அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வளம் காண வழி
2

அது மட்டுமல்ல, மாநில சர்க்காருடைய கரங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. மத்திய சர்க்காரிடத்தில் எல்லா அதிகாரங்களையும் கொடுத்துவிட்ட காரணத்தினால், நமக்குப் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டத்தை நாம் தயாரிக்க வேண்டியிருக்கிறது என்பதை உள்ளடக்கி,

‘ஷிNணீக்ஷீளீ யீணீநீN வீˆ NலீணீN ஷ்லீணீN கிˆˆணீனீ வீˆ மீஸீழீஷீஹ்வீஸீரீ Mஸீபீமீக்ஷீ Nலீமீ ஸீமீஷ் க்ஷீMறீமீக்ஷீˆ ஷீயீ Nலீமீ நீஷீMஸீNக்ஷீஹ் வீˆ ஸீஷீN யீக்ஷீமீமீபீஷீனீ, தீMN Nலீமீ ˆNணீNMˆ ஷீயீ ணீ நீஷீறீஷீஸீஹ்.’

நாம் குடியேற்ற நாட்டின் அந்தஸ்தில்தான் இருந்து வருகிறோம் என்றும், அசாமிலுள்ள அரசியல் தலைவர் சொல்லுகிறார்.

நான் இவ்விதம் சொல்வதை வைத்துக் கொண்டு மிகச் சாமர்த்தியமாக நமது நிதியமைச்சரவர்கள்.

வடக்கு-தெற்கு சொல்லுகின்ற அண்ணாதுரை இப்போதாவது அசாமுக்குக் கூட கவலை இருக்கிறது என“பதைப் புரிந்து கொள்கிறார் என்று கூறி வாதாடப் போகிறார்கள் என்று முன்கூட்டியே நான் ஊகிக்கிறேன். நான் ஒன்று சொல்வேன், அசாமுக்குக் கவலை இருக்கிறது, நமக்கும் கவலை இருக்கிறது, என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்! அவர்கள் தங்கள் பாசத்தை எவ்வளவு காண்பித்தாலும் கூட தங்களுடைய கவலையைத் தெரிவித்துக்கொள்வதில் தவறியதில்லை என்பதை நாம் பார்க்க வேண்டும். தாயும் மகளும் ஒன்று என்றாலும், வாயும் வயிறும் வேறு! என்கிற முறையில் அவர்கள் இருந்து வருவதை நாம் பார்க்க வேண்டும்.

நம்முடைய நிதியமைச்சர் அவர்களோ மத்திய சர்க்காரினால் நியமிக்கப்பட்ட நிதிக்குழுவினிடத்தில் காரசாரமாக விஷயங்களைப் பற்றிப் பேசி விவாதித்து அப்பழுக்கற்ற ஆதாரங்களைக் காட்டி எவ்வளவோ திறமையுடன் வாதாடினாலும், பெற வேண்டியதைப் பெறமுடியவில்லை என்று சொல்லி, ஆனால் பெற்றதற்கு நாம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வோம் என்று சொல்லுகிறார்கள். அசாம் மாகாணத்திலுள்ளவர்கள் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசக்கூடிய நேரத்திலே நமது நிதியமைச்சரவர்கள், எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்! என்று எடுத்துச் சொல்வதிலிருந்து எனக்குத் தோன்றுகிறது. மிக விரைவில் அவர்களே அங்கேபோய் உட்கார்ந்து கொண்டு நாம் கேட்கும் போதெல்லாம் இல்லை, இல்லை! என்று சொல்வார்களோ, அதற்காகத் தான் இப்போது இப்படிச் சொல்கிறார்களோ என்று நானே ஊகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது! எது எப்படி யிருந்தாலும்...

ஆர்.வெங்கட்ராமன் (இடைமறித்து): அவர் அங்கே போனால் நமக்கு வேண்டியதைக் கொடுப்பார்!
அண்ணா: நம் தொழிலமைச்சர் அவர்கள் நிதியமைச்சர் அவர்கள் அங்கே போனால் பணம் தருவார்கள் என்று சொல்கிறார்கள். அவர் அப்படிச் சொல்வதிலிருந்து யாராவது அங்கேயிருந்து கொண்டு நமக்கு நியாயமாகப் பணம் தர வேண்டும் என்ற ஆவல் அமைச்சருக்கு எவ்வளவு இருக்கிறது என்பது தெரிகிறது!

ஆர்.வெங்கட்ராமன்: நியாயமாக இல்லை, அதிகமாக என்று சொல்லலாம்.

அண்ணா: இப்படிச் சொல்வது நம்முடைய வாதத்தைத் தான் உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது! நமக்கு வேண்டியவர்கள் அங்கு இருந்தால் நமக்கு அதிகமான பணம் கிடைக்கும். இப்பொழுது குறைவாகக் கிடைப்பதற்குக் காரணம் நமக்கு வேண்டியவர்கள் அங்கு இல்லாததுதான்! இப்போது சாதாரணமாய் போட்டிருக்கின்ற வரித்துறைகளைப் பொருத்த வரையில் அந்த வரிமுறைகளை எங்கள் கட்சியின் சார்பிலிருந்து இதுவரை யாரும் எதிர்க்கவில்லை, நானும் எதிர்க்கவில்லை.

விவசாய வருமான வரி குறைவதேன்?

