அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்



ஆலையூரார் உபதேசம்!
2
சராசரி வருஷவாரியில்
ஒரு ஆள் உபயோகிக்கும் இடை
அமெரிக்கா 64 கெஜம்
ஸ்வீடன் 38 ”
ஆர்ஜென்டினா 38 ”
டென்மார்க் 34 ”
நியுஜிலாந்து 30 ”
கனடா 28 ”
இஸ்திரேலியா 27 ”
தென் இப்பிரக்கா 33 ”
மலாயா 22 ”
இந்தியா 15 ”

சீமையிலே இருந்து இறங்கினவன் போல ஊடுத்திக் கொள்ள வேணுமோ! என்று கேட்பீர்களே ஏன் சீமைமக்கள் உபயோகிக்கும் துணி அளவு தரவில்லை - வேறு நாட்டின் புள்ளி விவரத்தை மட்டும் தந்திக்கிறோம்.
இப்போது 15 - கெஜம் வருஷ வாரியில்
தேசியத் தொழில் திட்டக் கமிட்டியார், குறைந்தது ஆண்டுதோறும், சராசரி ஒரு ஆளுக்கு 30-கெஜம் துணி கிடைக்கும்படி செய்யவேண்டும் என்கிறார்கள்.

இதற்காக என்ன செய்கின்றனர், வடநாட்டார்? நமது மாகாண முதலமைச்சர்போல, “வீட்டுக்கொரு ராட்டையா” தருகிறார்கள்! நாட்டுக்கொரு கூட்டமாக நிபுணர்களை அனுப்புகிறார்கள், நெசவுத் தொழிலே, என்னென்ன புது முறையான “மெஷின்” கிடைக்கும் என்று பார்த்து வாங்கிவரும்படி அனுப்பியிருக்கிறார்.

இந்தியாவுக்கும் வெளிநாடுகளிலே மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது இடைக்கால சர்க்கார் ஏற்படுவதற்கு முன்பே உண்டாகிவிட்ட நிலைமை. இடைக்கால சர்க்காரையோ அதிலே அங்கம் வகிக்கும் தனிநபர்களின் சொந்தத் திறமை - தகுதியையோ மட்டமாக்கிப் பேசுவதற்காக அல்ல இதனைக் கூறுவது, தனிப்பட்டவர்களின் திறமை - தகுதியாகியவற்றால் அல்ல இந்த மதிப்பு இந்தியாவின் செல்வநிலையும் தொழில் நிலையும் உயர்ந்துவிட்டது - பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே 1500 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியாவிடம் கடன்பட்டிருக்கிறது. எனவே சர்வதேச ஸ்தாபனங்களிலே இந்தியாவைச் சாதாரணமாகக் கருதிவிட முடியாது. இந்தப் புதிய அந்தஸ்தைத் துணையாகக் கொண்டு, வடநாட்டு வியாபாரக்கோமான்கள், நிபுணர்களை எங்கும் அனுப்பி, தொழில் வளத்துக்கான தகவல்களைத் திரட்டி வருகின்றனர். இன்று வடநாட்டு வணிகர்களின் தூதுவர்கள் இல்லாத வெளிநாடே இல்லை. பாக்தாதிலிருந்து பாரிஸ் வரையிலே, நியூஜிலாந்திலிருந்து நியூயார்க் வரையிலே, உள்ளனர். உலகிலுள்ள கோடீஸ்வரர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் - குறிப்பாக - அமெரிக்கக் கோடீஸ்வரர்களுடன், கூட்டுக் கம்பெனிகள் நடத்தும் திட்டம் வலுத்துவருகிறது.

காந்தியார், இங்கு கதர்த்திட்டம், கிராமக் கைத்தொழில் ஆகியவற்றைப் பற்றிப் பேசுவது கேட்டு, இங்கு நூற்றல்போட்டியும், கோழிப் பண்ணை, தேனீ வளர்த்தல் முதலியன நடைபெற்றுவருகற நேரத்தில், வடநாட்டுப் பணக்காரர்கள், மேனாடுகளில் புகுந்து விஞ்ஞானத்தை அழைத்துக்கொண்டு வருகிறார்கள் தங்கள் தொழிலுக்குத் துணைபுரிய.

