அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நாம்
5

காங்கிரஸ் சர்க்கார் ஆள்கிறது என்றால் மந்திரக்கோல் துணை கொண்டல்ல, மக்களிடம் மற்ற கட்சிகளைவிட அதிகமாக ஓட்டுப் பெற்றது மக்கள் தந்த ஆதரவின் மேல் ஆள்கிறார்கள்! இப்பொழுது நடப்பது மக்களுக்காக, மக்களாலேயே நடத்தப்படும் மக்களாட்சி. (நிஷீஸ்மீக்ஷீஸீனீமீஸீN ஷீயீ Nலீமீ ஜீமீஷீஜீறீமீ, தீஹ் Nலீமீ ஜீமீஷீஜீறீமீ ணீஸீபீ யீஷீக்ஷீ Nலீமீ ஜீமீஷீஜீறீமீ) பழைய மன்னர்கள் ஆட்சி உயர்ந்ததல்ல; மட்டமானது! நாடகத்தில தர்பார் சீனில் அரசன் வந்ததும் மந்திரியைப் பார்த்து “மந்திரி! மாதம் மும்மாரி மழை பெய்ததா?” என்று கேட்பார், உடனே ஜனங்கள் “ஆகா! இது போல்லவா ஆட்சி இருக்க வேண்டும். மன்னர் தர்பாருக்கு வந்தவுடன் யோக ஷேமத்தையும், ஊர் ஷேமத்தையும் விசாரிக்கிறார். நாட்டிலே மாதம் மும்மாரி மழை பெய்ததா என்று கேட்கிறார். ஆகா!! குடிகள் மேல் எவ்வளவு அன்பு” என்று பொதுமக்கள் கருதுவார்கள்; அது தவறு. அரசன் தர்பாருக்கு வந்து மாதம் மும்மாரி மழை பெய்கிறதா என்று கேட்டால், மாதம் எத்தனை தடவை மழை பெய்தது என்பதைக் கூட மந்திரியைக் கேட்டே தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்கு அவ்வளவு மந்த புத்தி படைத்தவன் மன்னன் என்று அர்த்தம். நல்லவேளையாக அந்த ஆட்சி இப்பொழுது நடக்க வில்லை. இப்பொழுது மக்களாட்சி நடக்கிறது.

மக்கள் ஆட்சியில் அரசாங்கம் தவறாக நடந்தால் மக்கள் தவறை எடுத்துக்காட்டலாம். தலைமுறை தலைமுறையாக அரசர் குலம் ஆளும் காலம் மாறிவிட்டது. இப்பொழுது மந்திரி பதவி அந்தக் காலத்தில் இருந்தது போல் சாசுவதமானதல்ல. மந்திரியாக யாரும் வரலாம். இப்பொழுது இருக்கிற மந்திரி நம்மில் ஒருவர். நம்மால் அனுப்பப்பட்டவர். சாதாரணமானவர்கள் தான் மந்திரிகளாக இருக்கிறார்கள். இன்று மந்திரிமார்களாயிருப்பவர்கள் நாளை விலாசம் தெரியாமல் போய்விடுபவர்கள்தான். தோழர் அவினாசிலிங்கத்தைப் பாருங்கள். அவர் மந்திரியாக இருந்த போது இங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருந்தார். இப்பொழுது எங்கு தேடினாலும் அகப்படமாட்டார் போலிருக்கிறது. ஒருவன் இன்று இரவு நாடகத்தில் கோவலன் வேஷம் போட்டுக் கொண்டால் மறுநாள் மாதவி வீடா கிடைக்கும்? எங்காவது கொட்டகையின் மூலையில் ஓர் இடத்தில் தூங்கிக் கொண்டிருப்பான்!

காங்கிரஸ் மந்திரிமார்கள் தங்கள் பதவி சாசுவதமானது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மந்திரி பதவி சாசுவதமானதல்ல. மக்கள் மந்திரிகளைவிட மதிப்பு வாய்ந்தவர்கள். மக்கள் மந்திரிகளை உண்டாக்கும் மன்னர்கள். மக்கள் மந்திரிகளுக்கு பயப்பட வேண்டியதில்லை. ஆட்சியில் மாசு ஏற்பட்டால் மந்திரிமார்களை மாற்றும்போது மக்கள் திறமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே நாம் பாடுபடுகிறோம். விளக்குக்கு பிரகாசமாக எரிய தூண்டுகோல் பயன்படுவது போல!

