அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


'இந்தியர்' ஆகின்றனர்! (2)
4

தம்பி! நடைபெற்ற கூட்டங்கள் போதும் என்று கூறவில்லை - இன்னும் நடைபெற வேண்டும் - ஒரு குக்கிராமம்கூட விடுபடாமல்! ஆனால் நடைபெற்ற கூட்டங்களில் பேசப்பட்டவை வெற்றுரை, நம்மைவிட்டுப் போனவர்களின் பேச்சே, பேருரை என்றா கருதுவர்! பேதைக்கு, வாராதே அந்தப் பித்தம்!

விளக்கம் உரைத்தனர் - மறுப்புக்கு மறுப்புரைத்தனர் - மனமருள் போக்கினர் - வரலாறு காட்டினர் - ஆதாரம் கூறினர் - இனப் பண்புபற்றி எடுத்தியம்பினர் - வடவர் ஆதிக்கம்தனைக் காட்டிக் கண்டித்தனர் - ஐந்தாண்டுத் திட்டங்களிலே காணப்படும் ஓரவஞ்சனையையும், அயல்நாட்டுக் கொள்கையிலே உள்ள குழப்பத்தினையும், வெளிநாட்டுக் கடன் பளு ஏறுவதையும், வரிச்சுமையால் மக்கள் படும் அவதியினையும், விலைவாசி விஷம்போல் ஏறுவதனையும், வேலையற்றோர் தொகை பெருகி வருவதையும், இலங்கைத் தமிழர் படும் அவதியினையும், அது குறித்து நேரு சர்க்கார் அக்கறையற்றுக் கிடப்பதையும், ஊழல் நாற்றமடிப்பதனையும், ஊர் கெடுப்போருடன் அரசு உறவாடிக்கிடப்பதையும், கள்ளச் சந்தை இருப்பதையும், அவரிடம் காங்கிரசு பணம் பெற்று தேர்தல் நிதி திரட்டுவதையும், இன்னோரன்ன பிறவற்றையும் எடுத்துரைத்தனர் நம் தோழர்! இவ்வளவும் மண்ணாகித்தான் போகும், ஏனெனில் மாமேதை உமைவிட்டுப் பிரிந்தாரே என்று பேசுவது, இந்நாட்டுக் காங்கிரசார்! எமைவிட்டுப் பிரிந்தப் பிறகுதானா, அவர் உமக்குக் கரும்பானார்! சாரு பருகியபின், சக்கையை வீசுதல்போல, வாய் கிளறி மொழி வாங்கி, பின்னர் வீழ்த்திடுவீர், யாரறியார்!! - என்றன்றோ கேட்கத் தோன்றுகிறது, ஏசித் திரிந்திடும், காங்கிரஸ் தலைவர்களை.

இத்தனை கூட்டங்களில் பேசியோர், பலப் பலர்; அவர்தம் பெயரெல்லாம் அறிந்தெடுத்துக் கூறிடவோ நேரம் எனக்கில்லை; நம் ஏடும் எல்லாம் தருவதாக அமையவில்லை; எனவே, விடுபட்டுப் போயிருக்கும் சில பலரின் பெயர்கூட; தவறாக எண்ணற்க; குறைகாணின் திருத்திடுக; என்னால் முடிந்தமட்டும், இந்தக் கூட்டமதில் பேசி, நம் கொள்கைக்குப் பேராதரவு திரட்டிய தோழர்களின் பெயர் உரைப்பேன் - கேட்டுச் சிந்தித்திடுக; இவர் கூறும் வார்த்தையெல்லாம், வீணாகியா போகும் - விவேகிகள் சிலருக்கு அப்படியன்றோ ஓர் அற்ப ஆசை அலைமோதிக் கிடக்கிறது. கொள்கை அறிந்தவர்கள், விளக்கும் ஆற்றல் பெற்றவர்கள், வரலாறுதனைப் படித்து வகையான அறிவு கொண்டவர்கள், ஆராய்ந்து பார்த்ததனால் அரும் உண்மை கண்டவர்கள், இந்நாடு முன்னம் இருந்த நிலைதனை இலக்கியம் காட்டிட, கண்டு களிப்புற்றவர்கள், அவரெல்லாம் செல்கின்றார், அறிவுடன் ஆர்வம் காட்டி, கொள்கை பரப்புதற்கு! அணி என்ன, அழகென்ன, ஆதார வகையென்ன, நடையின் மிடுக்கென்ன என்றெல்லாம் பேசி, நாட்டினர் பாராட்டுகின்றார்.

இவர் அளிக்கும் உரைகளுக்கு இல்லாத ஓர் ஆற்றல், நம்மை விட்டுப் போனவர்க்கு உண்டென்றா, நாடு சொல்லும்? செச்சே! நாடென்ன, நல்லதிது கெட்டதிது, என்றறியா மக்களுள்ள இடமா? இல்லையே! இயற்கையாய் அமைந்துள்ள அறிவுள்ள மக்களன்றோ இருக்கின்றார் இந்நாட்டில். அவர்க்கு இலட்சியத்தை அறிவித்து ஆதரவு திரட்ட, அரும்பணி ஆற்றினோரில், ஒரு சிலரின் பெயர் மட்டும் கூறுகிறேன். என் குறையால் விடுபட்டுப்போன பெயர் கூட்டி, பட்டியலைச் சரியாக்கும் பொறுப்பு உனக்குத் தம்பி!