இங்கு நாமெல்லாம் காந்தியார் கூறுகிறபடி, ராட்டையின் கீதத்தைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த சமயம், காங்கிரசாருக்கு அரசியல் அதிகாரம் கிடைக்காத சமயம். அந்தச் சமயத்தில், அரசியல் இந்தியாவரை அலட்சியப்படுத்திய பிரிட்டன், பொருளாதார இந்தியாவுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தது. பண்டித ஜவஹர் வைசிராய் மாளிகையில் விருந்துண்ணும் முன்னமேயே, இந்தியக் கோடீஸ்வரர்கள் - காங்கிரஸ் அன்பர்கள் - வைசிராயிடம் ஆசிபெற்றுச் சீமைசென்று, அங்கு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் வரவேற்கப்பட்டனர்.

1944 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி, இந்திய யந்திரக் கைத்தொழிலாளர்களின் தூதுக்கோஷ்டி சீமைக்குப் புறப்பட்டது.

டாட்டா,
பிர்லா,
நளினிரன்ஜன் சர்க்கார்,
ஷராப்,
சர். சுல்தான் செனாய்,
லயிக் ஆலி,
ஆஜாய்ப்சிங்
ஆகியோர் கொண்டுத அந்தத் தூதுக்கோஷ்டி. இது கிளம்பும்போது காந்தியார் உட்படப் பலரும, இந்த முதலாளிகள் இந்தியாவைக் காட்டிக் கொடுத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வதற்காகவே போகின்றனர் என்று கொதித்துக் கூறினர். பிர்லா ஒரு மறுப்பறிக்கை விட்டார் - காந்தியார் தமது கோபத்தை மாற்றிக்கொண்டு, தூதுக் கோஷ்டிக்கு ஆசி கூறினார். மே மாதம் மூன்றாவது வாரம் சீமை போய்ச் சேர்ந்தது தூதுக் கோஷ்டி, ஐந்து வார காலம் பிரிட்டனில் தங்கிக், காண வேண்டியதைக் கண்டு, பேசவேண்டியதைப் பேசிவிட்டு, அமெரிக்கா சென்று ஆறு வார காலம் தங்கி, அங்கும் அவசியமான அலுவல்களை முடித்துக்கொண்டு, இந்தியா திரும்பினார். தனிப்பட்ட முறையிலே, எந்தத் தனவந்தனும் இதுபோலப் போகலாம். ஆனால் ஒரு சர்க்காரின் ஆசியுடனும், கோடீஸ்வர்கள் சென்றால், அந்த மதிப்பே வேறுதான் - அது எந்தக் கதவையும் திறந்திருக்கும் - அரசியல், பொருளியல் ஆகிய இரு துறைகளிலும் உள்ள, பல்வேறு நாட்டு முக்கியஸ்தர்களிடம் பரிவுகாட்டிச் சொந்தம் கொண்டாடிப் பேசமுடியும். அது போலத்தான் நடந்தது.

அமெரிக்காவிலிருந்து திரும்பிய தூதுக்கோஷ்டி, தன் ஆபிப்பிராயத்தை ஒரு அறிக்கையாக்கி வெளியிட்டது என்ன அதன் கருத்து? காந்தியப் போதனைக்கு நேர்மாறு!

