அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வளம் காண வழி
1

சட்டமன்றத் தலைவர் அவர்களே! இந்த ஆண்டு நிதிநிலை அஹிக்கையின் மீது, இந்த மன்றத்தில் உள்ள அங்கத்தினர்கள் தங்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொன்னதில், திராவிட முன்னேற்றக் கழகச் சார்பில் நான் சில வார்த்தைகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தக் கருத்துக்களை, நானோ அல்லது நான் சார்ந்திருக்கும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களோ, இந்த மாமன்றத்தில் எடுத்துச் சொல்கின்ற நேரத்தில், காணப்படுகின்ற குற்றங் குறைகளை விட்டுப் போன தகவல்களை சேர்த்தால் ஏற்படக்கூடிய கேடுபாடுகளை இவைகளை எடுத்துச் சொல்கின்ற நேரத்தில், அமைச்சர் அவை அதைப்பற்றி அதிகமாக ஆயாசப் படாவிட்டாலும், அவர்களுடைய ஆதரவாளர்கள், இந்தக் குற்றங்குறைகளைச் சொல்கின்ற காரணத்தால், அமைச்சர் அவையினுடைய அறிவாற்றலைப் பற்றி நாங்கள் ஏதோ குற்றம் காணுவதாகக் கருதிக் கொண்டு மிக்க வருத்தம் அடைகின்றனர். சிலர் கோபப்படுகின்றனர். சிலர் எங்களுடைய அறிவாற்றலை ஆராய முற்படுகின்றனர். நான் இந்த மாமன்றத்தில் பலமுறை எடுத்துச் சொன்னபடி, இந்த அமைச்சரவையில் அமர்ந்திருக்கிறவர்கள் யாருக்கும் அறிவாற்றல் குறைவாக இருப்பதாக நான் எப்போதுமே கருதினது இல்லை. இப்படிக் குற்றம் எடுத்துச் சொன்னால், அறிவாற்றல் படைத்தவர்கள் போதுமான அளவு அதிகாரம் படைத்தவர்களானால், நாட்டை ஆளக்கூடிய உரிமை பெற்ற இவர்கள், காரியங்களை இன்னும் எவ்வளவு திறமையாக, செம்மையாக சாதிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டிடவே கூறுகிறோம்!

நிதி நிலை அறிக்கையின் நோக்கம்:

வரவு செலவுத் திட்டத்தில் வெறும் புள்ளிவிவரங்களைக் காட்டி, இவ்வளவு வரவு, இவ்வளவு செலவு, மிச்சத்துக்கு எங்கே போவது என்று கேட்பதற்கு மட்டும், ஆண்டுக்கு ஒருமுறை வரவு செலவுத் திட்டத்தின் மேல் விவாதிக்கப்படுவது இல்லை என்று கேள்வி நேரத்தின் போது நிதி அமைச்சர் எடுத்துச் சொன்னார்கள். என்.ஜி.ஓ.வினருக்கு அதிகச் சம்பளம் தரவேண்டும் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் எதிலிருந்து குறைத்து எதிலே கொடுத்து விடுவது என்று சொன்னால் யோசனை செய்கிறோம் என்று சொன்னார்கள். கல்விக்காக செலவழித்தது அதிகம், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்காகச் செலவழித்தது அதிகம், அவைளைக் குறைத்து, என்.ஜி.ஓ.வினருக்குக் கொடுத்து விடுங்கள்! என்று நான் சொல்வேன் என எதிர்பார்க்கிறார்கள்.

எங்களுக்குச் சட்டசபை அனுபவம் குறைவுதான். ஆனால் மனித சுபாவத்தை நீண்ட நாட்களாக அறிந்திருப்பவர்கள்! அதிலிருந்து குறைத்து இதற்குக் கொடுங்கள் என்று சொல்வது எங்களுடைய வேலை அல்ல! அதற்குத்தான் அமைச்சர் அவை இருக்கிறது!

எந்தெந்தத் துறைகளை உடனடியாகக் கவனிக்க வேண்டும் என்ற பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. எதைக் குறைத்தாக வேண்டும், எந்தெந்தத் துறைகளைக் கவனித்தால் மற்றத் துறைகளுக்கு அதனால் ஊக்கம் ஏற்படும்படி செய்யலாம் என்பதை ஆராய்ச்சி செய்து, வரி மூலமாக மட்டும் அல்லாமல், வேறு பல வகைகளிலும் வருமானத்தைத் தேடுவதும், திட்டங்களைத் தீட்டுவதும் அமைச்சர் அவையின் பொறுப்பு. இதைத் தட்டிக் கழிப்பதற்கு எங்களைத் துணைக்கு அழைக்கிறீர்கள் என்று நான் கருதவில்லை. ஏதாவது மாற்று யோசனைகள் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். என்னுடைய உரையின் இறுதியில் சில மாற்று யோசனைகளையும் சொல்லப் பிரியப்படுகிறேன்.

நிதிநிலை அறிக்கையின் புள்ளிவிவரங்களை மாத்திரம் பார்த்தால், இந்த அமைச்சர் அவையை யாரும் பாராட்டத்தான் வேண்டும். ஏனென்றால் கிடைத்ததை வைத்துக்கொண்டு செட்டாக, சீராக, சிறப்பாக, செலவழித்து கணக்கை ஒப்படைத்து விட்டு, தங்களுடைய கையைத் துடைத்துக் காண்பித்துவிட்டு, மற்றவைகளை உதறித் தள்ளி காட்டி விட்டார்கள்! கனம் நிதி அமைச்சர் அவர்கள் தம்முடைய நிதிநிலை அறிக்கையில், எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கியிருக்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். புள்ளி விவரங்களைக் காட்டுவது மட்டும், நிதிநிலை அறிக்கையின் நோக்கம் அல்ல என்பதை நமது ஆட்சி யாளர்கள் தங்களுடைய ஒரு அறிக்கையில் சொல்லியிருக் கிறார்கள்.