அன்பழகன்
கே. ஏ. மதியழகன்
ஆனந்தன்
இரத்தினவேல் பாண்டியன்
சந்தானம்
மதுரை முத்து
செழியன்
பி. எஸ். மணி
இரா. சாம்பசிவம்
மதுரை சந்தானம்
இளம்வழுதி
காவேரி மன்னன்
தில்லை - வில்லாளன்
சாதிக் பாட்சா
அரங்கண்ணல்
பெரியகுளம் அனிபா
டி. கே. சீனிவாசன்
உடுமலை நாராயணன்
வி. எஸ். கோவிந்தராசன்
எஸ். ஏ. இராசமாணிக்கம்
அ. பொ. அரசு
குமாரபாளையம் சுப்பிரமணியம்
அப்துல் காதர்
ஈ. ஆர். கிருஷ்ணன்
சிவசங்கரன்
வெங்கடாசலம் (கிருஷ்ணகிரி)
கோ. சு. மணி
கமலநாதன்
டி. எம். பார்த்தசாரதி
ஜி. பி. சோமசுந்தரம்
டி. கே. பொன்னுவேலு
ஏ. எல். சி. கிருஷ்ணசாமி
சிட்டிபாபு
என். வி. நடராசன்
இராசாராம்
ஆம்பூர் சம்பங்கி
கே. ஆர்.
இராமசாமி
தம்பிதாசன்
இளவரசு
பவளவண்ணன்
எஸ். டி. சோமசுந்தரம்
கருணாகரன்
காஞ்சி கலியாணசுந்தரம்
சித்தூர் கேசவன்
இரா. நெடுஞ்செழியன்
நரசிம்மன்
டி. வி. நாராயணசாமி
எர்ரய்யா
எஸ். எஸ். இராஜேந்திரன்
மீஞ்சூர் கேசவன்
எம். ஜி. இராமச்சந்திரன்
பெங்களூர் சோழன்
சி. வி. எம். அண்ணாமலை
திராவிடமணி
கே. டி. எஸ். மணி
சத்தியவாணி முத்து
சி. எஸ். பூஞ்சோலை
எஸ். வி. பதி
மா. கி. தசரதன்
உசேன்
சி. வி. இராசகோபால்
சகாதேவன்
தி. சு. கிள்ளிவளவன்
டி. சீனிவாசன்
துணைமேயர் செல்வராசன்
இரா. வெங்கடேசன்
மு. கருணாநிதி
சரசுவதி
வெங்கடேசன்
முனு - ஆதி
வேலம்மையார்
தி. ந. சம்பந்தம்
சேலம் மெய்யப்பன்
கொளத்தூர் கோதண்டம்
முருகேசன் (அரூர்)
காசிவிசுவநாதன்
எஸ். முருகேசன்
வெங்கா
அன்பில் தருமலிங்கம்
வளையாபதி
முத்துகிருஷ்ணன்
எம். எஸ். மணி
டி. கே. கபாலி
திருவண்ணாமலை முருகையன்
சா. கணேசன்
எம். பி. சாரதி
பொன்னிவளவன்
அழகமுத்து
கருத்தோவியன்
ப. உ. சண்முகம்
நெடுஞ்செழியன்
பராங்குசம்
சிற்றரசு
ராவி
முல்லை வடிவேலு
ஷெரிப்
முல்லை சத்தி
நெடுமாறன்
மதிவாணன்
இரா. தர்மலிங்கம்
வி. வி. சாமிநாதன்
காமாட்சி
பொன் சொக்கலிங்கம்
எம். எஸ். வெங்கடாசலம்
பாலகுருசாமி
மதுரை சீனி
வி. கிருஷ்ணமூர்த்தி
குளித்தலை முத்துகிருஷ்ணன்
எம். எஸ். சிவசாமி
இளமுருகு பொற்செல்வி
ஜோசப்
பொற்செல்வி இளமுருகு
தொ. ப. சீனிவாசன்
எம். எஸ். இராமசாமி
வ. குமாரசாமி
தென்னரசு
சைதை. சம்பந்தன்
பில்லப்பன்
கே. ஏ. கிருட்டினசாமி
அன்புரோசு
கோபால்
சடகோபன்
காஞ்சி மணிமொழியார்
அன்புக்கரசன்
மன்னை நாராயணசாமி
அறிவுடைநம்பி
பத்மநாபன்
டி. சபாபதி
கோ. சி. மணி
போரூரான்
கே. மனோகரன்
இராசரத்தினம்
இராதா
எத்திராசு
ஏ. கோவிந்தசாமி
கே. எம். இராசகோபால்
சேலம் ஜெயராமன்
குடவாசல் கிருட்டிணமூர்த்தி
கே. எஸ். அமிர்தம்
கிட்டப்பா
போளூர் சுப்பிரமணியம்
வையாபுரி
அறந்தாங்கி துரையரசன்
தங்கமுத்து
ஆரணி எத்திராசன்
சுந்தரராசன்
ஏழுமலை
பட்டு
கரிகாலன்
பெத்தண்ணன்
திண்டிவனம்
தங்கவேலு
சென்னை சு. பாலன்
மதுரை மாதவன்
ஏ. பி. ஜனார்த்தனம்
அறிவொளி
சி. ஆர் பாலசுந்தரம்
இராமானுசம்
காஞ்சி ராசாராம்சா
பேராவூரணி அடைக்கலம்
வந்தவாசி அண்ணாமலை
எம். கிருஷ்ணமூர்த்தி
எஸ். கே. ரசாக்
ஜி. எம். இஸ்மாயில்
அப்துல்
டாக்டர் விஜயராகவன்
குத்தூஸ்
ஜமால்
அப்பாஸ்
கோவை இராமநாதன்
அன்சார்
பாலகிருஷ்ணன்
டி. கே. சிவகுமரன்
ஜகந்நாதன்
ஏ. எம். ஏ. ரகீம்
என். அசோகன்
கோபி. இராசு
ஆசைத்தம்பி
கரிவேங்கடம்
கோ. செங்குட்டுவன்
அகிலன்
டி. என். கிருஷ்ணன்
கே. ஆர். சபாபதி
ஏ. எஸ். வேலு
அழகிய நம்பி
அலமேலு
அப்பாதுரை
எட்மண்ட்
செ. கோ. பலராமன்
என். வி. என். சோமு
இளங்கோவன்
முத்துக்கலிங்கன்
ஆடலழகன்
மலையரசன்
அழகிரிசாமி
அறிவழகன்
பொன். தருமன்
நீலநாராயணன்
காட்டூர் ராமைய்யா
துரைக்கண்ணு
பி. ஆர். கோகுலகிருட்டிணன்
வேதாசலம்
கே. பெரியசாமி
ஜேசுபாதம்
தமிழ் அழகன்
கே. எம். கண்ணபிரான்
தனக்கோடி
ஞானமுத்து
சபாஸ்டியன்
தனபால்
கோ. துறவி
துரை
கமால் பாட்சா
கபாலமூர்த்தி
இஸ்மத் பாட்சா
அரங்கநாதன்
யூசூப்தீன்
ஜேவியர்
சாவித்திரி
சபாபதி
ஆலடி - அருணா
மயிலை வேலு
தென்னவன்
உடுமலை கோவிந்தசாமி
மேத்தா
மயிலை மாறன்
விமலாதித்தன்
மாசிலாமணி
டி. ஜே. நாதன்
முகம்மது அலி
காட்டூர் கோபால்
என். டி. ஏ. சமது
திராவிடமணி
சந்தப்பன்
கந்தப்பன்
முத்தீசுவரன்
கலியமூர்த்தி
பி. சிவாநந்தம்
பால்ராசன்
இளஞ்சேரன்
கு. கணபதி
கு. சுல்தான்
ஈரோடு பெருமாள்
பி. காதர் மொய்தீன்
எம். கிருட்டிணன்
தமிழ்ச்செல்வன்
புஞ்சைப்புளியம்பட்டி சாமிநாதன்
தஞ்சை அன்சாரி
வெ. சம்பந்தன்
நயினா முகமது
ஈ. எம். அனீபா
சாகுல் அமீது
எம். செல்வராஜ்
முகமுது கனி
சி. நடராஜன்
பட்சிராசன்
பூ. சின்னசாமி