“வாழ்க்கைத் தரம் உயரவேண்டுமென்று நமது மக்கள் விரும்புகிறார்கள், அது நியாயமான விருப்பம், அதற்காகப் பாடுபடுகிறார்கள், ஆவிசயம் விஞ்ஞான அறிவுதரும் சாதனங்களைப் பெருவாரியாகப் பயன்படுத்திக்கொண்டு, யந்திரங்களைக் கொண்டு நடத்தப்படும் பெரிய தொழிற்சாலை முறையை நாட்டிலே புகுத்தினால்தான். இன்று வறுமையிலும் வாட்டத்திலும் சிக்கி உழலும் மக்கள் சுக வாழ்வு பெறமுடியும் இது எங்கள் ஆழ்ந்த நம்பிக்கை. இப்போது வெளிநாடுகள் போய்த்திரும்பியுள்ளோம். இந்த நம்பிக்கை மேலும் பலமாகிவிட்டதா!!” என்று அறிக்கை வெளிவந்தது, கிராமியத் தொழில்கள், கைராட்டைத் திட்டம், ஆகியவை பற்றி பஜனையே நடத்தும் காந்தியார், தம்முடைய மூலாதாரத் திட்டத்தையே முறியடிக்கும் முறையிலே, முதலாளிமார்கள் வெளியிட்ட அறிக்கையைக் கண்டித்தாரா? இல்லை! ஏன்? அந்தக் கேள்விக்குப் பதில், வேறு கட்சியாளராகிய நாம் கூறுவதைவிட, காந்தியாரின் சொந்தக் கட்சியினரே சிந்தித்துப் பார்த்துக் கூறட்டும் அது தான்முறை.

முதலாளிகள், பம்பாய்த் திட்டம் என்ற பிரம்மாண்டமான பொருளாதாரத் திட்டத்தைத் தயாரித்தனர்.

பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் சென்றனர்.

விஞ்ஞான, ரசாயன, யந்திர முறைகளையும் திட்டங்களையும் பற்றிக் கலந்து பேசினர்.

தொழில் துறையை யந்திரமயமாக்கியேயாக வேண்டும். மக்கள் வாழ்க்கை உயர அதுதான் வழி என்று அறிக்கை விடுத்தனர்.

இயற்கைச் செல்வத்தை. ஈம்முறையில் பயன்படுத்தி, வளத்தையும், வாழ்க்கையும் விருத்தி செய்ய வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கலாம் என்று கூறினார்.

குறிப்பாக 700 கோடி ரூபாய் கடன் வாங்கலாம் என்றனர். அதாவது பிரிட்டன் தரவேண்டிய 1500 கோடி திரும்பிக் கிடைப்பது மட்டும் போதாது மேற்கொண்டு நாமே கடன் வாங்கவேண்டும். 700 கோடி இந்தக் கடனை, அமெரிக்காவிடமிருந்து பெறுவது நல்லது என்றனர்.

இந்தக் கடன் தொகைக்கு நவீனமயமான, விஞ்ஞான சாதனங்கள் அடங்கிய ஆபூர்வமான மந்திரங்களை வாங்கி இந்தியத் தொழிற்சாலைகளுக்கு அமைக்கலாம் என்றனர்.

அவ்விதம் வாங்கும் யந்திரங்களையும், அமெரிக்காவில் வாங்குவது நல்லது என்றனர்.

இவைகளுக்கான திட்டம் தயாரித்துள்ளனர்.

இவ்வளவுக்கும் பிறகு காந்தியார் கூறுகிறார். ஆலை, இலகாலம் அது இகாது என்று அதனையும் நமக்குக் கூறுகிறார்! ஏன்?