“கூடஞு ஆதஞீடீஞுt குணீஞுச்ஞிட டிண் டூச்ணூஞ்ஞுடூதூ ச் கணிடூடிtடிஞிச்டூ ஞீணிஞிதட்ஞுணt. Nணி ஞீணிதஞt, tடஞு ஊடிணச்ணஞிஞு Mடிணடிண்tஞுணூ ணூஞுதிடிஞுதீண் tடஞு ண்ச்டூடிஞுணt ஞூஞுச்tதணூஞுண் ணிஞூ tடஞு ஞூடிணச்ணஞிடிச்டூ ச்ஞீட்டிணடிண்tணூச்tடிணிண ணிஞூ tடஞு தூஞுச்ணூ ஞுணஞீடிணஞ் ச்ணஞீ tடஞு தூஞுச்ணூ ஞிணிட்ட்ஞுணஞிடிணஞ்; ஞதt tடஞு ட்ச்டிண ணீதணூணீணிண்ஞு டிண் tணி ஞூணிஞிதண் ச்ttஞுணtடிணிண ணிண tடஞு ணீணிடூடிஞிடிஞுண் ச்ணஞீ ணீணூணிஞ்ணூச்ட்ட்ஞுண் ணிஞூ tடஞு ணீச்ணூtதூ ணூஞுணீணூஞுண்ஞுணtண் ச்ணஞீ டணிதீ ஞூச்ணூ tடஞுண்ஞு டச்ஞீ ஞஞுஞுண ச்டூணூஞுச்ஞீதூ டிட்ணீடூஞுட்ஞுணtஞுஞீ ச்ணஞீ டணிதீ ஞூச்ணூ tடஞுதூ ச்ணூஞு tணி ஞஞு ஞூதணூtடஞுணூ டிட்ணீடூஞுட்ஞுணtஞுஞீ ஞீதணூடிணஞ் tடஞு ஞதஞீஞ்ஞுt தூஞுச்ணூ...’’

அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியினுடைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் எந்த எந்த வகையில் நிறைவேற்றுகிறோம் என்பதை எடுத்து விளக்குகிற ஒரு அரசியல் சாசனத்திற்கு ஒப்பிடலாம் என்று குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்.

“ஐt டிண் tடஞு ஞீதtதூ ணிஞூ ஞுதிஞுணூதூ டூஞுஞ்டிண்டூச்tணிணூ tணி ண்ச்tடிண்ஞூதூ டடிட்ண்ஞுடூஞூ tடச்t tடஞுண்ஞு ணீணிடூடிஞிடிஞுண் ச்ணூஞு ண்ணிதணஞீ ச்ணஞீ tடஞுடிணூ ட்ஞுtடணிஞீ ணிஞூ டிட்ணீடூஞுட்ஞுணtச்tடிணிண டிண் ஞுஞூஞூஞுஞிtடிதிஞு ச்ணஞீ ஞுஞிணிணணிட்டிஞி...’’

என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர் கையாளுகிற இந்தக் கொள்கைகளும் கோட்பாடுகளும் சரியானவைதானா என்று அறியவும், சரியானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அவைகளை அவர்கள் சரியான முறையில் நிறைவேற்றியிருக்கிறார் களா என்பதைக் கவனிப்பதும், இந்த விவாதத்தின் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. அதனால்தான் புள்ளி விவரங்களுக்கு அப்பால் போய் நாங்கள் பேசுகிற நேரத்தில், ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் ஆயாசப்படுகிறார்கள் என்று நான் குறிப்பிட்டேன்.

அவர்கள் ஆயாசப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

150 பேர் என்று சொல்லத்தக்க அளவுக்கு உறவினர்களைப் பெற்றிருக்கிற ஒரு பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி. அதனுடைய செல்வாக்கை, மற்றக் கட்சிகள் குறைவாக மதிப்பிடவில்லை அதனுடைய செல்வாக்கை என்று சொல்லும்போது, வோட்டு வாங்குகிற செல்வாக்கை என்று நான் ஒரு திருத்தத்தைச் சொல்லிக் கொள்கிறேன். அந்தச் செல்வாக்கு இருக்கிற பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி. எதிர்க் கட்சிக்காரர்கள் மிக்க சிறுபான்மையின ராகவும் தங்களுக்குள்ளாகவே கூட ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களிலே மாறுபாடான கருத்துக் கொண்டவர்களாகவும் அமர்ந்திருப்பதால், இப்படிப்பட்ட அமைச்சரவை மீது, இவ்வளவு சிறுபான்மையினராக இருக்கும் இவர்கள் குற்றங்குறைகளைச் சொல்வதா, தாம் கேட்பதா என்று, அமைச்சர்களை அல்ல, அமைச்சரவையை ஆதரிப்பதாகக் கருதிக் கொண்டிருப்பவர்கள் சற்று ஆயாசப்படுகிறார்கள்!

