அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பம்பாயில் அண்ணா – கோலாகல வரவேற்பு

அறிஞர் அண்ணா அவர்கள் 9.12.61 நண்பகல் 1.20 மணிக்கு நம் குழுவினருடன் பம்பாய் – சையன் எல்லையில் கோலாகலமாக வரவேற்கப்பட்டார். 3 மணியளவில் செய்தியாளர்களைக் கண்ட கொள்கை விளக்கம் தந்தபின். 5 மணியளவில் பாந்திரா தி.மு.கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

மாலை 6.20 மணிக்குத் தாராவி – மகிம் இரயிலடியில்ருந்து ஈட இணையற்றதோர் ஊர்வலம் புறப்பட்டு மகிம், தாராவி, சயன, மாதுங்கா வழியாக நப்பூ திடல் அடைந்தது.

இதுவரை நப்பூ திடல் கண்டிராத கூட்டம் திராவிடத்தின் தலைவர் தம் உரை கேட்கக் குழுமியிருந்தது.

நிதியளிப்புக் கூட்டத்தில் தேர்தல் நிதிக்காக, மத்தியக் குழுப் பொருளாளர் தோழர் அ. வள்ளிநாயகம் அவர்களால் ரூ.6100 (ஆறாயிரத்து நூறு) அளிக்கப்பட்டது.

அண்ணா அவர்கள், தம் உரையில் தென்னவர்தம் வீர வரலாற்றினையும், வாழ்ந்த வகையையும், வீழ்ந்த விதத்தையும் வாழவேண்டிய வழிவகைகளையும் எடுத்தியம்பினார்.

அதன் பின்னர் ஆமதாபாத் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள, 10.12.61 காலை விமான மூலம் பயணமானார். காஞ்சி சி.வி.இராசகோபால் அவர்களும் உடன் சென்றார்கள்.

நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாகவும் இதுவரை எந்தத் தென்னகத் தலைவருக்கும் நடந்திராத வகையிலும் அமைந்திருந்தது. அண்ணா அவர்கள் 12.12.61 காலை விமானத்தில் சென்னைக்குப் பயணமானார்கள்.

11ஆம் தேதி பல்வேறு கிளைகளைப் பார்வையிட்டார்கள்.

(நம்நாடு - 15.12.61)