஏன் நோக்கம், அது பரவியதும், இப்போதுள்ள ஆலைகளையும் மூடிவிடுகிறேன் என்று கூறினாராம். ஏன்? அதைத்தான் கொஞ்சம் உங்களை யோசிக்கச் சொல்கிறேன். விஞ்ஞான காலத்திலே, வீட்டுப் பரணையில் இருந்த ராட்டை, கூடத்துக்கு வந்தது ஆச்சரியமில்லை. அதற்குப் பிரச்சாரம் நடைபெறுவது கூட அவ்வளவு ஆச்சரியமில்லை. எல்லாத் துறைகளிலும் புகுந்துள்ள நவீன சாதனங்களைக் கண்டிக்காமல், நெசவு விஷயமாகட்டும் இவ்வளவு கண்டனம் பிறந்ததும் ஆச்சரியமில்லை, இந்த ஆச்சரியங்களைச் சாமான்யமாக்கி விடுகிறது. ஆலை விஷம் என்ற உபதேசத்தை, ஆலைகள் நாளைக்கொன்றாக வளரும் தமது வட்டாரத்திலே செய்யாமல், நமது மாகாணத்துக்கு அவர் செய்வதும், அதன்படியே நடப்பதாக நமது முதலமைச்சர் வாக்களிப்பதும்.
ஆலை அரசர்கள் ஆரசோச்சும் வடநாட்டில், வாழும், காந்தியார், கைராட்டை பற்றிய பிரச்சாரத்தைத் துவக்கிக் கதர்த்திட்டத்தை ஆமுலுக்குக் கொண்டு வர ஆரம்பித்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகின்றன. ஆனால், இதன் பலன் என்ன? நமது மாகாண முதலமைச்சர் கூறிவிட்டு வந்தாரே, புதிய ஆலைகள் அமைக்கமாட்டேன் - பழைய ஆலைகளையும் மூடிவிடுகிறேன் கொஞ்ச நாட்களில் என்று அது போல, ஆலை அரசர்கள் கூறினரா? இல்லை! அவர்கள் வசிக்கும் வட்டாரத்திலே ஆட்சிசெய்யும் காங்கிரஸ் மந்திரிமார்கள் கூறினரா? இல்லை! அகில இந்தியாவுக்கும் சர்க்கார் நடத்தும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் எதிர்காலத் திட்டம் ஆலைகளை மூடுவது என்று கூறினரா? இல்லை! கூறுவரா? கூற மாட்டார்கள்! ஏன்? நவீன சாதனங்களைக் கொண்ட தொழிற்சாலைகளை ஆமைப்பது, அவர்களின் திட்டம், அரசு ஏறுமுன்பே போடப்பட்டது. தேசியத் தொழில் திட்டக் கமிட்டிக்குத் தலைவரே, பண்டித ஜவஹர். அந்தத் திட்டம் நமது மாகாண முதலமைச்சர் வகுத்துள்ள வீட்டுக்கொரு ராட்டைத் திட்டமல்ல, வெளி உலகு இந்த உபகண்டத்துச் செல்வத்தைச் சுரண்டாதபடி பாதுகாத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும். அதற்காகத் தொழில் வளம் பெருகவேண்டும் என்பதாகும் இதற்கான திட்டம் மேனாட்டார் கண்டு பொறாமைப்படக்கூடிய அளவு திறமும் போடப்பட்டிருக்கிறது. இதனைக் காந்தியார் தடுக்கவில்லை - கூடாது என்று கூறவில்லை - கூறாதது மட்டுமல்ல, இடைக்கால சர்க்காரிலே சப்ளை மந்திரியாக இருக்கும் ஆச்சாரியார் சென்ற கிழமை கூறினார் காந்தியார் தொழிற்சாலை வளர்ச்சி முறைக்கு விரோதி அல்ல என்று இந்நிலையில் இந்த மாகாணத்து முதலமைச்சரிடம் ஆலைகள் விஷம் என்று கூறுவானேன். அந்தப் பக்தரும் ஆமாம்! ஆலை வேண்டேன், உள்ளதையும் மூடிவிடுவேன் என்று கூறுவானேன் நாம் திகைப்படைகிறோம் நண்பர்களே, உங்கள் நிலை எப்படியோ!

திகைப்பு, திகிலாகும்படியா புள்ளிவிவரங்கள் நம்மைத் தாக்குகின்றன.

கடந்த இருபதாண்டுகளாக ராட்டைக் கழகம் அமைத்துக் கண்டபலன் என்ன? சர்க்கார் 4 கோடி செலவிட்டுக் கதரை வளர்க்க வேண்டி நேரிடுகிறது. அதுமட்டுமல்ல.

இன்று இந்தியாவிலே சுமார் 407 நெசவாலைகள் உள்ளன. காந்தியாரின் சகாப்தத்திலே, ஆலைகள், இருமடங்கு வளர்ந்துள்ளன. இதோ புள்ளி விவரம், பாருங்கள்.