கட்சி வலிவும் அரசியல் பொறுப்பும்:

ஒரு கட்சிக்கு வலிவு அதிகமாக இருக்கும்போது அதன் பொறுப்பு மிகவும் அதிகமாக இருக்கிறதென்பதையும், பழுத்த மரத்தின் மீது தான் கல் வீசுவார்கள் என்பதையும், பழுக்காத மரத்தின் மீது கல்வீச மாட்டார்கள் என்பதையும் அரசியலிலேயும் நாம் அறிந்து கொள்ளலாம்.
அமைச்சரவை ஆடக்கூடிய நிலையில் இருந்தால், இவ்வளவு குற்றங்களைச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம்! அதை எப்பொழுது வீழ்த்துவது என்று கணக்கெடுத்துக் கொண்டிருக்கலாம். திறமையை இழந்துவிட்டிருக்கிற அமைச்சரவையாக இருந்தால் உள்ள குற்றங்குறைகளை இவ்வளவு அப்பழுக்கற்ற முறையிலே விளக்கிக் கொண்டிருக்க மாட்டோம். அடுத்த தடவை அவர்கள் திரும்பி வராமல் இருப்பதற்கு என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருப்போம்!

ஆனால் இந்த நாட்டிலே ஜனநாயகம் குழந்தைப் பருவத்திலே இருக்கிறது என்பதையும், அப்படிக் குழந்தைப் பருவத்திலேயிருக்கும் போது, ஒரு கட்சி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டால், அதை வெகு விரைவிலே எளிதிலே, விரட்ட முடியாது என்பதையும், பல நாட்டு ஜனநாயக ஆட்சியினுடைய வீழ்ச்சியையும் வரலாற்றையும் படித்திருக்கும் நாங்கள் ஜனநாயக ஆட்சியினுடைய வீழ்ச்சியையும் வரலாற்றையும் படித்திருக்கும் நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

எதிர்க்கட்சி தேவைதான்:

அதனால்தான், நம்முடைய அமைச்சர்கள் அதிலும் குறிப்பாக, நம்முடைய போலீஸ் அமைச்சர் கனம் பக்தவச்சலம் அவர்கள், போகும் ஊர்களிலெல்லாம், நல்ல எதிர்க்கட்சி இல்லையே! திறமையாகப் பணியாற்றக்கூடிய எதிர்க்கட்சி இல்லையே! நல்ல எதிர்க்கட்சி வேண்டும்! வேண்டும் என்று ஆங்காங்கே பேசி வருகிறார். நல்ல எதிர்க்கட்சி இல்லையே என்று உண்மையிலேயே மெத்த வருத்தப்படுகிறார். அவர் வருத்தம் போகும் வேகத்தைப் பார்த்தால் அடுத்த தடவை அவரே எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்து விடுவாரோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது! (சிரிப்பு) அவ்வளவு வருத்தப்படுகிறார், நல்ல எதிர்க்கட்சி இல்லையே என்று!
ஒரு நல்ல எதிர்க்கட்சி வளர வேண்டுமென்றால் நாங்கள் எதிர்க்கட்சிக்காரர்கள் தேர்தலுக்கு நிற்கும் நேரத்தில் ஆளும் கட்சியினர் போட்டிக்கு நிற்க கூடாது, என்ற விபரீதமான அரசியலை நாங்கள் புகுத்த விரும்பவில்லை. விபரீத அரசியலை இங்கே நாங்கள் புகுத்த விரும்பவில்லை என்னும்போது, இங்கே என்பதை அழுத்துவதற்குக் காரணம், நம்முடைய மாநிலத்தில் என்பதை வலியுறுத்தத்தான்! பிரஜா சோஷலிஷ்டுக் கட்சித் தலைவர் அசோக் மேத்தா அவர்கள் மத்திய சட்ட சபைத் தேர்தலுக்கு நின்ற நேரத்தில், அவருக்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து யாரும் போட்டி போடாமல் விட்டார்கள்.

அந்த முறையைக் கையாண்டு-எங்களுடைய எண்ணிக்கை யைப் பெருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவில்லை. எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல், எண்ணிக்கையைப் பற்றி அதிகமாக எண்ணிப் பார்த்துக் கொண்டிராமல், சொல்லுகிற விஷயங்களிலே உள்ள நன்மை தீமைகளை ஆராய வேண்டும்.

சினிமாவை தேசிய மயமாக்கட்டும்:

அப்படி ஆராயும் நேரத்தில் ஆளும் கட்சியில் உள்ளவர்கள் எங்களைக் குறைசொல்ல வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு மிகவும் துருப்புச் சீட்டாகக் கருதிக்கொண்டிருக்கும் சினிமா விவகாரத்தை மெத்த இழுத்தார்கள். அவர்களெல்லாம் பேசிய நேரத்தில் நான்கைந்து சினிமா முதலாளிகள் கேட்டுக் கொண்டிருக்கவில்லையே என்று நான் எண்ணியதுண்டு. அப்படிக் கேட்டுக் கொண்டிருந்தால், இன்னும் கொஞ்சம் கிராக்கி கிடைத்திருக்குமே தவிர, குறை வந்திருக்காது. அவர்கள் எடுத்துச் சொல்லும்போது வெளியிலே இருப்பவர்கள் என்ன எண்ணிக் கொள்வார்கள், சினிமாக்காரர்கள் அரசியல் பேசுகிறார்கள், அரசியல்வாதிகள் சினிமாவிலே நாட்டம் கொண்டு விட்டார்களே, இது என்ன தலைகீழ்மாற்றம்! என்று சந்தேகப்படுவார்கள்!