விவசாய வருமானவரி போடத்தான் வேண்டுமென்பதனை, இதற்கு முன்னால் இந்தச் சட்டமன்றத்திலே விவாதித்திருக்கிறோம். கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்று கணக்கெடுத்திருக்கிறார்கள். தொழிலாளிகளையும் மிராசுதாரர் களையும் அப்படிக் கணக்கெடுத்திருப்பதைப் பார்க்கும் நேரத்திலே காலதாமதப்படுத்தியதால் எவ்வளவு பணம் விரயமாகியிருக்கிறது என“பதை நாம் எண்ணிப் பார்க்காமல் இருக்கமுடியாது. இந்த விவசாய வருமான வரியின் மூலம் நமக்கு 70 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று நிதி அமைச்சர் அவர்கள் கணக்கிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். வெளியிலே உள்ள மக்களின் கணக்கும், அந்த மக்களின் நினைப்பும், இ“ந்த வரியின் மூலம் ஏராளமான பணம் வரும் என்பதாகும். ஏன் அப்படியென்றால், ஏராளமான நிலத்தை தனித்தனியாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் நிரம்ப வரி கட்டுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்படி எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்திலே, நமது ஆட்சியாளர்கள் அவர்கள் மற்ற நாடுகளோடு தொடர்பு கொண்டு ஆங்கிலத்தில் கோ-எக்ஸிஸ்டன்ஸ் என்று சொல்வார்களே அதாவது ஒன்றாகக்கூடி வாழ்வது, தனிப்பட்ட முதலாளிகளையும் தொழிலாளிகளையும், மிராசுதாரர்களையும் உழவர்களையும் ஒன்றாக வைத்துக் கொண்டு வாழ வேண்டும் என்று கருதிக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலே, இப்படிச் செய்யப் போகிறோம். அப்படிச் செய்யப்போகிறோம்! புலி வருகிறது, புலி வருகிறது என்று நீண்டநாளாகச் சொன்ன காரணத்தினாலே, புலி வந்தால் என்ன செய்வது என்பதைக் கண்டுபிடித்து நிலச் சொந்தக்காரர்கள் பாதுகாப்பைத் தேடிக் கொண்டார்கள்! அப்படிப் பாதுகாப்பைத் தேடிக் கொண்டவர்களில் ஒரு சிலர் இங்கேயும், பலர் வெளியேயும் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அப்படிப் பாதுகாப்பைத் தேடிக்கொண்ட காரணத்தினால்தான், விவசாய வருமானவரி போட்டும் 70 லட்சம் ரூபாய் அளவுக்குத்தான் வரி கிடைக்கிறது. அதற்கே கூட காங்கிரஸ் கட்சியின் தரப்பிலிருந்து ஓரளவுக்கு எதிர்ப்பு கிடைத்தது.

நிலவரம்புத் திட்டம் என்னவாயிற்று?

நம் நிதி அமைச்சர் சென்ற ஆண்டு சொன்னார்கள் நிலச்சுவான்தார்கள் எங்கள் பக்கத்தில் இருக்கலாம் மிட்டாதார்கள் எங்கள் பக்கத்தில் இருக்கலாம். ஜமீன்தார்கள் எங்கள் பக்கத்தில் இருக்கலாம். உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி சொன்னால், அவர்களுடைய தேசீய உணர்ச்சி அவர்களை ஒத்துக்கொள்ளச் சொல்லும் என்று சொல்லி, அந்த இடத்தில் சபையினரின் கரகோஷத்தைப் பெற்றார். என் மனக்கண் முன்னால் அந“தக் காட்சியைக் காண்கின்றேன். அதே அவையில் இன்றைய தினம் எவ்வளவு மனக்குமுறல் இருந்தது, எவ்வளவு பேர்கள் வருத்தப்பட்டார்கள் என்பதைப் பார்க்கும்போது, நிதி அமைச்சர் கருதுகிறபடி உண்மையிலேயே தேசீய உணர்ச்சியும், சொந்த உணர்ச்சியும் மோதுகின்ற நேரத்திலே தேசீய உணர்ச்சி வெற்றி பெறுமென்று கருதுவது அவ்வளவு எளிதல்ல, சரியல்ல என்பது தெரிகிறது! ஆனால் கட்சிக் கட்டுப்பாடு உணர்ச்சிதான் பாதுகாப்பு அளிக்கிறது என்று நான் கருதுகிறேன். இல்லை யென்றால் சென்ற ஆண்டிலே காங்கிரஸ் அங்கத்தினர் ஒருவர்-தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இன்னது செய்ய வேண்டுமென்று எடுத்துச் சொன்னபோது மடாலயங்களிலுள்ள நிலங்களை ஹரிஜனங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும், கூட்டுறவுப் பண்ணையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று எடுத்துச் சொன்னார்கள். அவைகளைக் கவனிக்கலாமென்று சொன்னது நமது அமைச்சரவை!

நிலத்திற்கு உச்சவரம்பு கட்டவேண்டுமென்றே ஆவலைக் கிளப்பி, அப்படிக் கிளப்பப்பட்ட ஆவலினாலே மக்கள் உந்தப்பட்டு, நிலத்திற்கு உச்சவரம்பு கட்டப்போகிறார்கள், நிலங்கள் ஒரே இடத்தில் குவிந்திருக்காது, தருமபுரம், திருவாடுதுறை மடாலயங்களில் குவிந்திருக்காது, எல்லாவற்றையும் பகிர்ந்து கொடுத்துவிடுவார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். விவசாய வரிதான் போடப் போகிறோம் என்று இப்போது அமைச்சர் சொல்வதிலிருந்து, உண்மையிலேயே இந்தத் திட்டத்தைக்கைவிட்டு விடுகிறார்களோ என்று சிலரும், ஒத்தி வைத்து விடுவார்களோ என்று பலரும், ஐயப்படும்படியாக இருக்கிறது. அந்த அளவுக்கு அவர்கள் ஏன் நிலச்சுவான்தார் களிடத்தில் அச்சப்பட வேண்டுமென்று என்னால் ஊகிக்க முடியவில்லை!

