செய்தியாளர்:
பயணம் பயனுள்ளதாக அமைந்தது என நம்புகிறோம்.
அண்ணா: நான் மகிழ்ச்சியில்
அமிழ்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? ஜப்பானில் வணிகத்
துறையினரும் அரசு அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து
ஒத்துழைக்கின்றனர்.
ஜப்பானில் சேலம் இரும்பாலை அமைப்பு பற்றியும், மீன் வளத்திட்டம்
பற்றியும், வேளாண்மைத் திட்டங்கள் பற்றியும் பேசியுள்ளேன்.
இவை பற்றி மைய அரசுக்குத் தெரிவித்து உரிய முடிவு எடுக்கச்
செய்வேன்.
செய்தியாளர்: எவ்வகை ஒப்பந்தத்திலும்
கையெழுத்திட்டீர்களா?
அண்ணா: எவ்வகை ஒப்பந்தத்திலும்
கையெழுத்திடவில்லை. எங்கள் அரசு ஒரு கூட்டாட்சி அரசாகும்.
மைய அரசுக்கு எங்கள் விருப்பத்தைத்தான் தெரிவிக்கலாம்.
செய்தியாளர்:
நீங்கள் இப்போது தனித்
திராவிடநாடு கேட்கவில்லையா?
அண்ணா: (அண்ணா சிரித்துக்கொண்டே)
நான் அந்த முயற்சியைக் கைவிட்டு நெடுநாளாயிற்று. (அண்ணா
இறுதியாகக் கூறியதாவது) தமிழகத்தை இந்தியாவிலேயே தலை சிறந்த
மாநிலமாக்க முடியுமென நம்புகிறேன். இந்திய அரசுக்குக் குந்தகம்
எதுவும் விளையாத வகையில் இக்குறிக்கோளை அடைய முயற்சி செய்வோம்.
(10.05.1968 அன்று ஹாங்காங்கில்
செய்தியாளருக்கு அளித்த பேட்டி)