ஆகையால் அந்தத் துறையில் எங்களுக்கு இருக்கும் ஈடுபாடுகளைச் சுட்டிக்காட்டி, நாங்கள் ஆட்சியிலே உள்ள குற்றங்களை எடுத்துக்காட்டுவதன் தரத்தை யாராவது குறைக்கலாம் என்றால் அது இயலாது என்று கூறிக்கொள்ளுகிறேன். அது தரத்தைக் குறைத்து அவர்கள் எடுத்துச் சொல்வதாலே நாங்கள் ஈடுபாடு கொண்டிருக்கும் துறையிலே எங்களுக்கு இன்றைய தினம் இருக்கும் இடம் சற்று அதிகமாகி வருகிறது என்றும் கூறுகிறேன். அதை நாங்கள் ஒரு புறத்தில் பொருட்படுத்தாமல் நடப்பதற்குக் காரணம், எங்கள் பேரில் மாசு கற்பிக்க வேறு காரணங்கள் எதுவும். இல்லாத தன்மையினாலே, இதையாவது சொல்லலாமே என்கிற ஆவல் உள்ளவர்களாக காங்கிரசார் இருக்கிறார்கள் என்பதுதான்!

அதுவும் குறிப்பாக காங்கிரஸ் உறுப்பினர் திரு.ஏழுமலை அவர்கள், சினிமாவை தேசிய மயமாக்க வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்கள். இந்தச் சர்க்காருக்கு அந்தத் துணிவு வரவேண்டுமென்று உண்மையில் நான் விரும்புகிறேன்.

சினிமாவைத் தேசியமாக்குவது என்ற தீர்மானத்திற்கு இந்த சர்க்கார் வந்துவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் உறுதி கூறிக் கொள்கிறேன், அவர்கள் சினிமாவைத் தேசீய மயமாக்கியவுடன் ஐந்தாண்டு காலத்தில் எத்தனை கதைகளை அவர்கள் எங்களிடமிருந்து கேட்டாலும், நாங்கள் இலவசமாகத் தருகிறோம்!

(கைத்தட்டல்)

திரு.கே.காமராஜ்: கதை கொடுப்பதோடு ஆகட்டும் பண்ணணும்!

அண்ணா: முதல் அமைச்சர் அவர்கள் நான் அதில் நடிக்கக்கூட வேண்டும் என்று சொல்கிறார்கள். நிச்சயமாக நடிப்போம்! நான் ஏன் இதை இவ்வளவு அழுத்தமாகக் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால், சினிமாத்துறையிலே நாங்கள் ஈடுபாடு கொண்டிருப்பது எங்கள் கட்சி நடத்தும் விடுதலைக் கிளர்ச்சிக்கு அது பெரிதும் உதவும் என்ற காரணத்தினால்தான். இதை எதிர்தரப்பில் உள்ளவர்கள் உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்று வருந்துகிறேன். வரவு செலவு திட்ட விவாதத்தில் இந்த பிரச்சனையையே கிளப்பி இருக்கத் தேவை யில்லை. நிதி நிலையைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்ற போது, சிலர் தங்கள் கருத்துக்களை இந்தப் பக்கம் அதிகமாகத் திருப்பி விட்டதன் காரணமாக நானும் குறிப்பிட வேண்டியிருந்தது.

சென்ற ஆண்டுத் திட்டம்...

சென்ற ஆண்டு நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பித்துப் பேசுகின்ற நேரத்தில், இதற்குத் தீர்ப்பு இப்போது கொடுக்காதீர்கள், ஓராண்டின் முடிவில் தீர்ப்பு அளிக்க வேண்டும்! என்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்கள். அவர்கள் சொன்னதை அப்படியே படிக்கிறேன்.

பட்ஜெட் திட்டம் தயாரிப்பது வேலையின் ஆரம்பமேயொழிய, வேலையின் முடிவு அல்ல, என்பதை நான் உணர்கிறேன். இன்ன இன்ன திட்டங்கள் செய்யலாம் என்று இப்போது முடிவு செய்திருக்கிறோம். இது நன்றாக நடந்திருக்கிறதா என்பதைப் பற்றி வருஷ முடிவில்தான் தெரிந்து கொள்ளமுடியும்!

ஆகையால் இந்த வருடத்தில் நிதி நிலை அறிக்கையைப் பற்றி யோசிப்பதற்கு முன்னால், சென்ற வருடத்தில் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நேரத்தில் அமைச்சர் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக் கின்றனவா, நிறைவேற்றப்பட்டிருக்குமானால் அவற்றால் எதிர்ப்பார்த்த பலன்கள் கிடைத்திருக்கின்றனவா என இவைகளைப் பற்றி எல்லாம் ஆராயக் கடமைப் பட்டிருக்கிறோம்!