இன்றைய தினம் நிலத்திற்கு உச்ச வரம்பு கட்ட வேண்டுமென்று எடுத்துச் சொல்லாத கட்சியை முற்போக்கான கட்சி என்று நாட்டிலே யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாட்டிலே ஒருமைப்பாடு இருக்கிற பிரச்சினை இது. எதனால் இவ்வளவு காலதாமதம் இதற்கு ஏற்படுகிறதென்று எனக்குப் புரியவில்லை. ஒரு சமயம் அடுத்த தேர்தல் முடிந்து, அதற்குப் பிறகு பார்க்கலாம் என்ற அளவுக்கு அமைச்சரவையில் உள்ளவர்கள் கருதுகிறார்களோ என்று தெரியவில்லை. சாதாரணமாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்த மாமன்றத்திலும், வெளியே பேசுகின்ற போதும், பணக்காரர்களிடத்தில் உள்ள பணத்தை வாங்கிக் கொள்ள முடியும்! வாங்கத் தெரியும்! என்று சொல்கிறார். அவருக்கு அந்தத் திறமை இருக்கிறது, அந்தத் திறமை அவருக்குக் கடைசிவரை இருக்குமா? ஐயப்பாடுதான்! அவருக்குப் பிறகு ஆட்சியாளராக அமருகின்றவர்கள் அவரைப் போல பணக்காரர்களிடத்தில் பக்குவமாகச் சொல்லி வாங்கக்கூடிய அளவுக்குத் திறம் படைத்தவர்களாக தொடர்ச்சியாக வருவார்களா என்று தெரியவில்லை.

உலகத்தில் பொருளாதார நிபுணர்கள் ஒருவரிடத்திலே பணம் குவிந்திருக்கக் கூடாது என்று கருதும் போது, இவர்கள் மட்டும் ஏன் இன்னும் இதை விட்டு வைத்திருக்கிறார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை!

நிறைவேற்றப்படாத நிதித் திட்டங்கள்:

நம் நிதியமைச்சர் அவர்கள் வரவு செலவுத் திட்டத்தைப் பார்த்துவிட்டத் தீர்ப்பு அளிக்காதீர்கள். ஆண்டு முடிந்தபிறகு தீர்ப்பளியுங்கள் என்று சொன்னார்கள். அந்த வகையிலே பார்க்கும் போது பல துறைகளில் ஒதுக்கிய பணத்தைச் செலவழிக்காமல் விட்டிருக்கிறார்கள். இதற்குக் குறிப்புகளையும் காரணங்களையும் காட்டியிருக்கிறார்கள். காரணங்களைக் காட்டுகின்ற நேரத்தில் சென்ற ஆண்டு அவர்கள் அளித்த விளக்கத்தை நினைவூட்ட விரும்புகிறேன்!

பணத்தை ஒதுக்குகிறோம், திட்டங்களைத் தயாரிக்கிறோம், திட்டங்களைப் பகிர்ந்தளிப்பதில் முதலில் தயக்கம் ஏற்படுகிறது. ஆறு மாதங்களுக்குப் பின்தான் மளமள என்று திட்டத்திற்குப் பணம் கேட்கிறார்கள். அப்போது கண்மண் தெரியாமல் கொடுத்துவிடாது மிச்சம் பிடிக்க வேண்டியிருக்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால் இது நான் சொல்வதல்ல, நமது நிதி அமைச்சர் அவர்கள் சொன்னது பரீட்சைக்கு முன்னர் படிக்காத மாணவன், பரீட்சை சமயத்தில் விழுந்து விழுந்து படிப்பதைப் போல் இருக்கிறது. இனிமேல் நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம், திட்டமிட்டுப் பணியாற்றப் போகிறோம்! என்று சொன்னார்கள். இப்போது திட்டமிட்டுப் பணியாற்றியதைப் பார்க்கும் போது லட்சக்கணக்கான ரூபாய் பணம் தேவையான இடங்களுக்குச் செல்லாமல், மீத்து வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி மீத்து வைக்கப்பட்ட முறையினால் துண்டு விழக்கூடிய பட்ஜெட்டை உபரி பட்ஜெட்டாக ஆக்கி இன்றையத் தினம் காட்ட முடிந்திருக்கிறது. சிறு எடுத்துக்காட்டாகச் சொன்னால் ஒன்றை வைத்துக் கொண்டு மற்றவைகளை நிதி அமைச்சர் அவர்கள் ஊகித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

இலட்சியம் இலட்சங்களும்:

டி.ஐ.சைக்கிள் கம்பெனியில் 5 லட்சம் சைக்கிள உற்பத்தி செய்யக்கூடிய வகையிலே ஆலோசனை இருக்கிறது என்று சென்ற ஆண்டு சொன்னார்கள். இந்த ஆண்டு 3 லட்சம் சைக்கிள்கள் உற்பத்தி செய்ய திட்டம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். 5 லட்சத்திற்குப் போட்ட திட்டம் 3 லட்சம் அளவுக்குக் குறைந்திருக்கிறது. இதை யாரும் மறுப்பதற்கில்லை. 5 லட்சம் சைக்கிள்கள் தயாரிக்க வேண்டுமென்று நிதி அமைச்சர் அவர்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் அதற்கு போதுமான அளவு வசதி இல்லாததனலே 3 லட்சம் சைக்கிள்கள் தயாரிக்கிறோம் என்று அவர்கள் சொல்லியிருக்கலாம், 1 லட்சம் 2 லட்சத்திலே தகராறு வேண்டாம், 10-12 நாட்களாகக் கோடிக்கணக்கில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் சில லட்சம் போனால் பரவாயில்லை. திட்டமிட்டுக் காரியங்களை நிறைவேற்றும்போது, பொறுங்கள், பொறுங்கள்! என்று சொல்கிறார்கள். பார்த்தால் தெரிகிறது, பல துறைகளில் உள்ள குறைபாடுகளையும், எதிர்பார்த்தது கிடைக்காத தையும் எடுத்ததை நிறைவேற்றாததையும்! ஆகையால்தான் இன்றையத்தினம் பல்வேறு துறைகளில் மனக்குமுறல் இருக்கிறது.