அமெரிக்க மார்க்கட்டில் கடன் வாங்கி, அதைக்கொண்டு யந்திரம் வாங்கி, அதைக் கொண்டு இங்குத் தொழிலை விருத்திசெய்ய வேண்டுமென்று முதலாளிமார்கள் கூறும் அதேபோது, அங்கே, அமெரிக்காவிலே உள்ள முதலாளிகள், முன்னேற்றமடையாத நாடுகளுக்கு நாம்தான் முன்னேற்றப் பாதையை வகுத்துத் தரவேண்டும், விடுதலை பெறாத இந்தியாவைக் காண நாங்கள் விசாரப்படுகிறோம். அந்நாட்டுக்கு உதவி செய்ய வேண்டுமென்று எங்கள் உள்ளம் துடிக்கிறது, ஏம்மிடம் உள்ள பணம் வேண்டுமா, தாராளமாகக் கடன் தருகிறோம், இவ்வளவு சிரமம்கூட வேண்டாம், கடன் வாங்குவானேன் திருப்பித் தருவானேன், உங்களுக்குத் தேவையான யந்திரம், நிபுணர்கள், விஞ்ஞான சாதனம் இவ்வளவும் தருகிறோம், பெற்றுக்கொண்டு உங்கள் நாட்டிலே, நீங்களே தொழிலை நடத்துங்கள், நாங்கள், கூட்டாளிகளாக, பங்காளிகளாக இருக்கிறோம். என்று வலிய வலியக் கூறுகின்றனர். எவ்வளவு பரஸ்பரம் பாருங்கள்! கதிரவன் ஊதிப்பதெங்கே, கமலமெங்கே? களித்து மலர்ந்திடுவது காண்கிறோமே. அதுபோல இங்கு முதலாளிகளின் மனம் நாடுவதை, அமெரிக்க முதலாளிகளின் குறிப்பாலறிந்து தந்து உதவ முன்வருகின்றனர். 700 கோடியோடு விடுவதாக இல்லை! எந்தத் தொழிலிலும் பாகம் இருக்கவேண்டும், என்பது அமெரிக்கத் திட்டம்.
இது வெறும் கற்பனையல்ல ஈதோ அதாரம்.

அமெரிக்க, பொருளாதார ஆபிவிருத்திக் கமிட்டியைச் சார்ந்த வெஸ்ட்மோர் வில்காக்ஸ் என்பவர், ஏட்டுமாத காலம் இந்தியாவில் தங்கி இருந்து இங்குள்ள தொழில் முறை, அதன் வளர்ச்சி, தேவைகள் ஆகியவற்றைக் கணக்கெடுத்தார். பிறகு, இந்தியாவிடம் அமெரிக்கா இசை கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றிய பிரச்சாரத்தில் இறங்கினார் “இன்னும் ஒரு பத்து வருஷங்களிலே இந்தியாவுக்கு, ஏன்னதமான இடம் கிடைக்கப்போகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இந்தியாவுக்கு உதவி செய்து அதன் ஆன்பைப் பெறுவதல்லவா முறை” என்கிறார் வில்காக்ஸ், என்ன உதவி? 700 கோடியும், கூடுமானால் அதற்கு மேலும்!

வெளிநாட்டுக்குச் சென்று நமது செல்வத்தை ஐராளமாகக் கொட்டித் தொழில் நடத்துகிறúôம் இலாபத்துக்கு நமக்கு இலாபம் என்று தெரிந்த ஊடனே, உள்நாட்டுக்காரன், அந்நியன் சுரண்டுகிறான், கொள்ளையடிக்கிறான் என்று கிளம்புகிறான், உடைமைக்கும் உயிருக்கும், கீர்த்திக்கும் ஆபத்து ஏற்படுகிறது. நாம் ஏன் வீணாக, ஓடி இடி, வெளி இடங்களிலே, தொழில்களை ஏற்படுத்தித் தொல்லைப்படவேண்டும் யாராவது கடன் கேட்டால் கொடுத்துக் கொண்டு சுகமாக இருக்கலாம், என்ற எண்ணம் ஏற்பட்டது. அமெரிக்கர்களுக்கு முதலில், அந்த ருசி பார்த்தான பிறகு, கடன்கொடுப்பானேன். கூட்டுத் தொழிலே நடத்தலாம். உள்நாட்டுக் காரனையே தொழிற்சாலையைப் பார்த்துக்கொள்ளச் சொல்ல லாம், தொல்லையும் கிளர்ச்சியும் நம்மை ஒன்றும் செய்யாது, இலாபத்துக்கும் குறைவு வராது. செல்வாக்கும் வளரும், என்று இப்போது அமெரிக்கா அதன் போக்கை மாற்றிக்கொண்டது.