வருஷம் ஆலைகள்
1876 47
1900 193
1920 253
1943 407

காந்தியாரின் பிரச்சார யந்திரம் 1920 லிருந்து 1943 வரை எவ்வளவு பலமாக வேலை செய்திருக்கிறது. இருந்தும் நிலைமை என்ன? 1920 ஆம் இண்டிலே 253 மில்கள் இருந்தன. 1943 இல் 407 மில்கள் - இன்னும் வளர்ந்தபடி உள்ளன. ஆனால் இவைகள் முக்காலே மூன்றுவீதம், வடநாட்டிலே!

காந்தியார், ஆலை விஷம் கைராட்டையே மக்களைக் காப்பாற்றும் மார்க்கம் என்று இங்குப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, சிங்களத்தில் ஆலைகள் பெருகின என்றால், சிந்தனைக்குச் செந்தேள் வராது, ஆலைகள் பெருகிறது அவர் வாழும் வடநாட்டில், அவருக்குச் செல்வாக்கோ அமோகம் - குருபக்தியின் போக்கு எப்படி இருக்கிற? 1920இல் 253 ஆலைகள் மட்டும் இருந்தன. 1943 இல் காந்தியார் புகழும் செல்வாக்கும் ஓங்கி வளர்ந்தது போலவே, அதனுடன் போட்டியிடும் வேகத்திலும் அளவிலும் ஆலைகளும் வளர்ந்துவிட்டன.

ஆலைகள் எண்ணிக்கையில் பெருகிவிட்டன என்பதற்கு வாதங்கள் தேவை இல்லை. ஈன்னுமோர் புள்ளி விவரம் நிலைமையை மேலும் நன்றாகப் படம் பிடித்துக் காட்ட.

இடைகள், உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் கிடைத்து வந்தன. இதிலே வெளிநாட்டு ஜவுளி அதிகமாக இருந்தால் ஐராளமான செல்வம், சீமை சென்றது. இதனால் நாடு, ஐழ்மைக் கோலம் கொண்டது. சுதேசி இயக்கம் ஆரம்பமாகி, அந்நிய இடை பகிஷ்கரிக்கப்பட்டது. இன்று வெளிநாட்டு ஜவுளி அதிகம் வருவது கிடையாது. உள்நாட்டு இடையே அமோகம். ஆனால், உள்நாட்டு இடை இருவகை அல்லவா! கைத்தறி ஆலைத் துணி, இரண்டிலே, காந்தியத் தத்துவத்தின்படி, ஆலையோ விஷம், தரோ தாரகம், ஆனால், தத்துவத்துக்கும் நாட்டு நடவடிக்கைக்கும் உள்ள தொடர்பைப் பாருங்கள்.

1897 ஆம் ஆண்டு, மக்கள் உபயோகித்த இடையில் 100க்கு 27 பங்கு, உள்நாட்டுக் கைத்தறி தயாரித்தவை, 10 பங்குதான் உள்நாட்டு மில் இடை, மற்ற 63 பங்கும் வெளிநாட்டிலிருந்து இங்கு இறக்குமதியானவை 1941 ஆம் ஆண்டு கணக்குப்படி, வெளிநாட்டு ஜபுளி 100க்கு 7 பங்குதான் வந்தது. அதாவது 100க்கு 63 பங்கு இருந்த வெளிநாட்டு ஜவுளி 100க்கு 7 என்ற அளவுக்குக் குறைந்துவிட்டது - செல்வம் சீமைக்குச் செல்வது தடுக்கப்பட்டுவிட்டது - சந்தோஷப்படவேண்டிய விஷயம். ஆனால், 1897 இல் 63 பங்காக இருந்து 1941 இல் 7 பங்காகச் சீமை ஜவுளி குறைந்ததே தவிர கைத்தறியினால் தயாரான இடையின் அளவு அதிகப்படவில்லை. 1897இல் 100க்கு 27 பங்கு கைத்தறி இடை உபயோகிக்கப்பட்டது, 1941இல் 28 பங்கு! இவ்வளவுதான் முன்னேற்றம். ஆனால், யார் முன்னேறினார்? 1897இல் 100க்கு 10 பங்கு மட்டுந்தானே, உள்நாட்டு ஆலைமூலம இடை கிடைத்தது. அது 1941ல் 100க்கு 64 பங்காகிவிட்டது. அதாவத சீமை ஜவுளியின் இடத்தை ஆலை பிடித்துக்கொண்டது. ஆலைகள் பெரும்பான்மையானவை, வடநாட்டில், அதாவது வடநாடு, சீமையாகி விட்டது. அது வளர்ந்த வகையையும் புள்ளி விவரமாகக் காட்டுகிறோம் பாருங்கள்.

