வடக்கேயுள்ள சில இந்தி மாநிலங்கள்
மும்மொழித் திட்டத்தை மனப்பூர்வமாக நடத்திவைக்கவில்லை. ஆங்கிலப்
படிப்புக்குக்கூட அவை முக்கியத்துவம் தரவில்லை. இதன் விளைவாக
அங்கே ஒரு மொழித் திட்டந்தான் அமல்நடக்கிறது.
தமிழகத்தின் மொழித் தீர்மானம் நாட்டில் நிச்சயம் பிரிவினை
உணர்ச்சியை ஏற்படுத்தாது. ஆனால் இந்தி பேசாத மாநிலங்கள்
மீது அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக இந்தியைத் திணிப்பது
பிரிவினைக்குத்தான் வழிவகுக்கும்.
வினா: தமிழக அரசாங்கம் மும்மொழித்
திட்டத்தை கைவிட முடிவெடுத்துவிட்டதால் கல்விக்காகத் தமிழகத்துக்குக்
கொடுக்கப்படும் மானியங்களைக் குறைக்க மைய அரசு எண்ணியிருப்பதாகச்
செய்திகள் வந்துள்ளன. அவை பற்றித் தங்கள் கருத்தென்ன?
விடை: அது உண்மையாக இருந்தால் பத்திரிகைகள்தான் முன்வந்து
அதை எதிர்க்க வேண்டும்.
(1968 பிப்ரவரி 3-ல் செய்தியாளரிடையே
பேசியது)