புள்ளி விவரங்கள் போதா!

புள்ளி விவரங்களைக் காட்டி மக்களைத் திருப்தி செய்து விடலாம் என்று எண்ணி விடாதீர்கள்! ஹரிஜனங்களுடைய முன்னேற்றத்திற்காக இவ்வளவு கோடி ரூபாய் ஒதுக்கியிரு“ககிறோம், கல்விக்காக இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம் என்று புள்ளி விவரங்களைக் காட்டினால் போதாது. நாட்டு மக்கள், ஹரிஜனங்கள் சென்ற ஆண்டு இருந்ததைவிட இந்த ஆண்டு எந்த அளவுக்குச் சமுதாயத்தில் உயர்ந்திருக்கிறார்கள், சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு பசி, பட்டினி எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது, குடியிருப்பு வீடுகள் கட்டுவதில் இந்த ஆண்டு எவ்வளவு கஷ்டம் குறைந்திருக்கிறது என்பதைக் கணக்குப் பார்த்துத்தான் மதிப்பிடுவார்களே தவிர, கொடுக்கும் புள்ளி விவரங்களைப் பார்த்துத் திருப்தியடைந்து விடமாட்டார்கள்!

ஓவியத்தில் ஊதா நிற வண்ணம் இவ்வளவு, நீலம் இவ்வளவு கருநீலம் இவ்வளவு பயன்படுத்தினேன் நாலைந்து தூரிகைகள் உபயோகித்தேன், இரவு பகலாகக் கண்விழித்துத் தீட்டினேன் என்று சொன்னால் போதுமா? ஓவியம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறதா பார்த்தவர் பாராட்டும் விதமாக இருக்கிறதா? என்பது தானே முக்கியம்!

பாகல் மேட்டுப் பாதை...

அமைச்சரவை மக்களுக்குத் தேவையானவைகளை, குறைபாடுகளை, நாங்களே நேரில் போய்ப் பார்த்து நன்மை சாதிக்கப் போகிறோம் என்று எடுத்துச் சொன்னார்கள். சென்ற ஆண்டு, அதற்காக ஒரு புது முறையை நம்முடைய முதல் அமைச்சர் வகுத்தார். அதுதான் எல்லா பத்திரிகைகளும் பாராட்டி எழுதின பாகல் மேட்டுப் பாதை! முதல் அமைச்சர் பாகல்மேடு கிராமத்துக்குச் சென்றார். அதிகாரிகளையும் உடன் அழைத்துச் சென்றார். அங்குள்ள கிராம மக்கள் ஆச்சரியத்தால் வாய்பிளந்து, முதலமைச்சரும் அதிகாரிகளும் நம்முடைய கிராமத்திற்குக்கூட வருகிறார்களே! என்று ஆவலுடன் வரவேற்றார்கள். அவர்கள் அங்குள்ள குறைபாடுகளையெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். அவைகளை முதலமைச்சர் கேட்டு நேரடியாகவே உத்தரவு போட்டார் என்று பத்திரிகைகளிலே படித்தேன். நம்முடைய பத்திரிகைகளில் எல்லாம் இது அல்லவோ முறை! பாகல்மேடு பாதை! என்று பாராட்டியிருக்கிறார்கள். எனக்கு நான்கு நாட்களுக்கு முன் ஒரு சந்தேகம் வந்தது. ஆந்திராவுக்குச் சில இடங்கள் போய்விட்டதே, அதே போல் இந்தப் பாகல்மேடும் போய்விட்டதோ? என்று சந்தேகத்தைப் போலீஸ் அமைச்சரிடம் கேட்டேன், நல்லவேளையாக பாகல்மேடு போகவில்லை என்று தெரிந்து கொண்டேன்.

இப்பொழுது பாகல்மேடு இருக்கிறது. பாகல்மேட்டுப் பாதை இல்லை!

சென்ற ஆண்டு முதல் அமைச்சர் செய்து காட்டியது சிவப்பு நாடா முறையை ஒழிப்பதற்கு என்று சொன்னார்கள். பாகல்மேட்டுப் பாதை சிவப்பு நாடா முறையை ஒழிப்பதற்கு என்று சொன்னால், அதைத் தொடர்ந்து நடத்தாததற்குக் காரணம் என்ன? சிவப்புநாடா முறையை நீடித்துக் கொண்டிருப்பதால் என்ன நன்மை கிடைக்க முடியும்?