அந்த வகையில், நான் சென்ற தடவை காங்கிரஸ் உறுப்பினர்கள் எந்த எந்தக் கோரிக்கைகளை எழுப்பினார்கள் இந்த மாமன்றத்தின் முன்னால் என்பதைக் குறித்துக்கொண்டு, அவைகளாவது நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா என்பதை அறிய மெத்த ஆவல் உள்ளவனாக இருந்தேன். நல்ல வேளையாக இன்றையதினம் திருமதி. சௌந்தரம் ராமச்சந்திரன் அவர்கள் சில விஷயங்களைப் பற்றி எடுத்துப் பேசினார்கள். கிணறு வெட்டுவதில் உள்ள குறைபாடுகளை எடுத்துச் சொன்னார்கள். சென்ற தடவை பட்ஜெட் விவாதத்தின் போதும் அவர்கள் இதே விஷயத்தைப் பற்றிப் பேசுகின்ற போது ஹரிஜனங்கள் குடியிருக்கும் பகுதி முழுவதும் குடிதண்ணீர்க் கிணறுகளை வெட்டிக் கொடுக்க அரசாங்கம் அனுமதித்திருக்கிறது. அப்படி இருந்தும் கூட போன வரவு செலவுத் திட்டத்தைப் பார்த்தாலும், வேறு எதில் பார்த்தாலும், குடிதண்ணீர்த் திட்டம், சுகாதார வசதிகள் ஆகிய இவ்விரண்டு துறையிலும், நாம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்று பார்த்தால் கொஞ்சங்கூட முன்னேறவில்லை என்று தைரியமாகச் சொல்லலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டும் அதனையே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். மற்றவர்களுடைய பேச்சையும் குறிப்பு எடுத்து வைத்திருக்கிறேன். அதிலும் சிறப்பாக தாய்மார்களுடைய பேச்சைக் கேட்டு, தாய்க்குலத்திற்கு மதிப்பு வைத்தாவது ஆட்சியாளர்கள் குறைபாடுகளை நீக்குவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்களா என்று பார்த்தேன்.

சென்ற ஆண்டைப் போலவே அவர்கள் எங்கள் கட்சியினர்கள் பேசிய பேச்சுக்களை எல்லாம் பொறுக்கிக் கொண்டு அவற்றுக்குப் பதிலளித்திருப்பதோடு, கடைசியில் ஆட்சியாளர்கள் எவ்வளவு பேசியும் எங்களைக் கவனிக்காமல் இருக்கிறார்களே என்று தங்கள் தங்கள் தொகுதிகளைப் பற்றியும் கிளப்பிய அவலக்குரல் இந்த ஆண்டிலும் கேட்டது. இதிலிருந்து நாங்கள் ஊகித்துக் கொள்ளக் கிடைப்பது. அமைச்சர் அவை சென்ற ஆண்டு இங்கே குறிப்பிட்ட குறைபாடுகளை எல்லாம் இன்னும் நிவர்த்திக்கவில்லை என்பதுதான்!

வசதியும் வாய்ப்பும் இங்கு இல்லை:

அவைகளை நீக்குவதற்குரிய ஆற்றல் இந்த அமைச்சர் அவைக்கு இல்லை என்று நான் கருதவில்லை! போதிய அவகாசமும் அவர்களுக்கு இல்லை என்று கூறுவதற்கில்லை! அல்லது அவர்கள் செயல்படாதவாறு யாரோ குறுக்கிடுகிறார்கள் என்றும் பொருள் அல்ல! அமைச்சர் அவைக்கு அதற்கேற்ற வசதி இல்லை. அந்த வசதியைப் பெறுவதற்குரிய வரியைப் போடும் வாய்ப்புகளை எல்லாம் மத்திய அரசாங்கம் அதிகப்படுத்திக் கொண்டு விட்ட காரணத்தினால், இவர்களுக்குள்ள குறைந்த இனங்களிலேயே அதிக வரியைப் போடுவது என்று முன்வருகிறார்கள். இது மக்கள் நல சர்க்கார் என்கிற அடிப்படைத் தத்துவத்திற்கே சரியாகாது! வரி இல்லாமல் ஆட்சி நடக்காது, ஆனால் வரி ஒன்றினால் மட்டும்தான் வருவாயைத் தேடிக் கொள்ள முடியும் என்று நினைத்தால், நிச்சயமாக அந்த ஆட்சி வழியில் போகின்றவனுடைய மடியில் இருப்பதை எடுத்து மற்றவன் கரத்தில் கொடுப்பதைப் போலத்தான் நடக்க வேண்டியிருக்கும்!

ஆகையால் ஆளும் கட்சியினர் வருவாயை எந்த வகையில் பெருக்கிக் கொள்ளலாம் என்று பார்க்கின்ற நிலை வேண்டும். வரி மூலமாக மட்டுமல்லாமல், வேறு எந்த எந்த வகையில் வருவாயைப் பெருக்கிக் கொள்வது எனவும் எண்ண வேண்டும். அப்படி எண்ணிப் பார்க்கும் போது நான் பழைய விஷயத்திற்கு வந்து விடுகிறேன் என்று சிலர் வருத்தப்படக்கூடும். நான் பழைய விஷயத்திற்கு வரவில்லை. அடிப்படை விஷயத்திற்கு வருகிறேன். ஆட்சியாளர்களுக்குப் போதுமான வாய்ப்பு இல்லை என்று குறிப்பிட்டேன், காரணம் நமது அரசியல் சட்டத்தின் 12வது பிரிவின்படி எந்தத் துறையில் மட்டும் வரிபோடலாம் என்பதை இந்திய அரசாங்கத்தார் வரையறுத்து விட்டார்கள். மத்திய சர்க்கார் போடுகின்ற வரிப்பளுவின் விளைவாக நமக்கு ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைகளை எடுத்துக் காட்டினால், திராவிட நாட்டுப் பிரிவினைக்கு நான் திட்டமிட்டு உங்களை அழைத்துச் செல்கிறேன் என்று எண்ணிக் கொள்வார்கள், இங்கு உள்ள அமைச்சர்கள், ஆனால் வங்ளாளத்தில் இருக்கிற முதல் அமைச்சர் டாக்டர் பி.சி.ராய் இப்போது பேசியிருக்கிறார்.

