அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


குஜராத் தலைநகரில் அண்ணா

அறிஞர் அண்ணா அவர்களும், சி.வி.இராசகோபால் அவர்களும், ஆமதாபாத் தி.மு.கழகச் சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள 10.12.61 காலை 8.10 மணியளவில் வானூர்தி மூலம் பம்பாயிலிருந்து ஆமதாபாத் வந்தனர்.

அண்ணா அவர்களையும், சி.வி.இராசகோபால் அவர்களையும், ஆமதாபாத் மத்தியத் தி.மு.க. செயலாளர் இரா. தணிகாசலம் மலர்மாலை அணிவித்து வரவேற்றார்.

அண்ணா அவர்களை வரவேற்க ஆமதாபாத் மத்தியக் கழக அவைத் தலைவர் நா. முனுசாமி துணைச் செயலாளர் பெ.இலக்குமணன், சமால்சூர் கிளை அவைத் தலைவர் நா.தேவராசனார், மணிநகர் கிளைச் செயலளார் வை.ஆறுமுகம், நரோடா கிளைச் செயலாளர் கு.சிதம்பரம், பாப்பு நகர் கிளைச் செயலாளர் ராணா, தமிழ்ஒளி, அழகிரி நாடக மன்றச் செயலாளர் நா.பாஸ்கரன், எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் சு.கிருஷ்ணன், தொண்டர் படைத் தலைவர் ச.சந்திரன் மற்றும் தோழர்கள் பொ.இரத்தினவேலன், பொ.தில்லைக்கோவிந்தன், பொ.சண்முகம், கி.சண்முகம், எஸ்.வேலாயுதம், எஸ்.பச்சையப்பன், சா.ஆறுமகனார், மு.சாமிதுரை, எஸ்.கண்ணாமணி, வே.அருளப்பப், வெ.நாகராசன், இரா.நடராசன், கு.பாலசுந்தரம், திருவேங்கடம், கரிகாலன் மற்றும் ஏனைய கிளைகளின் நிர்வாகிகளும் 1000க்கு மேற்பட்ட கழகத் தோழர்களும், பெரியோர்களும் 100க்கு மேற்பட்ட தாய்மார்களும் விமான நிலையத்திற்கு வந்திருந்தன். அண்ணா வாழ்க, திராவிடநாடு திராவிடருக்கே என வடவர்கள் திகைக்கும் வண்ணம் முழங்கினர். வானூர்தி நிலையம் விழாக் கோலம் பூண்டிருந்தது.

காலை 10.30 மணிக்கு அண்ணா அவர்கள், ஆங்கிலி, குஜராத்தி செய்தி இதழ்களில் நிருபர்கள் கூட்டத்தில கலந்து கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கைகளையும் கழகம் பொதுத் தேர்தலில் பங்குகொள்ளும் குறிக்கோள்களையும் தெள்ளத் தெளிவுற விளக்கினார்கள்.

மாலை 5 மணிக்குக் காங்கரியா திரு.வி.க. திடலில் ஆமதாபாத் தி.மு.கழகச் சிறப்புக் கூட்டம் துவங்கியது. கழக அவைத் தலைவர் நா. முனுசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திரு.ஆறுமுகனார் தலைமை வகித்து, பதினொரு ஆண்டுக்கால ஆமதாபாத் கழக நிலையினைத் தெளிவாக விளக்கினார்.

அடுத்து, ஆமதாபாத் தி.மு.கழகச் சார்பில் அமைந்த தேர்தல் நிதிக்குழுச் செயலாளர் திரு.பொ. தில்லைக் கோவிந்தன் அவர்கள், தேர்தல் நிதிக் குழுவினர் வசூலித்த ரூ.3,356.84 கொண்ட பணமுடிப்பை மத்தியக் கழகச் செயலாளர் இரா. தணிகாசலம் அவர்களிடம் அளித்தார்.

நிதியினைப் பெற்றுக் கொண்ட மத்தியக் கழகச் செயலாளர் தேர்தல் நிதிக் குழுவினருக்குக் கழகச் சார்பில் நன்றி தெரிவித்து, இச்சீரிய முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்த பொதுமக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் நன்றி தெரிவித்து, தேர்தல் நிதிக் குழுத் தலைவர் சா.ஆறுமுகனார், செயலாளர் பொ.தில்லைக் கோவிந்தன், பொருளாளர் ஆர்.வி. சுந்தரம், துணைச் செயலாளர்கள் சி.ஆறுமுகம், வெ.நடராசன், கு.பாலசுந்தரம், பொ.இலக்குமணன் ஆகியோருக்குக் கைத்தறி ஆடைகள் அணிவித்துப் பாராட்டினர்.

மணி நகர்க் கிளை சார்பில் செயலர் வை.ஆறுமுகம் அண்ணா அவர்களுக்கும் சி.வி.இராசகோபால் அவர்களுக்கும், மலர்மாலை அணிவித்து தேர்தல் நிதியாக ரூ.10 அளித்தார்.

நரோடா கிளைச் செயலாளர் கு.சிதம்பரம், பாப்புநகர் கிளைச் செயலாளர் ராணா, தமிழ்ஒளி ஆகியோரும் மலர்மாலை அணிவித்தனர்.