பாகல்மேட்டில் நடந்ததைப் படித்த பிறகு நானும் ஒரு பேராசைக்காரன், என்னுடைய தொகுதியிலும் அம்மாதிரி நேரடியான உத்தரவுகள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் தண்டலம் என்ற கிராமத்துக்கு முதல் அமைச்சர் வந்தார். அங்கு உள்ள கிராம மக்கள் குறைபாடுகளை எல்லாம் சொன்னார்கள். அதன் நிலைமை எப்படி இருக்கிறதென்றால், முதல் அமைச்சர் வசதியாக வருவதற்காக அங்குள்ள எஞ்சினீயர்கள் இரவு பகல் பாராமல் போட்டிருந்த பாதை இன்று மழையால் அடித்துக் கொண்டு போகப்பட்டிருக்கிறது. மறுபடியும் முதல் அமைச்சர் வந்தால், அந்தப் பாதையே தெரியாது.
பாகல்மேட்டுப் பாதை அவராலேயே கைவிடப்பட்டது. தண்டலத்தில் போடப்பட்ட பாதை அடைப்பட்டு போய்விட்டது!

காமராசர்: என்னை ஏமாற்றப் பார்த்தீர்கள்?

அண்ணா: நமது முதல் அமைச்சர் என்னை அழைத்துக் கொண்டு போய் ஏமாற்றலாம் என்று பார்த்தீர்களா? என்று சொல்கிறார். காங்கிரஸ் அல்லாத மாற்றுக் கட்சிக்காரர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில், முதல் அமைச்சர் பணம் செலவழிக்கக் கூடாது என்று திட்டமிட்டிருக்கிறாரா? அப்படிக் கூறி விடட்டுமே, பார்க்கலாம்! காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளில் பணம் கேட்க எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவு உரிமை எங்களுக்கும் இருக்கிறது. ஆகையால் ஏமாற்றுவதற்கு அல்ல. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் என்னுடைய தொகுதி மக்கள் என்பேரில் ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டுமென்பதுதான் என் நோக்கம் முதல் அமைச்சரைக் கேளுங்கள் பணம் தரவேண்டியவர் அவர்தான்! என்று நான் சொன்னேன். என்னுடைய தொகுதி மக்கள் என் மீது திருப்தியாக இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் தொகுதி உறுப்பினர் செய்ய வேண்டியதெல்லாம் செய்தார், முதல் அமைச்சருக்கு இன்னும் மனம் வரவில்லை. அவருக்கு மனம் வரவேண்டும் என்பதுதான். என்னுடைய தொகுதியில் உள்ளவர்கள், அவரை வரவேற்று வாழ்த்தி யனுப்பி யிருக்கிறார்கள். இரண்டாம் முறையாவும் அந்தத் தொகுதிக்கு வந்தார். இந்தத் தடவையாவது என் தொகுதியைக் கவனிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

ஒருவரையொருவர் ஏமாற்றுவது அல்ல, ஒருவரையொருவர் கேட்டு வாங்குவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது! ஆகையால் முதல் அமைச்சரை ஏமாற்ற வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் எனக்கு இல்லை. ஏமாற்ற வேண்டும் என்று கருதி, நான் ஒரு பஸ்பர்மிட் கேட்கவில்லை. எந்தவிதமான சலுகையும் எனக்காக நான் கேட்கவில்லை. சலுகைகள் கேட்க வேண்டும் என்றால், எனக்கு வேண்டிய மந“திரி சபையையே நான் பார்த்திருக்கிறேன். அப்பொழுதும் நான் சலுகைகள் கேட்கவில்லை. இப்பொழுதும் கேட்பதாக அபிப்ராயம் இல்லை. ஆகையால் இப்பொழுது ஏமாற்றம் ஒன்றும் இல்லை. சிவப்பு நாடா முறையை ஒழிப்பதற்கு தண்டலம் ஒரு வழி, சிவப்பு நாடா முறையை ஒழிப்பதற்கு பாகல்மேடு ஒருவழி என்று சொல்கிறார்கள்! ஆனால் அவைகளினால் கிடைத்த பலன் என்ன? ஒன்றும் காணவில்லை!

நம்முடைய நிதி அமைச்சர் அவர்கள் ஆண்டு அறிக்கையைப் படித்துவிட்டு புள்ளி விவரங்களை மட்டும் சொல்லாதீர்கள், அதன் பலனையும் பார்த்துச் சொல்லுங்கள்! என்று சொன்ன காரணத்தால், பலன் ஏற்படவில்லை என்பதை எடுத்துச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

காலம் கனிகிறது!

ஓவியத்தின் வசீகரத்தைப் பார்த்துத்தான், ஓவியரின் திறமையைச் சொல்ல வேண்டுமே யொழிய, அதிலே செலவான வண்ணத்தைப் பார்த்துச் சொல்வது சரியல்ல. வண்ணத்தைக் கொண்டு ஓவியத்தைத் தீர்மானிப்பது இயலாத காரியம். ஆகையினால்தான், நாங்கள் வேறு ஒரு வழியை ஒரு முறையைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்று நானும் என்னைச் சார்ந்த கட்சிக்காரர்களும் கருதுகிறோம். அது இந்தத் தலைமுறையில் நடக்காது என்று ஆளுங்கட்சியினர் சொல்கிறார்கள். அது இந்தத் தலைமுறையில் நடப்பதாக இல்லை என்றால், இந்தத் தலைமுறையிலே அதற்கு வேண்டிய துவக்கம் ஏற்பட்டால்தான் அடுத்த தலைமுறையிலாவது அதற்கு முடிவு ஏற்படும். அந்தக்காலம் வரப்போகிறது. கனியப்போகும் அந்தக் காலமும் வரப்போகிறது? அதற்கு முதலில் வித்து இடவேண்டும். வித்திட்டு, உரம் இட்டு, பயிராகி அதற்குப் பிறகு பலன் கிடைக்கும் காலம் வரட்டும் என்று காத்திருக்கலாம். அப்படிப்பட்ட காலம் தானே வரும் என்று நினைத்து நாங்கள் அதற்கு வித்திடாமல் இருக்க முடியாது என்ற காரணத்தால் நானும் என்னைச் சார்ந்த கழக உறுப்பினர்களும் ஆளும் கட்சியில் உள்ளவர்கள் எவ்வளவுதான் எங்களைக் கேலியாகச் சொன்னாலும் கூட, வடக்கு-தெற்கு என்பதை எடுத்துச் சொல்லிக்கொண்டே வருகிறோம்.