இதற்கு அனுகூலமான நிலைமையைக் கண்டறியவே, வெஸ்ட் மோர் வில்காக்ஸ், ஏட்டு மாதம் தங்கி இருந்து இந்தியாவைக் கட்டிக் கரும்பே! கண்ணே மணியே என்று கொஞ்சிப் புகழ்கிறார். இதற்குப் பலன் ஏற்படாமல் போகவில்லை.

“இந்திய விடுதலைச் சங்கம்” என்று அமெரிக்காவில் ஒரு சங்கம் இருக்கிறது. அதற்குத் தலைவராக ஸ்திரீ தரணி என்பவர் இருக்கிறார். அவர், அமெரிக்காவுக்கு இந்திய விடுதலையிலே உள்ள அக்கறையையும் ஆன்பையும் பாராட்டி உருகுகிறார். உருகுவதோடு நின்றாரா? உள்ள விஷயத்தையும் ஜாடையாகக் காட்டுகிறார். “இந்தியா விஷயமாக அமெரிக்கத் தொழிற்சாலை முதலாளிகள் கொண்டிருந்த கருத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். இந்தியாவுடன் நேரடியாக பணம் மூலமாகவும் பொருளாதாரத் துறையிலும் தொடர்பு வைத்துக் கொள்வது இரு நாடுகளுக்கும் நல்லது என்பதைத் தெரிந்து கொண்டுள்ளனர். என்று கூறுகிறார்.

இதன் கருத்து என்ன? இரு இடத்து முதலாளிகளும் ஒப்பந்தத்துக்கு வேலை செய்கிறார்கள், அதற்கு, மக்கள் உழைத்து, கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக்கொண்டு வளர்ந்த தேசிய அந்தஸ்தைப் பலியிடுவது என்று பொருள்.

இதற்கோ நமது உழைப்புப் பயன்படுவது என்று நினைத்து, தேசபக்தர்களின் நெஞ்சம் புண்படுமே என்பது பற்றி முதலாளிகட்கு எண்ணம் ஏன் வரப்போகிறது. அல்லது எந்தக் காந்தியாரின் சீடர்கள் என்று கூறிக்கொள்கிறோமோ, அவருடைய தத்துவத்துக்கு நாமே ஊலை வைக்கிறோமே என்பது பற்றித்தான் அவர்களுக்கென்ன அக்கறை? யாராடமிருந்து என்னென்ன வகையான செல்வாக்கைத் தங்கள் சுயகாரியத்துக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது பற்றித்தானே அவர்களின் சிந்தனை இருக்கும்.

இயற்கை பல பொருள்களை வழங்குகிறது - பயன்படுத்திக் கொள்கிறார்கள். வறுமையின் காரணமாக, மிகக் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர் தொக தொகையாகக் கிடைக்கின்றனர். பயன்படுத்திக் கொள்கிறார்கள். தியாகத் தீயலே நின்று தவித்ததைத் தேசியபலத்தை வளர்த்திருக்கிறார். நாட்டுக்குழைப்போர் - பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேனாட்டு டுகளைப் படித்து, புத்துலகக் கருத்தைப் பெற்றுள்ளனர் அறிஞர்கள் - பயன்படுத்திக் கொள்கிறார்கள். தன்னிடம் உள்ள மலை மலையான நிதியைக் கடனாகக் கொடுக்க அமெரிக்க தயாராக இருக்கிறது - பயன்படுத்திக் கொள்வோம். பிரிட்டிஷ் அமெரிக்க முதலாளிகள், தங்களுடைய செல்வமும் சிதையாமல் செல்வாக்கும் பாழ்படாத விதமாகக் கூட்டுத் தொழில் நடத்த விரும்புகிறார்கள் - பயன்படுத்திக் கொள்கிறார்கள். இங்ஙனம், கிடைக்கும் சக்தி, அவ்வளவையும் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொண்டு பணத்தைக் குவிக்கின்றனர் வடநாட்டு முதலாளிகள்.

1945-இல் மேனாடு போய் வந்ததோடும், நின்றுவிடவில்லை, அவர்களின் வேலை, அந்தக் காரியம் தொடர்ந்து நடைபெற்றும் வருகிறது.