அழகிரி நாடக மன்றச் செயலாளர் எஸ்.திருவேங்கடம் மலர்மாலை அணிவித்து, தேர்தல் நிதியாக ரூ.101 அளித்தார்.

எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் க.கிருஷ்ணன் மலர்மாலை அணிவித்து தேர்தல் நிதியாக ரூ.51 அளித்தார்.

நரோட ரோட் அசோக் மில் தொழிலாளர்கள் சார்பில் என்.கண்ணன் மலர்மாலை அணிவித்து, 2001 புதுக்காசுகள் அளித்தார்.

தோழர் ச.கண்ணாமணி மலர்மாலை அணிவித்து தேர்தல் நிதியாக ரூ.201 அளித்தார்.

கட்டபொம்மன் நாடக மன்றச் சார்பில் தோழர் எல்.கோதண்டம் மலர்மாலையும் கைத்தறி ஆடையும் அணிவித்தார்.

தோழர் சி. கிருஷ்ணன் மலர்மாலை அணிவித்து 101 காசுகள் அளித்தார்.

நரோடா விஜயமில் தொழிலாளர் சார்பில் எஸ்.முத்தையா மலர்மாலை அணிவித்துத் தேர்தல் நிதியாக 1001 புதுக்காசுகள் அளித்தார்.

சபர்மதி பகுதி எம்.பி.மயில்மாலை அணிவித்தார்.

சௌராஷ்டிரா தமிழ்மக்கள் சார்பில் வீ.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து 2105 காசுகள் அணிவித்தார்.

மணிநகர் கே.வெங்கடேசன் உண்டியல் அளித்தார்.

வைரம் அச்சகம் சார்பில் வைத்தியநாதன் மாலை அணிவித்தார்.

தோழர் இராசமாணிக்கம் 20 காசுகள் அளித்தார்.

கட்டபொம்மன் கே. சுந்தரம் மலர்மாலையும், கைத்தறி ஆடையும் அணிவித்தார்.

சில்க் மில் தோழர்கள் சார்பில் எம். அருணாசலம் மாலை அணிவித்து 400 காசுகள் அளித்தார்.

மணிநகர் ர. கோவிந்தராசு 501 காசுகள் அளித்தார்.

தென்னாற்காடு மாவட்டம் சி.என். பாளையம் தோழர் சி.அப்பாவு அண்ணா அவர்களுக்கு வெள்ளிப் பொடி டப்பி அளித்தார்.

சோக்காரா என். அருணாசலம் மாலையும், கைத்தறி ஆடையும் அணிவித்தார்.

சு. நரசிம்மன் கலைக்குழு சார்பில் கு. சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

சமால்பூர் கே. காளிதாசன் மாலை அணிவித்தார்.

நா. தேவதாசனார் மாலையணிவித்து உண்டியல் அளித்தார்.

கலிகோ மில் தொழிலாளர் சார்பில் எஸ்.வேலாயுதம் மாலை அணிவித்து 525 காசுகள் அளித்தார்.

மேலும் தோழர்கள் கே. இராசமாணிக்கம் ரூ.8, பி்.குப்பன் ரூ.1, கட்டழகன் ரூ.1, பாப்புநகர் இராமானுசம் ரூ.10 மணிநகர் நாராயணசாமி ரூ.2, த.காளிதாசன் ரூ.1, மொத்திநகர் பாலகிருட்டிணன் ரூ.10, கு.கண்ணன் ரூ.5, கே.இராமானுசம் ரூ.1, ப.நடராசன் ரூ.1, பாப்புநகர் மு.தனபால் ரூ.10, பெரியசாமி ரூ.1. மணிவாளன் 103 காசுகள், எம்.மாரியப்பன் 308 காசுகள், எ. இராமநாதன் 102 காசுகள். எஸ்.செய்யக்கண்ணு 70 காசுகள், கே.செயராமன் 101 காசுககள், எஸ்.சுப்பிரமணி 501 காசுகள் அளித்தனர்.

அண்ணா அவர்கள் பல குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினார்கள்.

ஆமதாபாத் திராவிட முன்னேற்றக் கழகச் சார்பில் செயலாளர் இரா.தணிகாசலம் அவர்கள் அண்ணா அவர்களிடம் ரூ.4,810.62 கொண்ட பணமுடிப்பை பலத்த கையொலிக்கிடையே அளித்தார்.

பின் காஞ்சி நகரமன்ற உறுப்பினர் திரு.சி.வி.இராசகோபால் அவர்கள் தமிழகத்தில், கழக வளர்ச்சியினையும், காங்கிரசுக்காரர்கள் நமக்கு ஏற்படுத்தி வரும் இடையூறுகளையும் தெளிவாக விளக்கிப் பேசினார்.

அடுத்து பலத்த கையொலிக்கிடையே அண்ணா அவர்கள் அரியதோர் உரையை நிகழ்த்தினார்.

தலைவர் முடிவுரையுடன் கூட்டம் இரவு 8.45 மணிக்கு முடிந்தது.

(நம்நாடு - 21.12.61)