நாம் தனி நாடாக இருந்தால் வாழ முடியாது. தனியாக வாழ்வதற்கு நமக்கு என்ன வசதி இருக்கிறது என்ற பொருள்பட நம்முடைய நிதி அமைச்சர் அவர்கள் பன்முறை எடுத்துப் பேசுகிறார்கள். அவர்கள் எடுத்துப் பேசிய காரணத்தால் நான் அவருக்கு ஒன்று குறிப்பிட ஆசைப்படுகிறேன்.

தனி நாடாகும் தகுதி:

உண்மையிலே ஒருநாடு பெரிய நாடு சிறிய நாடு என்பதைப் பார்த்து அதன் எதிர்காலத்தை முடிவு செய்ய முடியாது.

“ஜிலீமீ வீனீஜீஷீக்ஷீNணீஸீநீமீ ஷீயீ ணீ நீஷீMஸீNக்ஷீஹ் பீமீஜீமீஸீபீˆ ஸீஷீN ஷீஸீ வீNˆ ˆவீக்ஷ்மீ ஷீக்ஷீ ஜீஷீஜீMறீணீNவீஷீஸீ தீMN ஹீMணீறீவீNஹ். ஜிலீமீ ஹீMமீˆNவீஷீஸீ ஷ்லீமீலீமீக்ஷீ ணீ நீஷீMஸீNக்ஷீஹ் வீˆ 2000 னீவீறீமீˆ றீஷீஸீரீ, ஷீக்ஷீ 200 னீவீறீமீˆ, பீஷீமீˆ ஸீஷீN னீணீளீமீ னீMநீலீ பீவீயீயீமீக்ஷீமீஸீநீமீ. றிமீக்ஷீலீணீஜீˆ வீஸீ ஷ்ணீக்ஷீ வீN னீவீரீலீN னீணீளீமீ ணீ பீஷீயீயீமீக்ஷீமீஸீநீமீ, தீMN வீஸீ Nலீமீ ணீக்ஷீN ஷீயீ ஜீமீணீˆமீ, வீN வீˆ Nலீமீ ஹீMணீறீவீNஹ் ஷீயீ Nலீமீ லீMனீணீஸீ தீமீவீஸீரீ NலீணீN Nணீறீளீˆ.

ஒருநாடு 2000 மைல் நீளமுள்ளதாக இருக்கலாம், அல்லது 200 மைல் நீளமுள்ளதாக இருக்கலாம், அந்த நாடு பெரிது என்பது அதனுடைய அகல நீளத்தைப் பொருத்து இல்லை. அந்த நாட்டு மக்களின் தன்மையைப் பொறுத்தே அதனுடைய முக்கியத்துவம் இருக்கிறது.

இப்படி யாரோ ஒரு சாதாரண அரசியல்வாதி குறிப்பிட்டிருந்தால் அதைப்பற்றி நான் சொல்ல மாட்டேன்.

சென்ற ஆண்டு ஜுலை மாதம் ஐரோப்பா கண்டத்திலிருக்கிற ஹேக் என்ற நகரத்தில், நமது பாரத நாட்டுப் பிரதமர் பண்டித நேரு அவர்களே அப்படி எடுத்துச் சொல்லியிருக்கிறார்!
ஆகவே ஒருநாடு சிறிய நாடா அல்லது பெரிய நாடா என்று கண்டுபிடிப்பது அதனுடைய செழிப்பைப் பொருத்திருக்கிறது. இப்படி குறுகிய மனபான்மையுடையவர் சொல்லவில்லை. பரந்த மனபான்மையுடைய பண்டித நேரு அவர்களே இப்படி எடுத்துச் சொல்லியிருக்கிறார்!

ஒரு நாடு பெரிய நாடாக இருந்தாலும், சிறிய நாடாக இருந்தாலும் அந்த நாடு தனியாக, தனியரசாக இயங்க வேண்டுமானால், அதன் மக்களை வாழவைக்கும் அளவு இயற்கை வளப்பம் இருக்கிறதா என்பதைப் பார்த்து அதைப்பற்றிக் கணக்கிட வேண்டும் என்று ஆங்கிலத்தில் சொல்லியிருக்கிறார்கள். அதாவது வையபில் எகனாமி என்று சொல்லுவார்கள். (க்ஷிவீணீதீறீமீ மீநீஷீஸீஷீனீவீநீ MஸீவீN) பொருளாதாரத் திட்டத்தின் கீழ்த் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய, பிறர் கையை எதிர்பார்க்காத அளவுக்கு இயற்கை வளம் இருக்கிறதா என்று பார்த்து இந்த நாட்டைப் பற்றித் தீர்மானம் செய்வார்கள். அப்படி பொருளாதார நிபுணர்களும், தத்துவாசிரியர்களும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த மன்றத்திலுள்ள காங்கிரஸ் உறுப்பினர்களில் பலர், அவர்களுடைய தொகுதியிலுள்ள வளங்களைப் பற்றியும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். தஞ்சை மாவட்டத்திலிருக்கிற நாகப் பட்டனம் உறுப்பினர் தோழர் என“.எஸ்.ராமலிங்கம் அவர்கள், தங்களுடைய நாகப்பட்டினத் துறைமுகத்திட்டத்தை எடுத்துக்கொண்டு, அதை விரிவுபடுத்தினால் எவ்வளவோ வருமானம் கிடைக்கும் என்றும், நாட்டை வளமுறச் செய்யலாம் என்றும் அங்கே எஃகுப் பெட்டிகள் தயார் செய்யக்கூடிய தொழிற்சாலை இருப்பதால், அவைகளை ஏற்றுமதி செய்து நாட்டை வலம்பெறச் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். அதன் மூலம் நாட்டின் செல்வம் வளரும் என்றும் குறிப்பிட்டார்.