அப்படியானால் இப்பொழுதுள்ள மந்திரி சபையை மாற்றி விட்டு வேறு மந்திரி சபை அமைத்து விட்டால் நமது அல்லல்களெல்லாம் தீர்ந்து விடுமா என்று கேட்டால் தீராதுதான்! நாம் இந்த மாகாணத்தில் இரண்டு மூன்று தடவை மந்திரி சபை மாறியதை பார்த்திருக்கிறோம். முதலில் பிரகாசம் பிரதமராக வந்தார். பத்திரிகைகளெல்லாம் ‘பிரகாசம் வருகிறார், பிரகாசம் ஆட்சியில் மக்கள் வாழ்வு பிரகாசமாக இருக்கும்’ என்று எழுதின. ஒரு வருஷத்தில் பிரகாசம் இருட்டாகிவிட்டது! பிரகாசம் ஆட்சி போய் ஓமாந்தூரார் வந்தார். “ஓமாந்தூரார் உத்தமர், சத்தியவந்தர், சதா கடவுள் சிந்தனை உடையவர், கார்த்திகை விரதம் இருப்பவர், ரமணரிஷி பக்தர், அவர் காலத்தில் ஆட்சி அருமையாக இருக்கும்” என்று பத்திரிகைகள் எழுதின. அதை மக்களும் நம்பினார்கள். 1 ஆண்டு கழிந்தது. ஓமாந்தூரார் போய் குமாரசாமி ராஜா வந்தார். இப்பொழுது ஆட்சி செய்வது அவருடைய மந்திரிசபைதான். இப்படி இரண்டு மூன்று தடவை மந்திரி சபை மாறியது. ஆனால் பஞ்ச நிலைமை மாறவில்லை. பதினாறு அவுன்சு பன்னிரண்டாகி பன்னிரண்டு பத்தாகி, பத்து எட்டாகி, எட்டு ஏழாகியிருக்கிறது. மந்திரி சபை மாற மாற அரிசி அளவு அதிகமாகவில்லை. குறைந்து கொண்டு வருகிறது. ஏன்? மந்திரிசபை மாறினால் மாத்திரம் போதாது. மந்திரிகள் மனம் மாறவேண்டும். மந்திரிமார்களின் கொள்கைகள் மாற வேண்டும். மந்திரிமார்களின் திட்டம் மாற வேண்டும். சுருங்கச் சொன்னால் ஆட்சி முறையே மாற வேண்டும்.

செட்டியார் கடையில் ஐந்து பலம் சர்க்கரை வாங்கி வந்து வீட்டில் நிறுத்துப் பார்த்தவுடன் அது மூன்று பலமாக இருந்தால் செட்டியார் கடையிலுள்ள பையன் சரியாக நிறுத்து தரவில்ø, போக்கிரிப் பயல் அவனை உதைக்க வேண்டும் என்று முதலில் செட்டியார் கடையிலுள்ள பையன் மீதே நமக்கு கோபம் வரும். ஆனால் செட்டியாரே நேரே நிறுத்துக் கொடுத்த பிறகும் வீட்டிற்குப் போய் பார்த்தால் அதே 3 பலம் இருக்கிறது என“றால் என்ன அர்த்தம்? தராசு சரியில்லை என்று அர்த்தமல்லவா? அதைப்போலவே நாட்டில் மக்கள் வாழ்வு நலிகிறது என்றவுடன், ஆள்கிறவன் வெள்ளைக்காரன், அவன் அந்நியன் இந்த நாடானல்ல, அதனால்தான் இந்தக் கஷ்டமெல்லாம் என்று முதலில் செட்டியார் கடையிலுள்ள செட்டியார் பையன்மேல் கோபப்பட்டது போல் மக்கள் வெள்ளைக்காரர்கள் மீது கோபப்பட்டார்கள். பிறகு காங்கிரஸ் தலைவர்கள் அந்நியர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள். நமது சர்க்கார் வந்தது. நமது மந்திரிகள் ஆள ஆரம்பித்தார்கள். இப்பொழுது நமது வாழ்வு நலிவது நிற்கவில்லை என்றால் என்ன அர்த்தம். ஆட்சி செய்யும் முறை சரியில்லை என்று பொருள். தராசை சரிப்படுத்தாமல் எப்படி செட்டியார் கடை பையன் நிறுத்தினாலும் செட்டியாரே நிறுத்தாலும் 5 பலத்திற்கு 3 பலம்தான் நிற்கிறதோ ஆட்சி முறையை மாற்றிக் கொள்ளாமல் வெள்ளைக்காரர்கள் ஆண்டாலும், காங்கிரஸ்காரர்கள் ஆண்டாலும் நமது வாழ்வு நலிவது நம்மைவிட்டு நீங்காது. ஐந்து பலம் ஐந்து பலமாகவே நிற்க வேண்டுமானாலும் தராசையே மாற்றியமைக்க வேண்டும். தராசை மாற்றாமல் செட்டியார் கடைப்பையன் ஸ்தானத்தில் யார் உட்கார்ந்தாலும், செட்டியார் உட்கார்ந்தாலும், நாயுடு உட்கார்ந்தாலும், பிள்ளை உட்கார்ந்தாலும் அதே கதைதான் நடக்கும். ஆகவே தராசைப் பிடுங்கிவிட்டு செட்டியார் பையன் உட்காரும் இடத்தில் உட்காருவது போல், காங்கிரஸ் மந்திரிகள் தள்ளிவிட்டு அவர்கள் ஸ்தானத்தை கைப்பற்றுவதல்ல நோக்கம்.