வருஷம் உள்நாட்டுக் உள்நாட்டு வெளிநாட்டு
கைத்தறி ஆலை ஜவுளி

(100க்கு) (100க்கு) (100க்கு)
1897 27 10 63
1920 29 38 33
1932 29 56 13
1941 28 64 7

தத்துவம் தத்துகிறது. ஆலை கொழுத்துவிட்டது! திருப்தியா? இல்லையே! ஏன் இந்த விஷம் இவ்வளவு பரவிற்று? எப்படி முடிந்தது? 100க்கு 63 பங்கு சீமை ஜவுளி வாங்கி வந்த மக்கள், காந்தியார் காட்டிய வழி நட்நது, இன்று அதனை 100க்கு 7 ஆகக் குறைத்துவிட்டனர். காந்தி யாரோ சீமை ஜவுளி கூடாது என்று மட்டும் கூறவில்லை. ஆலைத்துணியே இகாது. கதர் தான் வேண்டும் என்றார். நடந்தது என்ன, கைத்தறி முழுவதுமே (கதர் மட்டுமல்ல) முன்பிருந்த இடத்திலேயே இருக்கிறது, எதை இலகாலம் என்றாரோ அது அவருடைய பக்தர்கள், சீடர்கள், தளபதிகள், கோட்டைக் காவலர்கள் நிறைந்த வடநாட்டிலே, ஓங்கி வளர்ந்துவிட்டது. சீமை, பம்பாய்த் துறைமுகத்தின் வழியாக வந்து இறங்கி, விந்திய மலையைக் கடக்க மனமின்றி, வடநாட்டிலேயே வாசம் செய்கிறது! சரியா? திருப்தியா? சொல்லவேண்டாம், யோசியுங்கள்.

ஆகவே, புள்ளிவிவரம் கூறுகிறது. வெளிநாட்டுக்குப் போய்க் கொண்டிருந்த கோடிக்கணக்கான பணம், இங்கே தங்கிவிட்டது என்பதையும், அந்தப் பணம், ஆலைக்காரர் இடம் போய்ச் சேர்ந்ததையும், வடநாடு ஆலையூர் என்பதையும் இதனை அனைவரும் அறிவர்.

ஆலையூரார், ஆலைகள் மூலம், கோடி கோடியாக இங்குள்ள பணத்தை எடுத்துச் செல்லும், வடநாட்டு முதலாளிகளுடன், மில்தாரருடன் குலவிக்கொண்டு அதுதான் ஆகிம்சை என்றும் கூறிக்கொண்டு, அதேபோது ஆலைகள் விஷம், கதரே கதிமோட்சம் என்ற பேசிக்கொண்டு பிரகாசத்திடம் அதனையே உபதேசம் செய்கிறார், அவரும்,

“ஆலை வேண்டேன் ஐயா?”

உள்ளதையும் மூடிவிடுவேன்
மெய்யாய்!

என்று பாடுகிறார். இது எந்த வகையான நியாயம்? என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
காந்தியாரோ ஆலைகள் இலகாலம் என்கிறார், சர்க்காரும் அதனை இன்று நடத்தும் பண்டிதரும், கொண்டுள்ள திட்டமோ முற்றிலும் வேறு ஆச்சரியம், சீடர்கள் குருவின் திட்டத்தைக் கைவிட்டதுக்குக்கூட அல்ல, குரு, சீடர்களின் பதடடத்தைக் கண்டிக்காது இருப்பதுதான்! அதனினும் ஆச்சரியம். அந்தச் சீடர்கள், குரு உபதேசத்தைப் பிரகாசம்காரு மூலம் நமக்கு அனுப்பிவிட்டுத் தாங்கள் ஆலைகளைப் பெருக்கிக் கொள்வது தான்.

ஆலைகளை விருத்தி செய்யும். நெசவுத் தொழிலின் போக்கை நவீன மயமாக்கவும், இடை உற்பத்தியின் அளவை அதிகரிக்கவும் திட்டமிட்டிருப்பார்கள் - அதற்காவன செய்தும் வருகிறார்கள் 1950-51இல், ஆலைகள் மூலம் 7,200,000,000 கெஜம் துணி தயாரிக்கத் திட்டம் வகுத்து வேலை செய்யப்பட்டுவருகிறது.

பண்டித ஜவஹர்லாலைத் தலைவராகக் கொண்ட தேசியத் தொழில் திட்டக் கமிட்டியும், இதற்கு ஆதரவு தந்திருப்பதுடன் இப்போது மக்கள் உபயோகத்துக்குக் கிடைப்பதைவிட, இரண்டு மடங்கு அளவு துணி இனிக்கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும், என்ற நோக்கத்தைத் தெரிவித்திருக்கிறது. அந்த நோக்கம் உடேறும் முறையிலே நெசவுத் தொழில் வளர வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறது - செவுத் தொழில் வளருவது என்றால் காந்தியார் கூறினாரே, இலகாலம், அந்த ஆலை முறைதான்.

பண்டித ஜவஹர் ஏன்வாரிசு என்கிறார் காந்தியார்.

“வாரிசு” தயாரிக்கும் திட்டமும், காந்தியாரின் ராட்டை மார்க்கமும், ஒன்றல்ல! வேறு வேறு! வேறு வேறு மட்டுமல்ல, முரண்!

மற்ற நாட்டு மக்கள் உபயோகிக்கும் துணி அளவுக்கும், நம் நாட்டு உபயோகத்துக்கும் வித்தியாசம், குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல - விசனிக்கத் தக்கதாக இருக்கக் காணலாம்.