நம்முடைய மதிப்பிற்குரிய வேதாரண்யம் தொகுதி உறுப்பினர் சர்தார் வேதரத்னம் அவர்கள் தங்களுடைய தொகுதியில் இருக்கக் கூடிய வளங்களைப்பற்றி எடுத்துச் சொல்லி, அங்கே முந்திரியையும் தேக்கு மரங்களையும் பயிரிட்டால் நல்ல வருமானம் கிடைக்கும் என்றும், அப்படிப் பயிர்ச் செய்வதற்கு வேண்டிய வசதிகள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

நாட்டு வளம்:

இப்படிப்பட்ட வளங்களைக் கணக்கில் எடுத்துப் பார்க்கும் போது, சிறிய நாடு பெரிய நாடு என்ற பிரச்சனை இல்லை. ஒரு நாட்டின் முக்கியத்துவம் அந்த நாட்டின் வளத்தைப் பொறுத்திருக்கிறது. அந்த நாட்டு மக்களின் நல்லப் பண்பைப் பொறுத்திருக்கிறது. இப்படிப் பண்டித நேரு அவர்கள் சொன்னது மட்டுமல்ல, மற்றொரு அரசியல் தலைவரும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதையும் இந்தச் சமயத்தில் அமைச்சர் அவைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இதை நான் சொல்ல வேண்டியதற்குக் காரணம், நம்முடைய நிதி அமைச்சர் அவர்கள், இவ்வளவு சின்ன நாடாக இருந்தால் செயற்கைச் சந்திரனைச் செய்யமுடியுமா? என்று கேட்டார்கள், ஒரு தடவை. அதைச் செய்வதற்கு ரஷ்யாவினால் தானே முடிகிறது! அமெரிக்காவினால் தானே முடிகிறது! நீங்கள் தமிழ்நாடு, திராவிட நாடு என்று பிரிந்து போனால், உங்களுக்குத் தேவையான இயந்திரங்களை வாங்கக் கூடிய அளவு பணம் கிடைக்காதே! என்று கழிவிரக்கப்பட்டார்!

செயற்கைச் சந்திரனைச் செய்வதற்கு ரஷ்யாவால் முடிந்தது போல, அமெரிக்காவால் முடிந்தது போல, அந்த நாடுகளை விடச் சிறியதாக இருக்கக்கூடிய இங்கிலாந்து நாட்டிலே செயற்கைச் சூரியனை செய்வதற்கு இன்றையத் தினம் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சூரியனுக்கு எந்த அளவு உஷ்ணம் இருக்கிறதோ, அந்த அளவு உஷ்ணத்தை வெப்பத்தை-விஞ்ஞான முறையில் பெற்றுக் கையாளலாம் என்று கண்டிருக்கிறார்கள்.

அர்த்தமற்ற பிரச்சினை:

ஆகையால் சின்ன நாடா பெரிய நாடா என்ற பிரச்சினை அர்த்தமற்றது. நாங்கள் சொன்னால் ஏழை சொல் அம்பலம் ஏறாது என்ற காரணத்தால், மதிக்கத்தக்க, வழிபடத்தக்க பண்டித நேரு அவர்கள் சொன்ன வாசகத்தைச் சொன்னேன்.

மற்றொரு தலைவருடைய வாசகத்தையும் சொல்ல விரும்புகிறேன்.

“Nஷீ Nலீவீஸீளீ NலீணீN ˆனீணீறீறீ ஸீணீNவீஷீஸீˆ லீணீபீ ஸீஷீ க்ஷீஷீறீமீ Nஷீ ஜீறீணீஹ் வீஸீ வீஸீNமீக்ஷீஸீணீNவீஷீஸீணீறீ ணீயீயீணீவீக்ஷீˆ ஷ்ணீˆ பீணீஸீரீமீக்ஷீஷீMˆ ணீஸீபீ பீமீயீமீணீNவீˆN ணீNNவீNMபீமீ. மி க்ஷீமீயீMˆமீ Nஷீ ˆMதீˆநீக்ஷீவீதீமீ Nஷீ Nலீவீˆ பீணீஸீரீமீக்ஷீஷீMˆ ணீஸீபீ பீமீயீமீணீNவீˆN ணீNNவீNMபீமீ. மி தீமீறீவீஸ்மீ NலீணீN வீN ஷ்வீறீறீ தீமீ வீஸீ Nலீமீ வீஸீNமீக்ஷீமீˆN ஷீயீ Nலீமீ (ˆMஜீமீக்ஷீ ˆNணீNமீˆ) Nலீமீனீˆமீறீஸ்மீˆ NலீணீN ˆனீணீறீறீ ˆNணீNமீˆ ஸீஷீN றீமீணீஸ்மீ Nஷீ Nலீமீனீ (ˆMஜீமீக்ஷீ ˆNணீNமீˆ) Nலீமீ மீஸீNவீக்ஷீமீ க்ஷீமீˆஜீஸீˆவீதீறீவீNஹ் யீஷீக்ஷீ னீணீளீவீஸீரீ பீமீநீவீˆவீஷீஸீˆ ஷ்லீவீநீலீ னீணீஹ் ணீயீயீமீநீN ணீறீறீ னீணீஸீளீவீஸீபீ.”
-ஙிMக்ஷீனீமீˆமீ றிக்ஷீமீனீவீமீக்ஷீ ஹி.ழிM

சிறிய நாடுகளைப் பெரிய நாடுகள் புறக்கணித்து விடாது. புறக்கணிக்கக்கூடாது, புறக்கணிக்க முடியாது, புறக்கணித்தால் அவைகளுக்கே ஆபத்து என்று சொல்லியிருப்பவர் பர்மிய நாட்டுப் பிரதம மந்திரி யூ.நூ. அவர்கள்.