மந்திரிப்பதவி நமக்கு வேண்டாம், நாங்கள் பார்க்கிறோமே அவர்கள் படும்பாட்டை நமது ஆசையெல்லாம் தராசை மாற்ற வேண்டும் ஒரு வீசைக்கு நாற்பது பலம் என்று தெரிவதற்கு முன் செய்யப்பட்ட தராசை தூர எறிந்து வீசிவிட்டு வேறு தராசு செய்வதுபோல் ஏகாதிபத்தியம் இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி முறையையே மாற்றியமைக்க வேண்டும். நாம் வேண்டுவது புது ஆள் அல்ல, புது மந்திரி சபை அல்ல, புது ஆட்சி முறை. இதைத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தார் கூறுகிறார்கள். சுருக்கமாக “திராவிட நாடு திராவிடருக்கே!” என்று கூறுவதன் பொருள் அதுதான். அதை மக்கள் புரிந்து கொண்டார்கள். அதனால்தான் அதைக் கேட்கும்பொழுது மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் “திராவிட நாடு திராவிடருக்கே” என்பதைக் காட்டுக்கூச்சல் என்கிறார்கள். யாருக்கு நாங்கள் சொல்லுவது காட்டுக் கூச்சலாகத் தோன்றும். நாம் பேசும் பேச்சை நான்கு தெருக்களுக்கு அப்பால் இருந்து கேட்ட ஒருவரை மற்றொருவர் “திராவிட இயக்கக் கூட்டம் நடந்த தாமே அதில் என்ன பேசினார்?” என்று கேட்டால் “என்ன பேசினார் ஒரே சத்தமாகக் கேட்டது” என்று கூறுவார். அதே போல் நாம் கூறும் கொள்கைகளை கேட்காமலேயே “திராவிட நாடு திராவிடருக்கே” என்பது வெறும் காட்டுக்கூச்சல் என்று சர்க்கார் மந்திரிகள் கூறுகிறார்கள். கூறுகிறவர்கள் நேரே வந்து ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்கிறாயே அது என்னப்பா என்று நம்மை வந்து கேட்க வேண்டாமா? ஓ! அவர்கள் “கனம்” வரமாட்டார்கள். கூப்பிடட்டும் நாம் போவோம்-போய் நம் கொள்கைகளைக் கூறுவோம்.

திராவிட நாட்டுக் கோரிக்கை வெறும் காட்டுக்கூச்சல் என்பதோடாவது மந்திரிகள் விட்டார்கள் காமராஜர் இன்னும் ஒரு படி அதிகமாகப் போய் “அது எனக்குப் புரியவே இல்லை” என்கிறார். ஏதோ உலகத்திலே எல்லாம் புரிந்து விட்டது மாதிரியும் திராவிட நாட்டுக் கோரிக்கை ஒன்றுதான் புரியாதது போலவும் பேசுகிறார்.