“ஆதஞீஞ்ஞுtடிணஞ் டிண tடஞு ண்tச்tஞுண் டிண் ஞ்ணூணிதீடிணஞ் டிணஞிணூஞுச்ண்டிணஞ்டூதூ ஞீடிஞூஞூடிஞிதடூt டிண திடிஞுதீ ணிஞூ tடஞு டிணஞிணூஞுச்ண்டிணஞ் ஞீஞுணீஞுணஞீஞுணஞிஞு ணிண tடஞு இஞுணtணூஞு ச்ணஞீ tடஞு டிணஞிணூஞுச்ண்டிணஞ் க்ணஞிஞுணூtச்டிணடிtதூ ச்ஞணிதt tடஞு ச்ட்ணிதணt தீடடிஞிட ச்ணூஞு டூடிடுஞுடூதூ tணி ஞஞு ணூஞுஞிஞுடிதிஞுஞீ டிண tடடிண் ச்ணூஞுச் ணிஞூ ஞீஞுணீஞுணஞீஞுணஞிஞு.’’

மத்திய சர்க்காரிடத்திலே நாம் அதிகமாகக் கையேந்தி நிற்கவேண்டியிருக்கிறது. அப்படி நாம் கையேந்தி நிற்கும் நேரத்தில் நமக்குக் கிடைப்பது போதிய அளவு கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும்? என்பதையும் உறுதியோடு சொல்ல முடியாமல் இருக்கிறது. ஆகவே மாநில அரசாங்கத்தில் நிதி நிலை அறிக்கையைத் தயாரிப்பதிலே கஷ்டம் இருக்கிறது என்று டாக்டர் பி.சி.ராய் அவர்கள், பழுத்த தேசியவாதி-அரசியல் அறிஞர்-நல்ல திறமை படைத்தவர்-வங்காள மாநில சர்க்காரின் முதல் அமைச்சராக இருப்பவர் கூறி இருக்கிறார்! அப்படி சொல்லுங் காலத்தில், 3.83 கோடி ரூபாய் துண்டு விழும் பட்ஜெட்டை, அதற்காக எந்தப் புது வரியும் போடாமல் வரவு செலவுத் திட்டத்தை அவர் கொடுத்து விட்டு இதனைச் சொல்லியிருக்கிறார்.

மத்திய அரசாங்கத்துக்கு வரிகள்:

மத்திய சர்க்கார் எந்தெந்த துறைகளில் வரி போடுகிறார்கள் அவர்கள் போடுகிற வரியின் அளவைப் பற்றி நாம் கவனிக்கும் நேரத்தில், அவர்கள் போட்டது போக மிச்சம் இருக்கும் துறையில் நாம் வரி போட வேண்டியிருக்கிறது. மத்திய சர்க்கார் போடும் வரிச்சுமையைத் தாங்கிக் கொள்ள மக்களுக்கு வலிவு இருக்கிறதா? என்று நாம் பார்க்க வேண்டும்.

மத்திய அரசாங்கம் ஒரு பக்கத்தில் வரிகளைப் போட்டுக் கொண்டே போக, நம் நாட்டு மக்கள் அந்த வரிச் சுமையைத் தாங்கிப் பின் மிச்சம் வலிவு இருந்தால் தான் மாநில சர்க்கார் போடக்கூடிய வரிச் சுமையைத் தாங்கிக் கொள்ள முடியும்! மாநில சர்க்கார், மேலும் வரிச்சுமையை மக்களின் மேல் போட முடியாமல் இருப்பதற்குக் காரணம், மக்களினால் மேலும் வரிச்சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று உணர்ந்திருக்கும் கருணை உள்ளத்தால்தான் என்று நான் கருதுகிறேன்.

1953-54 ம் ஆண்டில் மட்டும் மத்திய சர்க்கார் எக்சைஸ் வரி மூலம், அதாவது கலால் வரி மூலம், பொருள்களின் மீது கொடுக்கப்பட்ட வரி ஏறக்குறைய, 96 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறார்கள். ஆனால் 1957-58 ல் எக்சைஸ் வரியாக சுமார் 257 கோடி ரூபாய் மத்திய சர்க்காருக்குப் போய் இருக்கிறது!

எந்தெந்தப் பொருள்களுக்கு நாம் வரி செலுத்துகிறோம் என்பதை எங்களுக்குரிய கதை சொல்லும் பாணியில் நான் சற்று சொல்லப் பிரியப்படுகிறேன். காலையில் எழுந்ததும் பல் துலக்க பிரஷ்ஷை எடுத்தால், அதற்கு வரி மத்திய அரசாங்கத்துக்குத் தருகிறோம். அத்துடன் பற்பசையை எடுத்தால், அதன் மீது மத்திய அரசாங்கத்துக்கு வரி போகிறது. பிறகு டீயோ, காபியோ குடித்தால் அதற்குரிய வரி மத்திய அரசாங்கத்துக்குப் போகிறது. பிறகு நாம் குளிக்க சோப்பு எடுத்தால், அதற்கும் மத்திய சர்க்காருக்கு வரி தருகிறோம்! நாம் குளிப்பதற்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு, ஷவரம் செய்து கொள்ள பிளேடை கையிலெடுத்தால், அதற்கு மத்திய சர்க்காருக்கு வரி தருகிறோம். நாம் சிகரெட் பிடிப்பவர்களாக இருந்தால், அதற்குப் போடப்படும் வரியும் மத்திய சர்க்காருக்குப் போய்ச் சேர்கிறது! அந்தச் சிகரெட்டைப் பற்றவைக்கும் தீப்பெட்டிக்கும் வரி போகிறது! இப்படிப் போடப்படுகிற வரிகள் எந்தெந்தப் பொருள்களுக்கு என்பதை மட்டும் நான் இந்த மாமன்றத்தில் படித்துக் காட்ட சபாநாயகர் அவர்கள் அனுமதி அளிக்க வேண்டுமென்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். அது மற்றவர்களுக்குத் தெரியாது என்பதால் அல்ல ஆனால் எனக்குத் தெரியும் என்பதை எடுத்துக்காட்ட தயவு செய்து நிதியமைச்சர் அவர்கள் அனுமதிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அவைகளாவன:

எணிடூஞீ, குடிடூதிஞுணூ, ஓஞுணூணிண்டிணஞு, கூணிஞச்ஞிஞிணி, ஞிணிஞூஞூஞுஞு, கூஞுச், இடிஞ்ச்ணூ, இடஞுணூணிணிt, இடூணிtட Mச்tஞிடஞுண், ஙஞுஞ்ஞுtச்ஞடூஞு ணீணூணிஞீதஞிt, குtஞுஞுடூ, கணிதீஞுணூ, அடூஞிணிடச்டூ, குதஞ்ச்ணூ, கூதூணூஞு- கூதஞஞுண், இஞுட்ஞுணt, குணிச்ணீண், அணூt - ண்டிடூடு, ஊணிணிt - ஙிஞுச்ணூ, கச்ணீஞுணூ, கச்டிணtண் - ஙச்ணூணடிண்ட, உடூஞுஞிtணூடிஞி - ஞதடூஞண், ஊச்ணண், ஆச்ttஞுணூடிஞுண், ஊச்ஞணூடிஞிண், கணிதீஞுணூ - ஃணிணிட்ண், ஙஞுஞ்ஞுtச்ஞடூஞு, Nணிண - ஞுண்ண்ஞுணtடிச்டூ Oடிடூண், ஙுச்ணூண, Mஞுஞிடச்ணடிஞிச்டூ - ஃடிஞ்டtஞுணூ, Mணிtணிணூ குணீடிணூடிt, இணிttணிண - ஊச்ஞணூடிஞி, குtச்ணீடூஞு ஞூச்ஞணூடிஞி தூச்ணூண, Mணிtச்ணூ - இச்ணூ.

எக்சைஸ் வரியாக இவ்வளவு பணம் வசூலிப்பதில் சென்னை மாநில சர்க்காருக்கு, மத்திய சர்க்கார் எவ்வளவு பணம் தருகிறது? முன்னேற்றக் கழகக்காரர்களுக்கு ஏதாவது கணக்கு இருக்கிறதா? என்று ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது நிதி அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். எங்களுக்குச் சரியான கணக்கு கிடைக்கக்கூடிய வசதி இல்லை. இருந்தாலும் கிடைத்திருக்கக் கூடிய மட்டும் சொல்லுகிறேன்.

இந்தத் துறையில் மட்டும் சென்னை மாநிலம் 21.58 கோடி ரூபாய் எக்சைஸ் வரியாகக் கொடுத்துக் கொண்டு வருகிறது.

மாநில சர்க்கார் தங்களுடைய வரவு செலவு திட்டத்தில் விழும் துண்டை சரிக்கட்டுவதற்காக, ஏதாவது மக்களுக்குத் தேவையான நன்மைகளைச் செய்ய வேண்டுமென்று கருதி வரிபோட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அடைக்கப்பட்டிருக்கின்ற இடங்கள் இவ்வளவு இருக்கின்றன!

தேவைக்குத் தக்க பணங்கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தின் பேரில் அமைச்சர் அவர்கள் விவசாய வருமான வரியைப் போட்டிருக்கிறார்கள். ஆனால் கணக்கெடுக்கும் பொழுது விவசாய வருமானத்தோடு, மற்றத் துறைகளில் வரும் வருமானத்தையும் சேர்த்துக் கணக்கெடுக்கப்படும் என்று சொல்கிறார்கள். இன்றைய தினம் அதற்குக் கூட இந்த மாநில சர்க்காருக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதில் எனக்கு ஐயப்பாடு இருக்கிறது. ஏனென்றால் நமது வரவு-செலவு திட்டத்தில், பிற துறைகளிலிருந்து வருகின்ற வருமானத்தில் வரி விதிக்கும் அதிகாரம் மத்திய சர்க்காருக்கு அளிக்கப்பட்டிருக்கிறதே தவிர, மாநில சர்க்காருக்கு இல்லை யாராவது வழக்கறிஞர்களை வைத்து, சர்க்கார் வாதாடலாமே தவிர மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், அந்தத் துறைகளின் மீது வரி விதிக்கும் அதிகாரத்தை மத்திய சர்க்கார்தான் வைத்துக் கொண்டு இருக்கிறது என்பது தெரியும்.