அகில இந்திய உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பிலே, மற்றுமோர் தூதுக் கோஷ்டி கிளம்பிவிட்டது. மீண்டும், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் சென்று, நவீன யந்திர வசதிகளைப் பெறுவதற்கான வழிதேடிக்கொள்ள, இங்குக் காந்தியார், கதர் நூல் இழையிலே இராமர் நர்த்தனமாடுவதைக் காண்கிறார், அவர்களோ, மான்செஸ்டர் நியூயார்க் போன்ற நகர்களிலே உள்ள தொழிற்சாலைகளிலே இயங்கும் யந்திரகளின் ஓட்டத்திலே, அகில உலகையும் இட்டிப் படைக்கும் பணம் இடுவதைக் காண்கின்றனர். 1946 ஜுலை மாதம் 8ந் தேதி இந்தத தூதுக் கூட்டம் சீமை சேர்ந்தது - அங்குப் பார்க்க வேண்டிய அலுவலைமுடித்துக் கொண்டு அமெரிக்கா செல்கிறது. சாமான்களைப் பார்வையிடுவது மட்டுமல்ல இதன்வேலை - பலமுதலாளிகள், சாமான்களை வாங்கிவரும் அதிகாரம் அளித்து அனுப்பி இருக்கிறார்கள். இங்குக் காந்தியார், மாலை பஜனைக்குப் பிறகு கதரின் மேன்மையைப் பற்றி உபதேசித்துக் கொண்டிருக்கிறார். தூதுக்கூட்டம் துரைமார் களுக்கும் மார்வாடிகளுக்கும் சௌஜன்யமான ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளனர்.!

போயிருக்கும் தூதுக் கூட்டத்தின் தலைவர், சர்.ஏம். விஸ்வேஸ்ரய்யர்! இவரே அகில இந்திய உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர். டாட்டா கம்பெனியின் டைரக்டர்.

பாரத் யந்திரக் கருவிக் கம்பெனியின் தலைவராகவும், ஈன்டர்நேஷனல் பாங்க் இப் இந்தியாவின் துணைத் தலைவராகவும், பம்பாய் நூல் மார்க்கட்டை ஸ்தாபித்தவரும், இந்தியச் சர்க்காரின் ஏற்றுமதி இலோசனையில் இருந்தவருமான கோவர்தனதாஸ் சாஹா என்பவரும் இருக்கிறார். வங்காள - பர்மாஸ்கர் நாவிகேஷன் கம்பெனியின் தலைவர் பி.ஏஸ்.ஏஸ். ஹாஜி போயிருக்கிறார்.

பட்டு, செயற்கைப் பட்டு, பீங்கான், மின்சார யந்திரங்கள் ஆகியவற்றின் தொழிற்சாலைகள் பலவற்றிலோ டைரக்டராக உள்ள, வைத்யா சென்றிருக்கிறார்.

கான்பூர் ஆர். ஜீ.பஞ்சாலை டைரக்டர் பி. ரன்ஜித்சிங் தூதுக்கூட்டத்தில் ஒருவர்.

என்ஜினியரிங் சாமான், மின்சார சாமான், போன்ற பலவற்றை உற்பத்தி செய்யும் 14 கம்பெனிகளின் பாகஸ்தராகவோ, டைரக்டராகவோ உள்ள ஸ்ஹன் தாஸ்குப்தா இந்தக் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறார்.