இவ்வளவு இருக்க ஏனண்ணா! கவலை உனக்கு என்றுதானே தம்பி! கேட்கின்றாய். ஆமாம், தம்பி! அரும் பணியாற்றி என்னை அகமகிழவைப்பதற்கும், தகும் செயலாற்றி நமது தாய்நாட்டை மீட்பதற்கும், இத்துணை வீரர் இங்கு திரண்டெழுந்து நிற்குங்காலை, என்னையும் பிரிந்து இந்த ஏற்புடைக் கழகம் விட்டேகி, கொள்கையும் துறந்து கோலோர் குதூகலம் கொள்ளும் வண்ணம், கடுமொழி பேசுவோரின் போக்கினால், இனிக் கவலைகொள்ளேன்; கழகமே நமக்குக் காப்பு; நாமதன் காவலர்காண்; நமக்கினி உள்ள வேலை, மிகுதியாய் வளர்ந்தது; நாம் அதற்கேற்ப, தொண்டு ஆற்றியே நிற்போம்; இந்தியர் ஆகவேண்டி இனம் விட்டும் மாற எண்ணும் போக்கினர், பொன் பொருள் பலவும் பெற்றுப் பூரித்துக் கிடக்கட்டும், தம்பி! எலும்பும் தோலுமாக நாம் இளைத்திடுவ தேனும் உழைத்திட அஞ்சோம்; இஃது உறுதி, உறுதி என்றே எழுப்புக முழக்கம்; இகல் வெல்வோம், இன்னுயிர் போவதேனும்.

அண்ணன்,

28-5-61