இவைகளையெல்லாம் நான் சொல்லுவது, மத்திய சர்க்காரின் மேல் குற்றஞ்சாட்டவேண“டும் என்பதற்கல்ல! மத்திய சர்க்கார் இடத்தில் இவ்வளவு துறைகளை ஒப்படைத்துவிட்டு, பிறகு எவ்வளவுதான் ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும் சரி, நமது மாநில அமைச்சர்களால் துண்டு விழும் வரவு செலவு திட்டத்தைத்தான் தயாரிக்க முடிகிறது!
சரிக்கட்டுவது எப்படி?
இந்தத் துண்டு விழுந்த தொகையைச் சரிக்கட்டுவதற்கு யாரைப்பார்த்து வரிப்போட்டால் அதிகமான பணம் கிடைக்கும் என்று என்னைப்பார்த்து நிதியமைச்சர் அவர்கள் கேட்டார்கள். அதோடு, ஆமாம்! இதில் கஷ்டங்கள் இருக்கின்றன. இவைகளை மாற்றுவதற்கு வேண்டிய வழிகளை எதிர்க்கட்சித் தலைவர்கள் வேண்டுமானால் சொல்லட்டும், கேட்கலாம்! என்று சொன்னார்கள். உண்மையில் வழிமுறை தெரிந்திருந்தால், என்னைப் பார்த்துக் கேட்டிருக்க மாட்டார்கள். சிறுகுழந்தை சந்திரனைப் பிடித்துத் தரவேண்டுமென்று அழுகின்ற நேரத்தில், அதன் தாய் அந்தச் சந்திரனை என்னால் பிடிக்க முடியாது, சந்திரனைப் பிடிப்பதற்கு உன்னை ஏவுகிறேன், பிடித்து வா என்று அந்தத் தாய் சொல்லுகின்ற கனிவை நிதியமைச்சர் அவர்களிடத்தில் காண்கின்றேன். சந்திரனைப் பிடிக்க முடியாது மத்திய சர்க்காருடைய கையில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது எல்லா அதிகாரமும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மையில் இந்த மத்திய சர்க்காரில், வரிகள் என்று சொல்ல வில்லை. வரித்துறைகள் அவ்வளவும் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன. சிறிய அளவுதான் மாநில சர்க்காரிடத்தில் இருக்கிறது.

ஆங்கிலத்தில் வரிமுறைகளைப் பற்றி எடுத்துச் சொல்லுவார் கள். சில வரிகள் எலாஸ்டிக் அதாவது வருவாய் அதிகரிக்க அதிகரிக்க, வரித்தொகை வளர்ந்து கொண்டே போகும். இன் எலாஸ்டிக் என்பது, வருவாய் எவ்வளவுதான் அதிகரித்தாலும் அதனால் வரிகள் வளராது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். நிலவருவாய் என்பது குறிப்பிட்ட அளவுதான் வளருமே தவிர, மாநில சர்க்காருக்கு இன்றைய தினம் இருக்கின்ற பசியை எண்ணி, மாநில சர்க்காரின் பற்றாக்குறையை எண்ணி, நிலங்கள் திடீரென்று நாலைந்து போகம் விளைந்துவிடாது! அதெல்லாம் நந்தனார் காலத்தோடு நின்று போய்விட்டது. நந்தனார் காலத்தில் நந்தனாருக்கு மட்டுமே ஒரே இரவில் உழாமல், விதைக்காமல், மறுநாள் காலை அறுவடை செய்ய முடிந்தது என்று, கதை சொல்லுகிறது அது இப்போது எப்படிக் கிடைக்கும்?

நான் குறிப்பிட்ட இந்த வரிகள் எல்லாம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க அதிகரிக்க, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, உயர மக்களுடைய தேவைகள் வளர வளர இந்த வரிகளும் வளர்ந்து கொண்டே போகும். 1953-54ல் 27 கோடி ரூபாயாக இருந்த எக்சைஸ் வரி இப்போது 257 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அந்த அளவு வளர்ச்சியடையும் வரிகள், வரித்துறைகள் எல்லாம் மத்திய சர்க்காரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

மாநிலங்களின் பரிதாப நிலை:

அதனால்தான், இந்த மாநிலத்தவரல்ல, வேறொரு மாநிலத்தைச் சார்ந்தவர் இதைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதாவது நாம் ஒரு குடியேற்ற நாட்டின் அந்தஸ்திலேயே இருக்கிறோம், உண்மையான விடுதலை இல்லை என்று இந்த மாகாணத்திலுள்ளவரல்ல, வேறொரு மாகாணத்திலுள்ள ஒருவர், பொறுப்பற்றவர் அல்ல. பொறுப்புள்ள ஒருவர் ஏனோதானோக்களில் சேர்ந்தவர் அல்ல, யாரென்று கவனிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள ஒருவர். இவ்வாறு சொல்லியிருக்கிறார்.

மிN வீˆ தீஹ் ஜீணீவீஸீயீMறீறீஹ் ணீஜீஜீணீக்ஷீமீஸீN NலீணீN ஷீMக்ஷீ க்ஷீMறீமீக்ஷீˆ வீஸீ பீமீறீலீவீ நீணீஸீஸீஷீN தீமீ நீஷீMஸீNமீபீ Mஜீஷீஸீ Nஷீ தீமீ யீணீவீக்ஷீ Nஷீ Mஸீபீமீக்ஷீபீமீஸ்மீறீஷீஜீமீபீ க்ஷீமீரீவீஷீஸீˆ. மிN வீˆ Nலீமீ ஜீமீஷீஜீறீமீ நீஷீஸீநீமீக்ஷீஸீமீபீ NலீணீN தீஹ் Nலீமீவீக்ஷீ MஸீவீNமீபீ ணீஸீபீ ˆNக்ஷீஷீஸீரீ ணீநீNவீஷீஸீ னீMˆN ஷ்க்ஷீமீˆN ஷ்லீணீN வீˆ Nலீமீவீக்ஷீ பீMமீ.

என்று சொல்கிறார். நான் அசாம் மாகாணத்தைப் பற்றி குறிப்பிடுகிறேன். அசாம் மாகாணத்திற்கும் மத்திய சர்க்காருக்கும் இடையில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், இந்த விதமாக அங்குள்ள அரசியல் தலைவர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த அளவுக்கு மனப்பான்மை வளர்ந்திருக்கிறது.