இன்னும் சில காங்கிரஸ்காரர்கள் “இவர்கள் ‘திராவிட நாடு’ ‘திராவிட நாடு’ என்கிறார்களே யார் தரப்போகிறார்கள்- நாங்கள் தரமாட்டோம்’ என்கிறார்கள். புரியாத ஒன்றை எப்படித் தர முடியாது என்று சொல்லமுடியும் என்பது நமக்குத் தெரியவில்லை. இவர்களை யார் ‘திராவிட நாடு தா’ என்று கேட்கிறார்கள்? இவர்கள் இனியாவது இது மாதிரி சொல்வதை நிறுத்திவிட வேண்டும். நாம் இவர்களைப் பார்த்துக் கேட்கவில்லை. நாம் மத்திய சர்க்காரைப் பார்த்துக் கேட்கிறோம். இல்லாதவரைப் பார்த்துக் கொடு என்று கேட்போமா? எங்களுக்குத் தெரியும் இவர்களிடம் அந்த அதிகாரமில்லை என்பது!

சோடா கடையில் போய் சுக்கா கேட்போம். காப்பிக் கடையில் போய் “செண்டா” கேட்போம். ‘செண்ட்’ கடையில் போய் தேயிலையா கேட்போம். எது எது யார் யாரிடமிருக்குமோ அதைத்தானே கேட்போம். நமக்குத் தெரியும் இவர்களுக்கு அதிகாரமில்லையென்று. ஆகவேதான் நாம் டில்லியைப் பார்த்து வடநாட்டு தலைவர்களைப் பார்த்து மத்திய பார்லிமெண்டைப் பார்த்து கேட்கிறோம். மாகாண சர்க்கரைக் கேட்கவில்லை. மந்திரி மாதவமேனனையும் மந்திரி பக்தவத்சலத்தையும் பார்த்துக் கேட்கவில்லை. இவர்களிடம் இருந்தால் இவ்வளவு நாள் கேட்டுக் கொண்டா இருப்போம்-தட்டி எடுத்துக் கொண்டிருப்போம்!

நாங்கள் மத்திய சர்க்காரைப் பார்த்துக் கேட்கிறோம் இவர்கள் ஏன் ‘இல்லை இல்லை’ என்று நடுவில் குறுக்கிட வேண்டும். அத நல்லதை ஒருவர் நாடி பிறரிடம் வேண்டிக்கொண்டிருக்கும் போது அதிலே வேறொருவர் குறுக்கிடுவது என்பது இந்த நாட்டுப் பரம்பரைப் பழக்கமாகிவிட்டது. கோவிலுக்கு போய் ஒருவர் ஆண்டவனைப் பார்த்து ‘ஐயனே! நான் சித்திரை மாதம் சிறப்பாக அபிஷேகம் செய்கிறேன், வைகாசி மாதம் காப்புக்கட்டுகிறேன். ஆனி மாதம் உற்சவம் செய்கிறேன், என்னை நன்றாக வை” என்று வணங்கப் போனால் அவரை வணங்கவிடுவதில்லை. இடையிலே பூசாரி தோன்றுவார் “ஓ! அம்பலவாண முதலியாரா, அர்ச்சனை செய்ய வேண்டுமா, எடு ஆறணாவை’ என்பார். அதே போல் ‘திராவிட நாடு’ தரும்படி கோருவது டில்லி தேவதையைப் பார்த்து வரம் தரும்படி கோரும்போதுதான் காமராஜர் போன்ற பூசாரிகள் குறுக்கிடுகிறார்கள். நாம் வரம் கோரும் டில்லி தேவதை வேண்டுமானால், நம்மைப் பார்த்து, “நீ கோரும் வரம் தர முடியாது” என்று கூறட்டும். முடியுமானால் இவர்கள் டில்லியைப் பார்த்து திராவிட நாடு கொடுக்காதே என்று கூறட்டும். அதை விட்டு விட்டு ஏன் திராவிட நாடு இல்லை இல்லை என்று வெறும் கூச்சல் போட வேண்டும்.