பல, கம்பளி உடை தயாரிக்கும், ஆனால் டைரக்டராக உள்ள, ஹன்ஸ் ராஜ்தாண்டா, கல்கத்தா முதலான ஹாஜி ஹம்தாஜுதமல்லிக், பாரத் தொழிலிலிருந்து சாயக் கம்பெனி வரையில், பல கம்பெனிகளில் டைரக்டராக உள்ள கங்காதர் விஷ்ணுபூ÷வனிக் என்பவர்களும் போயிருக் கின்றனர். இவர்களின் நமது மாகாணத்தின் தொழலிலபிவிருத்தியில் அக்கறை கொண்டவர்கள், யாரிருக்கிறார்கள் இவர்கள் சேகரித்துவரப் போன நுண்ணறிவு அவ்வளவும், நவீன சாதனங்கள் யாவும், யாருக்காக இதனை எண்ணிட மறுப்பது, நாம் வாழும் இடத்தின் எதிர்காலத்தைப் பற்றி எண்ண மறுப்பதாகும். இவர்களெல்லாம், “வீட்டுக்கொன்று ராட்டைத்” திட்டத்துக்காகப் போயிருக்கிறார்கள்!

இங்கிருந்து முதலாளிகள் தூதுக்கூட்டம் போவதுபோலவே அமெரிக்க முதலாளிகள் தூதராக, வெஸ்ட்மேன் வில்காக்ஸ் இங்கு வந்து போனார். இவர், முதல் தடமை முதலாளிகள் 1944 இல் போய்வந்ததற்கும், இப்போது முதலாளிகளின் தூதுவர்கள் 1946இல் கிளம்பியிருக்கிறார்ககளே இதற்கும் இடைக்காலத்தில் வந்தார். இவர் வருவரும் இடைக்கால சர்க்கார் இங்கு அமைவதிலும் ஏறத்தாழ ஒரே சமயமாக இருக்கிறது. இவைகள், ஒரே சங்கிலியின் பல வளைவுகள் என்பது, சங்கிலி பலமாக, நம்மைப் பிணைத்துக் கொண்ட பிறகே தெரியும் முன்கூட்டிச் சொல்லும் நாம் சந்தேகங்களால் கண்டிக்கத்தான்படுவோம்.

அமெரிக்கர் மட்டுமல்ல இங்கு ஆள் அனுப்பியது. பிரிட்டிஷாரும் அனுப்பினர். அரசயில் காரியத்துக்காக சாக்ஸடாபோர்டுகிரிப்சை அனுப்பினார்களே அவருக்கு பிரிட்டிஷ் சர்க்காரில் என்ன வேலை? வியாபார போர்டு தலைவர், இங்கு வருவதற்கு முன்னதாகவே, அவர் பிரிட்டனில், குறிப்பாக லங்காஷயரில் உள்ள நெசவாலைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பன ஆராய்ந்து கூறும்படி ஒரு கமிட்டி நியமித்து அதற்கு முன்பு இந்திய சர்க்காரில் பொக்கிஷ மெம்பராக இருந்த சர்.ஜார்ஜ் ஷ÷ஸ்டர் என்பவரைத் தலைவராக்கினார். உலக மார்க்கட்டில், மீண்டும் லங்காஷயர் எப்படி ஆதிக்கம் செலுத்துவது என்று ஷ÷ஸ்டர் ஒரு ஆராய்ச்சி வெளியிட்டார். அத்துடன் கிரிப்ஸ் அனுப்பி வைத்தார். அவர் பெயர் ஜே. தாம்சன், இவருக்கு இடப்பட்ட வேலை, இந்தியாவுக்கு என்னென்ன வகையான யந்திரங்கள் தேவைப்படும். அவைகளை எப்படி பிரிட்டன் அனுப்புவது என்பது பற்றிக் கண்டறிய வேண்டும் என்பது. அவர் 1945 அக்டோபரில் இந்தியா வந்தார். பம்பாயில் உள்ள தொழிற்சாலை முதலாளிகளுடன் கலந்து பேசினார்.

ஆகவே, பிரிட்டன், அரசியல் பீடத்தில் பண்டிதரை ஆமர வைக்கும் காரியத்தில் மட்டுமல்ல அக்கறை கொண்டது. முக்கியமான அலுவல், முதலாளிகளுடன் கலந்து பேசி, பொருளாதாரத் தொடர்பைச் சரிப்படுத்திச் கொள்வதுதான். அந்தக் காரியம் வெற்றிகரமாக முடிந்ததாலே, காங்கிரசுக்கு டில்லியில் இடமளித்தனர்.