வாடிகன் அரண்மனையில் போப்பாண்டவரைச்
சந்தித்தேன். உலக அமைதிக்காக இந்திய சர்க்கார் எடுத்துவரும்
முயற்சிகளுக்குப் போப் பாராட்டுத் தெரிவித்தால்.
சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு மலர் ஒன்றை நான்
போப் ஆண்டவருக்குப் பரிசாக வழங்கினேன்.
இங்கிலாந்து நாட்டிற்கு வருமாறும் எனக்கு அழைப்பு வந்தது
என்றாலும் போதிய நேரிமின்மை காரணமாக இலண்டன் நகர் செல்லாமலேயே
அமெரிக்கா செல்ல வேண்டியதாகிவிட்டது. அநேகமாக ஜுலை மாதத்தில்
இலண்டன் பயணம் மேற்கொள்ள இயலும் என்று கருதுகிறேன்.
மொழிச் சிக்கல் போன்ற தகராறுக்குரிய
பிரச்சினைகளை இன்னும் 25 ஆண்டுகளுக்கத் தள்ளிப் போடுவதுதான்
இந்தியாவின் ஒற்றுமையைக் காக்கும வழி.