இதை நான் சொல்வதற்குக் காரணம் தனி நாடு சிறுநாடு. ஆகவே வாழ்வதற்கு வழி இல்லை என்று சொல்கிறார்களே, அதற்காகத்தான்! ஒருநாடு பெரிய நாடாக இருந்தாலும், சிறிய நாடாக இருந“தாலும், அது எந்த அளவுக்கு இயற்கை வளத்தைப் பெற்றிருக்கிறதோ, அந்த இயற்கை வளத்திற்கும் உலகத்திற்கும் பொறுத்துத்தான் ஒரு நாட்டினுடைய வாழும் சக்தி அடங்கியிருக்கிறது.

அந்நியச் செலாவணியைத்தருவது தென்னாடே!

அப்படியிருக்கும்போது நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுகிற அந்நியச் செலாவணியைப் பற்றி நான் இங்கே கொஞ்சம் குறிப்பிடப் பிரியப்படுகிறேன். அந்நிய செலவாணியில்லாமல் நாம் வெளிநாடுகளிலே இருந்து இயந்திரங்களையும் மற்றவைகளையும் வரவழைக்க முடியாது. பாரதத்தோடு ஒன்றாக இருந்தால்தான் அந்நியச் செலாவணி கிடைக்கும். ஆகையால் தான் நாங்கள் அங்கே இருக்கிறோமே தவிர என்று எடுத்துச் சொன்னார்கள். அங்கே இருக்கிறோமே தவிர என“று சொல்வது தவறு. அவர் அப்படிச் சொன்னார் என்ற கருத்தை நான் சொல்லவில்லை. நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் வடநாட்டிலிருந்து வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு பிறகு பிரிந்து கொள்ளலாம், அண்ணாதுரையுடன் சேர்ந்து கொண்டு விடலாம் என்று திட்டமிட்டிருப்பதாக இரண்டு மூன்று வடநாட்டுப் பத்திரிகைகள் அவரைக் கண்டித்து எழுதியிருந்தன. ஆகவே நிதியமைச்சரை அப்படிப்பட்ட சந்தேகம் எழும்படியான சிக்கலான நிலைமைக்கு நான் ஆளாக்கமாட்டேன் என்னுடைய கருத்தைச் சொன்னேன்.

வெளிநாட்டுச் செலாவணி இருந்தால்தான் நமக்கு நல்ல இயந்திரங்கள் கிடைக்கும் என்று அவர் எடுத்துச் சொன்னார். என்னுடைய வாதம் அந்நியச் செலாவணி பெறத் தக்க அளவு, வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடிய பொருகள்கள் இந்தியத் துணைக் கண்டத்திலேயே நம்முடைய தென்னாட்டில்தான் அதிகம். இந்தியத் துணைக்கண்டத்தில் மற்ற இடங்களில் மிகக்குறைவு என்பது என்னுடைய வாதம்.

வெளிநாடுகள் விரும்பி வாங்குவது, வெளிநாட்டுக்காரர்கள் தேவை என்று கருதுகிற எந்தப் பொருளைப் பார்த்தாலும் இங்குதான் அவை ஏராளமாக உள்ளன. நம்முடைய நாட்டுத் தோல், (பிவீபீமீˆ ணீஸீபீ ˆளீவீஸீˆ) தேயிலை, காப்பி, ரப்பர், மிளகு, வாசனைத் திரவியங்கள், முந்திரி, தோரியம், யுரேனியம், பாக்சைட், மானசைட் இப்படிப் பட்டவைகள் வெளிநாடுகளுக்கு இன்றைய தினம் தேவைப்படுகின்றன. இங்கே விளையும் வேர்க்கடலை டாலர்களையும், ஸ்டெர்லிங்குகளையும் இந்தியத் துணைக் கண்டத்திற்கு வாங்கியளிக்கிறது. இவ்வளவு அதிகமான அளவு டாலர் வாங்கித் தரும் பொருளை வைத்துக் கொண்டிருக்கும் நாம் அந்நியச் செலாவணியைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

நம் வீட்டுச் சட்டியில் வெண்ணெய் இருக்கும் போது, அடுத்த வீட்டில் நெய் கொடுத்தார்கள் என்று பாராட்டுவதிலே என்ன பொருள் இருக்க முடியும்?

அந்நியச் செலாவணியைத் தேவையான அளவுக்கு வாங்கித் தரத்தக்க இந்தப் பொருள்களை, நாம் தனி நாடு என்றால், எந்த நாடுகளுக்கு அவை தேவையோ அங்கு கொடுத்து, அந்த நாடுகளிலிருந்து பெறத்தக்கவைகளை நாம் பெற முடியும்! நாம் தனி நாடாக இருந்தால் என்ன செய்ய முடியும் என்று கேட்பவர்களுக்கு இதைச் சொல்கிறேன்!