அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


துணை அமைச்சர்கள்
(06.03.1967 அன்று செய்தியாளர்கள் வினாக்களுக்கு அண்ணா அளித்த விடை)

வினா: இரண்டாவது அமைச்சர்கள் பட்டியல் இருக்குமா?

விடை: தற்போது இல்லை.

வினா: துணை அமைச்சர்களை அமர்த்தும் எண்ணம் உண்டா? எத்தனை பேர்களை அமர்த்தப் போகிறீர்கள்?

விடை: தற்போதைய அமைச்சரவையைச் சேர்ந்த சிலர் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப் பணிக்குச் சொல்லக் கூடும். அவ்வாறு நேரிட்டால் நிர்வாகத்தை நடத்த இரண்டாகத்தான் துணை அமைச்சர்கள் அமர்த்தப்படுகின்றனர்.

வினா: உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் முதல் கவனம் செலுத்துவீர்களா?

விடை: புதிய அமைச்சரவை உணவுப் பிரச்சினையில் உடனடியாகக் கவனம் செலுத்தும்.

(மூலம: நம்நாடு 07.03.1967)