அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஆட்சிப் பொறுப்பில் அமருவோமானால்....

அறப்போர் வீரர்களிடையே அண்ணா முழக்கம்

இன்று காலை சட்டமன்றத்தின் முன்பு அணவிகுத்துப் பேரணியில் கூடியிருந்த மக்களிடையே அண்ணா அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது –

“நாட்டு மக்களை ஏமாற்றி ஓட்டு பெற்றுக் கோட்டையிலே பெரிய கட்சியாகக் கொலுவீற்றிருந்த கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினர் ஏழை வயிற்றலடிக்கும் வகையில் மடாலய நிலங்களுக்கும், மற்றும் பல நிலங்களுக்கும் விதி விலக்குகறை அளித்து ஊரை ஏய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டிக்கவும் நமது எண்ணத்தை எடுத்துக்காட்டவும் இங்கே பல்லாயிரக்கணக்கில் கூடியிருக்கிற உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

“இன்று, ஊருக்கும், நாட்டுக்கும் உரியவர்களாகிய நீங்கள், வெட்டவெளியிலே உட்கார்ந்திருக்கிறீர்கள். காங்கிரஸ்காரார்கள் கோட்டைக்குள் ‘வெல்வெட்‘ மெத்தையில் கடற்காற்று போதாது என்று மின்சார விசிறிகளுக்குக் கீா அமாந்து கொண்டு ஏழை வயிற்றில் அடிக்கும் சடட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுக்கும் வலிவு, இன்றைய தினம் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. ஆகையினாலேதான் நாம்இங்கே வெளியிலே இருந்து கொண்டு முழங்கினோம்.

நாட்டுக்குப் பெருந் துரோகம்

நாடாள வேண்டியவர்கள் வீதியிலே நிற்கிறீர்கள். வீதியிலே நின்றவர்கள் கோட்டைக்குள்ளிலிருந்து நாடாண்டு கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை நாட்டு மக்கள் அனைவரும் உணராத காரணத்தால்தான் இந்தச் சட்டத்தின் கோரங்களையும், கொடுமைகளையும், உழவர் பாதிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு அவர்கள் ஒன்றுக்கும் உருப்படாத ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நாட்டுக்குப் பெருந்துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையைப் போக்க வேண்டுமானால், 1962இல் வருகிற பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெற்று, வெட்டவெளியில் இருக்கும் உங்களில் பலர் கோட்டையில் போய் உட்கார்ந்து சட்டமன்றத்தில் இந்த முழக்கம் கேட்குமாறு செய்ய வேண்டும். அந்த நிலைமை வருவதற்கு நாட்டு மக்களின் பெருத்த ஆதரவு கிடைக்க வேண்டும்.

கடலலைபோல் ஆரவாரம்

இங்கே நீங்கள் ஏந்தியிருக்கும் கொடி கடற்காற்றிலே வேகமாகப் பறந்து ஆடிக் கொண்டிருப்பதையும் கடலிலே அலை மோதிக் கொண்டிருப்பது போன்று உங்கள் உள்ளத்திலே ஆர்வம் அலைமோதிக் கொண்டிருப்பதையும் அறிகிறேன். இந்த ஆர்வம் இன்று எல்லா மக்களிடத்தும் ஏற்பட்டிருக்கிறது. இன்று இங்கே பலர் தங்கள் அலுவலர்களையெல்லாம் மறந்து வந்து கூடியிருக்கிறீர்கள். உங்கள் பெருந்தன்மைக்கும் ஆர்வத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி நமக்குக் கவலையில்லை, அவர்கள் சட்டத்தைத் தாராளமாக நிறைவேற்றிக் கொள்ளட்டும். ஆனால், உங்களுடைய ஆதரவு எங்களுக்குக் கிடைத்தது. தி.மு.கழகம் ஆளுஙகட்சியைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு, நிலத்தை விடாமல் காபப்ாற்றி வைத்துக் கொண்டு, நிலத்தை விடாமல் காப்பாற்றி வைத்துக் கொண்டிருக்கிறவர்களிடத்திலுள்ள நிலங்களையெல்லாம் நிச்சயமாகப் பறிமுதல் செய்வோம். நிலமில்லாத ஏழைகளுக்கு நலிம் வாங்கித் தருவதில் தி.மு.க. நிச்சயம் ஈடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோட்டையில் அமரலாம்

இன்று உங்களை இதயத்திலிருந்து ஒலி முழக்கம் எழும்பியது. இதயத்திலிருந்து கிளம்பும் எந்த முகுக்கமும, அப்படி முழங்கியவர்களை ஒரு காலத்தில் தீயே தீரும். இது உலகம் ஒப்புக் கொண்டுள்ள வரலாற்று உண்மை.

நாடாளப் பிறந்தவர்களே, நீங்கள் வீடு திரும்புங்கள், இன்று நாடாளும் அக்கிரமக்காரர்களை, பிற்போக்காளர்களை முறியடிக்கவும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வர முடியாதபடியும் அடுத்த தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறச் செய்வீர்களேயானால், இன்று சட்டமன்றத்திலே எந்தச் சட்டம் இயற்றப்பட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

சட்டமாக்க உதவ வேண்டும்

ரோம் நாட்டில் கிரேக்கஸ் என்னும் இரு சகோதரர்கள் ஏழைகளுக்கு நிலத்தைப் பிரித்துக் கொடுக்க அநத் நாட்டு செனட் சபை முன்பு இப்படித்தான் ஒரு கூட்டம் நடத்தினார்கள். வரலாறு படித்தவர்கள் படித்ததை மறக்காதவர்கள் அதை இன்று உணர்வார்கள்.

அதைப்போல இன்று கூடியிருக்கிற நீங்கள் நாளை நமது எண்ணத்தைச் சட்டமாக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 16.9.61)