இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான்
மெத்த மகிழ்ச்சி அடைகின்றேன். உங்களை எல்லாம் பாராட்டிவிட்டுப்
போகலாம் என்பதற்காக மட்டும் நான் வரவில்லை. இச்சமூகப் பணிப்பள்ளியின்
அமைப்பாளர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துச் செல்லவும்
வந்திருக்கிறேன்.
கிளப்வாலா ஜாதவ் அம்மையாரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நிறுவனம்
சீரிய முறையில் செயல்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
நாட்டின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கும் பொறுப்பு இளைய
தலைமுறையினருக்கு உண்டு. சமுதாயப் பணிகளிலும் தொண்டுகளிலும்
இளைஞர்கள் காட்டும் அக்கறையும் மேற்கொள்ளும் பொறுப்புகளும்
நாட்டின் வாழ்வை மலரச் செய்யும்.
சமுதாய சீர்திருத்தம் வேறு சமூகச் சேவை வேறு சமுதாயச் சீர்திருத்தம்
சில எதிர்ப்புகளைத் தேடித்தரும். ஆனால் சமூகச் சேவை அப்படிப்பட்டதல்ல.
நம் நாட்டு மீது விடுக்கப்பட்டிருக்கும் அறைகூவலை எதிர்த்துப்
பணியாற்றுவதில் இளைஞர்களுக்கு முக்கிய இடமுண்டு.
நம்முடைய நாடு பிற்பட்ட நாடல்ல. தனிப்பட்ட வீறுடைய நாடாக
விளங்குகிறது. தத்துவத்தில் சிறந்த நாடாக உள்ளது. இருந்தாலுங்கூட
இங்குக் கல்லாமையும் அதிகமாக இருக்கிறது.
மருத்துவத்தில் சிறந்த அறிவாளர்கள் இங்கே இருக்கிறார்கள்.
இருந்தாலுங்கூட இங்குக் கல்லாமையும் அதிகமாக இருக்கிறது.
மருத்துவத்தில் சிறந்த அறிவாளர்கள் இங்கே இருக்கிறார்கள்.
இருந்தாலுங்கூட இங்கே தவிர்க்க முடியாத பிணிகளும் உண்டு.
நல்ல உற்பத்தியும் உண்டு. இருந்தாலும் கூட பங்கீட்டு முறையும்
இருக்கிறது.
இப்படி எதில் எடுத்தாலும் ‘இருந்தாலுங்கூட’ என்ற சொல்லும்
நிலையில் நாடு உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
விருப்பமான துறைகளில் ஈடுபடவிருக்கும், பட்டம் பெற்ற மாணவர்கள்
தங்களது சமூகச் சேவையை எங்கிருந்தாலும் செய்ய வேண்டும் எனக்
கேட்டுக் கொள்கிறேன்.
(21-4-67 அன்று சென்னைச் சமூகப் பணிப்பள்ளியின்
பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரை)