அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வளம் காண வழி
4

1947 இல் பண்டித நேரு அவர்கள் சொன்னார்:

“ஜிலீமீ க்ஷீவீரீலீN ஷீயீ ணீஸீஹ் ஷ்மீறீறீ-நீஷீஸீˆNவீNMNமீபீ ணீக்ஷீமீணீ Nஷீ ˆமீநீமீபீமீ யீக்ஷீஷீனீ Nலீமீ வீஸீபீவீணீஸீ திமீபீமீக்ஷீணீNவீஷீஸீ ஷீக்ஷீ Nலீமீ Mஸீவீஷீஸீ லீணீˆ ஷீயீNமீஸீ தீமீமீஸீ ஜீMN யீஷீக்ஷீஷ்ணீக்ஷீபீ. ஙிமீயீஷீக்ஷீமீ ணீஸீஹ் ˆMநீலீ க்ஷீவீரீலீN ஷீயீ ˆமீநீமீˆˆவீஷீஸீ வீˆ மீஜ்மீக்ஷீநீவீˆமீபீ, Nலீமீக்ஷீமீ னீMˆN தீமீ ணீ ஜீக்ஷீஷீஜீமீக்ஷீறீஹ் நீஷீஸீNவீNMNமீபீ யீMஸீநீNவீஷீஸீவீஸீரீ, யீக்ஷீமீமீ வீஸீபீவீணீ. மிN னீணீஹ் தீமீ ஜீஷீˆˆவீதீறீமீ Nலீமீஸீ ஷ்லீமீஸீ மீஜ்Nமீக்ஷீஸீணீறீ வீஸீயீறீMமீஸீநீமீˆ லீணீஸ்மீ தீமீமீஸீ க்ஷீமீனீஷீஸ்மீபீ ணீஸீபீ க்ஷீமீணீறீ ஜீக்ஷீஷீதீறீமீனீˆ யீணீநீமீ Nலீமீ நீஷீMஸீNக்ஷீஹ் Nஷீ நீஷீஸீˆவீபீமீக்ஷீ ˆMநீலீ ஹீMமீˆNவீஷீஸீ வீஸீ ஷீதீழீமீநீNவீஸ்மீறீஹ் ணீஸீபீ வீஸீ ணீ ˆஜீவீக்ஷீவீN ஷீயீ க்ஷீமீறீணீNவீஸ்மீ பீமீNணீNநீலீனீமீஸீN, யீணீக்ஷீ க்ஷீமீனீஷீஸ்மீபீ யீக்ஷீஷீனீ Nலீமீ மீனீஷீNவீஷீஸீணீறீவீˆனீ, ஷீயீ Nஷீ-பீணீஹ்....NலீMˆ வீN னீணீஹ் தீமீ பீமீˆவீக்ஷீணீதீறீமீ Nஷீ யீவீஜ் ணீ ஜீமீக்ஷீவீஷீபீ, ˆணீஹ் Nமீஸீ ஹ்மீணீக்ஷீˆ, ணீயீNமீக்ஷீ Nலீமீ ஷ்லீவீநீலீ Nலீமீ மீˆNணீதீறீவீˆலீனீமீஸீN ஷீயீ Nலீமீ யீக்ஷீமீமீ வீஸீபீவீணீஸீ ˆNணீNமீ, ணீN Nலீமீ மீஸீபீ ஷீயீ ஷ்லீவீநீலீ Nலீமீ க்ஷீவீரீலீN Nஷீ ˆமீநீமீபீமீ னீணீஹ் தீமீ மீஜ்மீக்ஷீநீவீˆமீபீ Nலீக்ஷீஷீMரீலீ ஜீக்ஷீஷீஜீமீக்ஷீ நீஷீஸீˆNவீNMNவீஷீஸீணீறீ ஜீக்ஷீஷீநீமீˆˆ ணீஸீபீ வீஸீ ணீநீநீஷீக்ஷீபீணீஸீநீமீ ஷ்வீNலீ Nலீமீ நீறீமீணீக்ஷீறீஹ் மீஜ்ஜீக்ஷீமீˆˆமீபீ ஷ்வீறீறீ ஷீயீ Nலீமீ ணீக்ஷீமீணீ நீஷீஸீநீமீக்ஷீஸீமீபீ.

இந்திய பூபாகத்தில் எந்தப் பகுதியும் சரியான முறையில் பிரிந்து போகலாம் என்ற உரிமை பேசப்பட்டிருக்கிறது. அப்படி பிரிந்து போக வேண்டும் என்று உரிமையைக் கொண்டுவருவதற்கு முன்னால், சட்டப்படி சுதந்தர இந்தியா ஏற்பட வேண்டும்.

நாட்டுக்கு விடுதலை கிடைத்தது, நல்ல ஆட்சி ஏற்பட்டு ஒரு 10 ஆண்டுக்குப் பிறகு எந்த நாடாவது, எந்தப் பகுதியாவது பிரிந்து போகவேண்டும் என்றால், அங்கு இருக்கும் மக்களின் ஒப்புதலைப் பெற்று பிரிந்து போகலாம், பிரிய வேண்டும் என்ற பாத்தியதையை கொண்டாடலாம்! என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால்தான் நான் இதைப் படித்தேன். 10 ஆண்டுகள் என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து எனக்கு வேடிக்கையாக இருந்தது! சென்ற ஆண்டு நிதி நிலை அறிக்கையின் போது, நிதி அமைச்சர் அவர்கள் 10 ஆண்டுகளுக்காவது நமக்குள் ஒரு ஒப்பந்தம் (ஜிக்ஷீMநீமீ) இருக்க வேண்டும் என்று சொன்னார். இதிலும் 10 ஆண்டு என்றுசொல்லப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் வேண்டும் என்று ஜனாப் ஜின்னா கேட்டபோது பண்டித நேரு இதைச் சொன்னார் ஜனாப் ஜின்னா கேட்ட காலத்தில் ஜனாப் ஜின்னாவை 10 வருட காலம் பொறுத்திருக்கச் சொன்னார். ஆனால் அவர் பொறுக்க மாட்டேன் என்று சொன்னார். 10 வருடத்திற்குள் ஜனாப் ஜின்னா பாகிஸ்தான் பெற்றார்.

இவையெல்லாம் முடிந்த பிறகு, இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது 10 ஆண்டு முடிந்த 11 வது ஆண்டில் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம். பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய வாசகம் என் உள்ளத்தில் உணர்ச்சியையும் நல்ல நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது. 10 ஆண்டு காலம் பொறுத்து இருந்தோம்.

நமது உரிமை:

ஐந்தாண்டுத் திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம். தொழில் வளர்ச்சி குன்றியிருக்கிறது. நமது விவசாயம் செழிக்க வில்லை. தொழிலாளர்கள் தொல்லைப்படுகிறார்கள். தமிழர்கள் சிலோனுக்குக் கூலிகளாகச் செல்லயிருக்கிறார்கள். நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. நம் நாட்டின் செல்வம் நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டேயிருக்கிறது. நாம் ஒரு காலத்தில் உலகம் புகழத்தக்க முறையில் வாழ்ந“துவந்தவர்கள். அந்தக் காலத்தில் நம் நாட்டின் பண்பாடு உலகம் முழுவதும் பரவி இருந்தது. தனி நாடாகப் பிரியவேண்டும் என்று கூறும் உரிமையைக் கொண்டாடலாமென்று பண்டித நேருவே சொல்லியிருக்கிறார். அந்த பாத்தியதையை, உரிமை என்று நேருவே கூறியிருக்கிறார். அதை இந்த மாமன்றத்தில் இன்றைய தினம் எழுப்புவதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். பெருமைப்படுகிறோம்! அதே நேரத்தில் அப்படி நாங்கள் கேட்கிறபோது உங்களுடைய எண்ணப்படி அது உங்களுக்குக் கிடைக்காது. அதைத் தரமாட்டோம். அது இந“த தலைமுறையில் கிடைக்காது. இன்னொரு தலைமுறைக்குப் பார்க்கலாம்! என்று சொல்லுகிறார்கள். அது எனக்குத் தெரியாதது அல்ல. ஆனால் ந்தக் காரணத்தினாலோ நாங்கள் அதை வற்புறுத்துகிற நேரத்தில் நம்முடைய தலைவர்களுக்கும், காங்கிரஸ் அமைச்சர்களுக்கும், ஏதாவது இதனால் மனக்கசப்பு ஏற்பட்டிருக்குமாயின், அருள் கூர்ந்து எங்களுடைய ஆழ்ந்த நம்பிக்கையை தயவு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களுடைய ஆழ்ந்த நம்பிக்கையை உணராமல் வெறும் அரசியலுக்காகப் பேசுவதானால் இதை நாங்கள் விட்டுவிடுவது என்பது எளிதான காரியமாக இருக்கும். நமது நிதி அமைச்சர் அவர்கள் கவர்னர் பேருரையின் மீது பேசும் போதுகூட கொள்கை முரண்பாடு இருக்கிறது, என்று மிகக் கனிவோடு சொன்னார். அது உண்மைதான்!

கொள்கை முரண்பாடு என்பது அடிப்படைத் தத்துவத்தில் உரிமைப் பிரச்சினையாக இருப்பதாலும் எங்கள் உரிமையை இழந்துவிட நாங்கள் மறுக்கிறோம்.

இதயத்தைக் கேட்கிறேன்!

நாங்கள் எழுப்புகிற பிரச்சனைகளுக்குச் சாமர்த்திமான பதில் அளிக்கிறார். அந்தச் சாமர்த்தியத்தை நான் பாராட்டுகிறேன். நாங்கள் அவரிடமிருந்து எதிர் பார்ப்பது எங்களுடைய வாதங்களை எப்படி மறுக்கிறார்கள் என்ற வாதத்திறமையை அல்ல. அவர்கள் எப்படி அடித்து மடக்கிப் பேசுகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட நிதி அமைச்சர் அவர் என்று நாந் நிச்சயமாகக் கருதுகிறேன். அவருடைய இதயத்தைக் கேட்கிறேன். அவருடைய தோழர்களாகிய காங்கிரசுக்காரர்களைக் கேட்கிறேன்! அத்தனை பேர்களுடைய இதயத்தையும் கேட்கிறேன்! தாயத்திருநாடு பெறுவதற்கு அவர்களின் ஒத்துழைப்பைக் கேட்கிறேன்! அவர்கள் தங்கள் இதயத்தில் ஒரு ஓரத்தில் இந்தப் பிரச்சினைக்கு இடம் ஒதுக்கி வைத்துப் பார்த்தால்தான், இதைப் பற்றிப் புரியும் என்பதைச் சொல்லி, அந்தநாள் விரைவில் நெருங்கிக் கொண்டு வருகிறது என்றும் சொல்லிக் கொள்ளுகிறேன்!

நிதி நிலைமையிலிருக்கும் குறையை, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையிலும் பற்றாக்குறையிருப்பதை அவர்களுக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறோம் என்று கூறிக்கொண்டு என்னுடைய உரையை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்!

10.4.58 வியாழன் அன்று, வரவு-செலவு திட்டத்தின் கீழ் மானியம் ஒதுக்கும் விவாதத்தின் இறுதியில், அறிஞர் அண்ணா அவர்கள் பேசியது.

சட்டமன்றத் தலைவர் அவர்களே! ஒரு திங்களுக்கு மேலாக, இந்த ஆண்டு மாநில அரசாங்கத்தினர் எதிர்பார்க்கிற இந்தத் தொகையை எந்தெந்த நோக்கத்தோடு எந்தெந்தத் துறையில் எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்பதைப் பற்றி சர்க்கார் தரப்பிலே இருந்தும், எதிர்தரப்பிலே இருந்தும் கருத்துக்களை அவரவர்கள் எடுத்துச் சொல்வதன் மூலம் முடிவடைகிற இந்தத் தருவாயில், ஒரு தெளிவான நிலைமைக்கு வந்திருக்கிறோமென்று நினைக்கிறேன். இந்த ஆண்டுக்காக சர்க்காரிடத்தில் ஒப்படைக்கப் பட்டிருக்கிற இந்தத் தொகையை, எந்த வகையிலே அவர்கள் பலபல துறைகளுக்கு ஒதுக்கி, தக்க விதத்திலே பயன்படுத்துகிறார்களோ அதைப் பொறுத்துத்தான் சிறப்பு இருக்கிறது என்பதுமட்டுமல்ல, அதைப் பொறுத்துத்தான் இந்த நாட்டினுடைய நன்மை தீமைகளும் அடங்கியிருக்கின்றன. பிறருடைய பாராட்டுதலைப் பெற வேண்டிய பருவத்தைக் கடந்துவிட்டேன் என்று நேற்றையதினம் நிதி அமைச்சர் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

சி.சுப்பிரமணியம்: ஆசைத் தம்பி அவர்களுடைய...

அண்ணா: அவருடைய பாராட்டுதலைக் கோருகிற பருவத்தில் இல்லையென்று சொன்னார்கள். ஆசைத்தம்பி பாராட்டுதலைப் பெறுவதுடன் மற்ற பாராட்டுதல்களையும் சேர்த்துக் கொள்வது நிதி அமைச்சருக்கு நஷ்டமாக இராது. லாபத்தில்தான் முடியுமென்று அவருக்குக் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

யாருக்கும் திருப்தியில்லை:

இங்கே எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துரைகளில் இன்றைய தினம் சர்க்கார் நடந்து கொள்கிற போக்கு அனைவருக்கும் திருப்தியைக் கொடுத்துவிட்டது என“று ஒரு குறிப்பிட்ட அங்கத்தினராவது தைரியமாக இந்த மன்றத்திலே பேசவில்லை என“பதை ஆட்சியாளர்கள் தயவு செய்து மனதிலே பதியவைத்துக் கொள்ள வேண்டும். கட்சிக்குக் கட்சி மாறுதல் இருக்கிற காரணத்தினாலே ஒருவர் சொல்கிற கருத்தை மற்றவர்கள் மறுக்கிறார்கள் என்றாலும் கூட, தொகுதிகள் சரியாகக் கவனிக்கப்பட வேண்டுமென்று அந்தந்தத் தொகுதி உறுப்பினர்கள் கட்சிபற்றிய நிலைமையைக் கூட ஓரளவுக்கு ஒதுக்கி வைத்து எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
தொகுதிகள் சரியான முறையில் கவனிக்கப்படவில்லை, போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை, ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் செலவழிக்கப்படவில்லை என்று மூன்று வகையான குற்றச்சாட்டுகள் எடுத்துச் சொல்லப்பட்டன. நிர்வாக ஊழல்கள் ஏராளமான அளவுக்கு இருக்கின்றன என்று எங்கள் தரப்பிலே உள்ளவர்கள் சுட்டிக்காட்டியதைவிட, ஆளும் கட்சியிலுள்ளவர்கள் அதிகமான அளவுக்குச் சுட்டிக்காட்டியிருக் கிறார்கள். இதை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிச்சயமாக உணர்ந்து பார்க்க வேண்டுமென்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைய தினம் ஆளுங்கட்சியில் இருக்கிறவர்கள் பெற்றிருக்கிற செல்வாக்கு அவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதைப் போலவே, அவர்களுக்குப் பெரிய பொறுப்பையும் கவலையையும் அளிக்க வேண்டும். அவர்களைச் சுலபத்தில் வீழ்த்திவிடக் கூடிய ஒரு எதிர்க்கட்டி உருவாகியிருக்குமானால் ஆளும் கட்சியினர் சிறிய சிறிய தவறுகளைச் செய்தாலும் அஃது பொதுமக்களை அதிக நாட்களுக்குப் பாதிக்காது. ஆனால் இன்றைய தினம் ஆளும் கட்சியில் உள்ளவர்களை எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் வீழ்த்திவிட முடியாது என்கிற நிலைமை இருக்கிற காரணத்தினால்தான், எதிர்தரப்பில் உள்ளவர்கள் எந்தக் கருத்துக்களை எடுத்துச் சொன்னாலும், அந்தக் கருத்துக்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய பெருந்தன்மை அவர்களுக்கு இருக்க வேண்டும்.

நம்முடைய நிதி அமைச்சர். இந்த மன்றத்திலும் சரி, வெளியிலும் சரி, உருவான நல்ல கருத்துக்களை எதிர் தரப்பிலிருந்து பெற முடியவில்லை என்று எடுத்துச் சொல்லி வருகிறார்கள். உருவான கருத்துக்களை அவர்கள் தரமுடியவில்லை என்பது அவர்களுக்கு இருக்கின்ற பயிற்சிக் குறைவு காரணமாக இருக்கலாம், அல்லது தருகின்ற எல்லா கருத்துக்களும் உருவான கருத்துக்கள் அல்ல என்று சர்க்காருடைய அகராதியில் நீண்ட நாளாகப் பழக்கப்பட்டதின் காரணமாக இருக்கலாம். எதிர்க்கட்சியில் உள்ளவர்களும் அந்தந்தத் தொகுதியில் உள்ள குறைபாடுகளை நீக்கவேண“டுமென்று சொன்னால், உருவான கருத்துக்கள் என்கிற முறையில்தான் சொல்கிறார்கள் என்று ஆளும்கட்சியில் உள்ளவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டும்.

வடக்கு-தெற்குப் பிரச்சினை:

பொதுவாக இந்த மாநிலம், இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. அதன் காரணத்தினால் நன்மையோ தீமையோ, வளர்ச்சியோ குந்தகமோ, இந்தியத் துணைக்கண்டத்தின் பெரிய திட்டங்களைப் பொறுத்துதான் இருக்கிறது. அதனுடைய நிதி நிலைமையைப் பொறுத்து நம்முடைய நிதிநிலைமை பாதிக்கப்படுகின்றது. ஆகையால் நாங்கள் பேசுகின்ற நேரத்தில் அதனை குறிப்பிடவேண்டியவர்களாக இருக்கிறோம். அப்படி குறிப்பிடுகின்ற நேரத்தில் வடக்கு, தெற்கு என்கிற வார்த்தைகளை அதிகமாக உபயோகப்படுத்துகிறோம் என்று நிதி அமைச்சர் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகிறார். வடக்கு தெற்கு என்று சொல்லுகின“ற காரணத்தினால் அது குறைவுடையது என்றோ, அல்லது அதை வைத்துக் கொண்டு மற்றப் பிரச்சினைகளை ஆராய்கின்றபோது, பிரச்சினைகளின் தன்மை கெட்டுவிடும் என்றோ நிதியமைச்சர் எண்ணிக் கொள்ளக்கூடாது.

வரவு செலவு விவாதத்தின“ போது, திராவிடநாடு பிரிவினைப் பற்றி பலர் பலவிதமாகப் பேசினார்கள். அந்தப் பிரச்சினை அதிகமாகக் கிளம்பிய காரணத்தால் அதைப்பற்றி என்னுடைய கருத்துக்களை நான் சொன்னதற்கு, நமது நிதி அமைச்சர் பதில் அளிக்கின்ற தன்மையில், பூர்வோத்திரத்தை ஆராய்ந்து கட்சியின் பூர்வோத்திரத்தைப் பற்றியும், கட்சியின் பூர்வோத்திரங்களில் எனக்கு இருந்த தொடர்புகளைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்கள். எங்களுடைய பூர்வோத்திரங்கள் நிதி அமைச்சரின் கவனத்தை இழுத்தது பற்றி நான் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியில் உள்ள தனிப்பட்ட நபர்களைப் பற்றியும் ஆராய வேண்டும் என்று ஆரம்பித்தால் அரசியலில் உள்ள பல அழுக்குகள் வெளிப்படையாகத் தெரிந்துவிடும். இந்த மன்றத்தில் அதிகப் பழக்கம் இல்லாமல் நான் இருக்கிறேன். ஆனால் நீண்ட நாள் பழக்கம் உள்ள நிதி அமைச்சர் அவர்கள் இந்த முறைதான் திருப்தி தருகிறது என்று நினைக்கிறார். அவர்களுக்கு அழுக்கைக் கிளறிப் பார்ப்பதில் பிரியம் இருக்குமானால் நான் அதைத் தடுக்கவில்லை. பூர்வோத்திரத்தை ஆராய்வதற்கும், திராவிட நாடு பிரிவினைக்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உண்டு என்று கருதினால் பலன் இல்லை.

அவர்களே பேசுகிறார்கள்:

வடநாட்டில் வளர்ச்சி அதிகம் என்பதும், தென்னாட்டில் வளர்ச்சி குறைவு என்பதும், எங்கள் தரப்பில் உள்ளவர்கள் மட்டும்தான் சொல்கிறார்கள் என்கிற பொருள் அல்ல! எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அகப்படாதவர்களும், நிதியமைச்சரின் பூர்வோத்திர ஆராய்ச்சி களுக்கு அவசியமற்றவர்களும் அப்படிப் பேசியிருக்கிறார்கள்!
ஏற்கனவே இருந்த ஒரு ஏகாதிபத்தியத்தை நீக்கிவிட்டு மற்றொரு புதிய ஏகாதிபத்தியத்தை நாம் கொண்டு வரவேண்டுமா என்கிற கருத்தை ஆளும் கட்சியைச் சார்ந்த அவர்களே எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்! அப்படி எடுத்துச் சொல்லப்பட்ட இடம் டில்லி பாராளுமன்றம்! அதை எடுத்துச் சொல்லியவர் இப்பொழுது டில்லியில் பாராளுமன்றத் தலைவராக இருக்கின்ற கனம் அனந்தசயனம் அய்யங்கார் அவர்களே அவர் முன்னாள் உறுப்பினராக இருந்த நேரத்தில் எடுத்துச் சொன்னார். ஆகவே திரு. அனந்தசயனம் அய்யங்கார் காங்கிரஸ் உறுப்பினராக இருந்து கொண்டு டில்லி பாராளுமன்றத்தில்,

“கிக்ஷீமீ கிலீனீமீபீணீதீணீபீ ணீஸீபீ ஙிஷீனீதீணீஹ் Nலீமீ ஷீஸீறீஹ் ஜீறீணீநீமீˆ ஷ்லீமீக்ஷீமீ க்ஷீணீஷ் னீணீNமீக்ஷீவீணீறீ யீஷீக்ஷீ Nலீமீ Nமீஜ்Nவீறீமீ வீஸீபீMˆNக்ஷீஹ் வீˆ ணீஸ்ணீவீறீணீதீறீமீ வீஸீ ஜீறீமீஸீNஹ்? மி க்ஷீமீஜீக்ஷீமீˆமீஸீNமீபீ வீஸீ Nலீமீ ஜீக்ஷீமீஸ்வீஷீMˆ லிமீரீவீˆறீணீNவீஸ்மீ கிˆˆமீனீதீறீஹ் 5 பீவீˆNக்ஷீவீநீNˆ, யீஷீMக்ஷீ ஷீயீ ஷ்லீவீநீலீ லீணீஸ்மீ Nலீமீ றீணீக்ஷீரீமீˆN ணீக்ஷீமீணீ Mஸீபீமீக்ஷீ நீஷீNNஷீஸீ நீMறீNவீஸ்ணீNவீஷீஸீ. ஜிலீமீக்ஷீமீ வீˆ ஸீஷீN ணீ ˆவீஸீரீறீமீ ˆஜீவீஸீவீஸீரீ னீவீறீறீ Nலீமீக்ஷீமீ. கீலீஹ் ˆலீஷீMறீபீ ஹ்ஷீM தீக்ஷீவீஸீரீ ணீறீறீ Nலீமீ நீஷீNNஷீஸீ Nஷீ கிலீனீமீபீணீதீணீபீ Nஷீ தீமீ ˆஜீMஸீ வீஸீNஷீ ஹ்ணீக்ஷீஸீ ணீஸீபீ ஷ்ஷீஸ்மீஸீ வீஸீNஷீ நீறீஷீNலீனீ ணீஸீபீ ˆமீஸீN தீணீநீளீ Nஷீ Nலீமீ ஸ்மீக்ஷீஹ் ஜீறீணீநீமீ ஷ்லீமீக்ஷீமீ வீN லீணீˆ நீஷீனீமீ யீக்ஷீஷீனீ? மிˆ NலீணீN ஸீஷீN Nலீமீ ஸ்மீக்ஷீஹ் யீணீநீN ணீரீணீவீஸீˆN ஷ்லீவீநீலீ ஷ்மீ லீணீபீ தீமீமீஸீ யீவீரீலீவீஸீரீ, NலீணீN நீஷீNNஷீஸீ ஷ்லீவீநீலீ வீˆ ஜீக்ஷீஷீபீMநீமீபீ வீஸீ Nலீவீˆ நீஷீMஸீNக்ஷீஹ் ஷ்ணீˆ தீமீவீஸீரீ Nணீளீமீஸீ Nஷீ விணீஸீநீலீமீˆNமீக்ஷீ Nஷீ தீமீ ஷ்ஷீஸ்மீஸீ வீஸீNஷீ நீறீஷீNலீ ணீஸீபீ ˆமீஸீN தீணீநீளீ Nஷீ Mˆ? கீணீˆ வீN ஸீஷீN யீஷீக்ஷீ NலீணீN ஷ்மீ யீணீMரீலீN Nலீமீ ஙிக்ஷீவீNவீˆலீ மினீஜீமீக்ஷீவீணீறீவீˆNˆ? கிக்ஷீமீ ஷ்மீ ரீஷீவீஸீரீ Nஷீ ˆMஜீஜீறீணீஸீN ஷீஸீமீ வீனீஜீமீக்ஷீவீணீறீவீˆனீ தீஹ் ணீஸீஷீNலீமீக்ஷீ வீனீஜீமீக்ஷீவீணீறீவீˆனீ?

என்று கேட்கிறார்கள் என்றால் அது நான் சொல்லுகிற வடநாடு தென்னாடு என்கிற அதே கருத்தை அதிகமான அளவில் விவரித்துச் சொல்லாவிட்டாலும், மனதில் அவருக்கு அந்தக் கருத்து இருந்திருக்கிறது என்பதை இந்த மன்றத்தில் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சட்டசபை விவாத முறை:

பொதுவாக இந்த மன்றத்தில் நடத்தப்படும் விவாதம் மிகுந்த உயர்ந்த தரத்தில் அமைந்திருப்பதாகவும், அதனுடைய தரத்தின் தன்மை இன்னும் பெருந்தன“மையோடு உயர்ந்த முறையில் நடத்தப்பட்டு வருவதையும், இந்த மாநிலத்தில் மட்டும் அல்ல, பிற மாநிலத்திலும் பாராட்டப்படுகிறோம் என்பதை நான் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன், என்றாலும் இந்த விவாதம் அமைந்திருக்கிற முறை எப்படி அமைந்திருக்கிறது என்று பார்த்தால், விவாதத்தின் கடைசி நேரத்தில் கனம் அமைச்சர் பதில் அளிக்கிற நேரத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள பிரச்சினையைப் பற்றி அவருடைய பதில் அமைந்திருக்குமானால் அது விவாத முறைக்கு ஒத்ததாக இருக்கும். ஆனால் கனம் நிதி அமைச்சர் அவர்கள் சென்றதடவை பேசும்போது ஒன்றைக் குறிப்பிட்டார். திரு.அண்ணாதுரை திராவிட நாட்டுப் பிரிவினையைப் பற்றிப் பேசாமல் இருந்தாலும், நான் பேசுவதற்கு தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி தயாரித்துக் கொண்டுவந்ததைப் பேசினார். அந்த முறையில் விவாதங்களைக் கவனித்துப் பார்க்கலாம். எதிர் தரப்பில் உள்ளவர்கள் என்ன குறைபாடுகளை இந்த சட்டமன்றத்தில் குறிப்பிடுகிறார்களோ, அதற்குத் தகுந்த சமாதானங்களைச் சொல்வதற்கு ஆளும் கட்சியினர் இருக்க வேண்டும். அந்த முறையில் விவாதம் அமைந்தால்தான் எந்த விவாதமும் நல்ல முறையில் இருக்கும் என்பதை நான் அல்ல, மிகப்பெரியவர், எங்கள் தரப்பிலுள்ளவர் அல்ல, உங்களிடத்தில், செல்வாக்குள்ள ஆளும் கட்சியில் ஒத்துக் கொள்ளக்கூடிய மற்றொரு பெரியவருடைய கருத்தை இந்த மாமன்றத்தில் வைக்கப் பிரியப்படுகிறேன்.

“கீவீNலீ க்ஷீமீயீமீக்ஷீமீஸீநீமீ Nஷீ Nலீமீˆமீ பீமீதீணீNமீˆ, னீணீஹ் வீ னீணீளீமீ ஷீஸீமீ ˆMதீனீவீˆˆவீஷீஸீ? ஜிலீணீN வீˆ Nலீமீ ரீஷீஸ்மீக்ஷீஸீனீமீஸீN க்ஷீமீஜீறீணீஹ் ணீN Nலீமீ மீஸீபீ ணீஸீபீ ஹ்ஷீM ஸீணீNMக்ஷீணீறீறீஹ் ஜீMN பீஷீஷ்ஸீ வீஸீNமீக்ஷீக்ஷீMஜீNவீஷீஸீˆ. மி பீஷீ ஸீஷீN ˆணீஹ் ஹ்ஷீM ணீக்ஷீமீ ஷ்க்ஷீஷீஸீரீ ணீN ணீறீறீ. கீலீணீN லீணீஜீஜீமீஸீˆ வீˆ NலீணீN ஷ்லீஷீறீமீ பீமீதீணீNமீ தீமீநீஷீனீமீˆ ஷீஸீமீˆவீபீமீபீ ணீயீயீணீவீக்ஷீ. மிN வீˆ ழீMˆN றீவீளீமீ பீMக்ஷீதீணீக்ஷீ. கீலீமீக்ஷீமீ க்ஷீமீஜீக்ஷீமீˆமீஸீNணீNவீஷீஸீˆ ணீக்ஷீமீ னீணீபீமீ தீஹ் ஷீஸீமீ ˆவீபீமீ ணீஸீபீ Nலீமீ நிஷீஸ்மீக்ஷீஸீனீமீஸீN நீஷீனீமீ ணீறீஷீஸீரீ ணீN Nலீமீ மீஸீபீ ணீஸீபீ ˆணீஹ்.

கீமீ பீஷீ ஸீஷீN ணீநீநீமீஜீN Nலீவீˆ. கிˆ வீN வீˆ, Nலீமீ நிஷீஸ்மீக்ஷீஸீனீமீஸீN ரீவீஸ்மீ Nலீமீவீக்ஷீ க்ஷீமீஜீறீஹ் ணீN Nலீமீ மீஸீபீ ஷீயீ Nலீமீ பீமீதீணீNமீ ணீஸீபீ ஷ்மீ ணீக்ஷீமீ ஸீஷீN ரீவீஸ்மீஸீ ஷீஜீஜீஷீக்ஷீNMஸீவீNஹ் Nஷீ க்ஷீமீதீMN Nலீமீ ˆNணீNமீனீமீஸீNˆ னீணீபீமீ தீஹ் நிஷீஸ்மீக்ஷீஸீனீமீஸீN. கீமீ நீணீஸீஸீஷீN வீஸீNமீக்ஷீக்ஷீMஜீN.”

என்ற இந்தக் கருத்தை எடுத்துச் சொன்னவர் தமிழகத்திலும், இந்தியத் துணைக்கண்டம் பூராவிலுமே, பாராளுமன்றத் திறமை பெற்றவர் என்று பாராட்டுதலைப் பெற்ற காலம் சென்ற திரு. சத்தியமூர்த்தி ஆவார்கள். அவர் குறிப்பிட்ட அதே முறையில்தான் இன்றையதினம் இங்கே விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆகையினால் விவாதங்கள் நடந்ததும் கடைசியில், முடிகிற நேரத்தில் கனம் நிதி அமைச்சர் அவர்கள் புதிய பிரச்சினையைக் கிளப்பாமல், ஏற்கனவே சொல்லப்பட்டவைகளுக்குப் பதில் அளிக்கின்ற அந்த முறையைக் கையாளவேண்டும் என்பதை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நிதித் திட்டமும் நாட்டு நிலைமையும்:

பொதுவாக இப்பொழுது அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்ட பெருந“ தொகையை எந்த வகையில் செலவழிக்கிறார்கள் என்பதைப் பற்றி நாங்கள் சொல்கிற நேரத்தில், இந்த வரவுசெலவுத் திட்டம் அது துண்டு விழுகிற பட்ஜெட்டா அல்லது உபரியாக இருக்கிற பட்ஜெட்டா, அல்லது சரிக்கட்டுகிற பட்ஜெட்டா என்பதைப் பார்த்து நாட்டினுடைய நிலைமை இல்லை என்பதை மற்றொரு பேரறிவாளர் சொன்னதை அந்த நேரத்தில் இந்த மாமன்றத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

கனம் சுப்பிரமணியம்: நீங்கள் சொன்னாலே நான் ஒத்துக் கொள்வதற்குத் தயாராக இருக்கிறேன்.

அண்ணா: நம்முடைய கனம் நிதி அமைச்சர் அவர்கள் இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இது ஒரு பேரறிவாளருடைய கருத்து.

“ஙிMN Nலீமீ ஜீக்ஷீஷீˆஜீமீக்ஷீவீNஹ் ஷீயீ ணீ ஸீணீNவீஷீஸீ பீஷீமீˆ ஸீஷீN பீமீஜீமீஸீபீ மீஸீNவீக்ஷீமீறீஹ் Mஜீஷீஸீ வீNˆ யீவீஸீணீஸீநீவீணீறீ ஜீஷீˆவீNவீஷீஸீ ஷீக்ஷீ Mஜீஷீஸீ வீNˆ லீணீஸ்வீஸீரீ ணீ தீணீறீணீஸீநீமீபீ ஷீக்ஷீ ணீ பீமீயீவீநீவீN தீMபீரீமீN.

மிN பீமீஜீமீஸீபீˆ மீஸீNவீக்ஷீமீறீஹ் Mஜீஷீஸீ Nலீமீ ஷ்மீணீறீNலீ ஷீயீ Nலீமீ நீஷீMஸீNக்ஷீஹ். மிஸீ Nலீமீ ஜீக்ஷீமீˆமீஸீN வீஸீபீMˆNக்ஷீவீணீறீ ˆமீN Mஜீ, லீஷீஷ்மீஸ்மீக்ஷீ னீMநீலீ ணீ றீணீதீஷீMக்ஷீமீக்ஷீ னீணீஹ் ஜீக்ஷீஷீபீMநீமீ. லீமீ வீˆ ஸீஷீN வீஸீ ணீஸீஹ் ஷ்ணீஹ் தீமீஸீமீயீவீNமீபீ. ஜிமீலீக்ஷீமீயீஷீக்ஷீமீ, Nலீமீ ஷீஸீறீஹ் ஷ்ணீஹ் Nலீவீˆ ஜீக்ஷீஷீதீறீமீனீ நீணீஸீ தீமீ ˆஷீறீஸ்மீபீ வீˆ Nஷீ யீவீஸீபீ ஷீMN ணீ ஷ்ணீஹ் தீஹ் ஷ்லீவீநீலீ ஷ்லீமீஸீமீஸ்மீக்ஷீ Nலீமீக்ஷீமீ வீˆ ணீஸீ வீஸீநீக்ஷீமீணீˆமீ ஷீயீ ஜீக்ஷீஷீபீMநீNவீஷீஸீ, றீணீதீஷீMக்ஷீ ஷ்வீறீறீ தீமீ தீமீஸீமீயீவீNமீபீ Nஷீ NலீணீN மீஜ்NமீஸீN, ணீஸீபீ ஸீஷீN ஷீஸீறீஹ் Nலீமீ நீணீஜீவீNணீறீவீˆN ஷீக்ஷீ Nலீமீ மீனீஜீறீஷீஹ்மீக்ஷீ. ஜிலீணீN வீˆ ஷ்லீஹ் வீ ˆணீவீபீ ˆஷீனீமீ ˆஷீக்ஷீN ஷீயீ ˆலீணீக்ஷீவீஸீரீ ஷீயீ ஜீக்ஷீஷீயீவீN ˆஹ்ˆNமீனீ ˆலீஷீMறீபீ தீமீ வீஸீNக்ஷீஷீபீMநீமீபீ. கீலீமீஸீ வீ ˆணீஹ் NலீணீN, மி க்ஷீமீணீறீவீˆமீ Nலீமீ மீஸீNவீக்ஷீமீ வீனீஜீறீவீநீணீNவீஷீஸீˆ ஷீயீ Nலீமீ ஜீக்ஷீஷீஜீஷீˆணீறீ.

இந்த மன்றத்தில் இந்தக் கருத்தை நான் வலியுறுத்துவதற்குக் காரணம், நம்முடைய கனம் நிதி அமைச்சர் அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் இப்படிப் பேசியிருக்கிறார். அதை இப்பொழுதும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இதை நான் குறிப்பிட்டேன்.
ஆகவே வரவு செலவு திட்டத்தில் எவ்வளவு வருவாய் வருகிறது, எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதை மட்டும் ஒரு குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல், அதன் மூலமாக ஏற்படுகின்ற பலனை எந்த அளவுக்கு அதிகரித்துக் கொள்ளலாம் என்பதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்பதை நான் விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

முஸ்லீம் சமுதாயத்துக்கு மந்திரி சபையில் இடம்!

உருவான யோசனைகளை மன்றத்தில் தரப்பட வேண்டும் என்று கனம் ந‘தி அமைச்சர் அவர்கள் சொன்ன காரணத்தால் தான் கனம் மகாலிங்கம் சொன்ன கருத்தைக் கொஞ்சம் திருத்தத்துடன் அரசாங்கத்தினுடைய யோசனைக்குக் கொண்டு வந்து அதை கனம் நிதி அமைச்சர் அவர்கள் முன்பாக சமர்பிக்க விரும்புகிறேன். ஒரே அமைச்சருக்கு அதிகமான இலாகாக்கள் தரப்படுகின்றன என்ற காரணத்தால் அந்த அமைச்சருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறது என்று கனம் மகாலிங்கம் எடுத்துச் சொன்னார். அதையும் மனதில் வைத்துக்கொண்டு வேலைப்பளுவை பகிர்ந்து அளிக்கின்ற வகையிலே இந்த மாநிலத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சமுதாயத்தினராகவும், இன்றையத்தினம் ஆளும் கட்சி எடுத்துக்கொள்கிற எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பவர்களாகவும், இந்தியாவிற்கும் காஷ்மீருக்கும் தகராறு என்றாலும் காஷ்மீரத்தை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். இந்திய சர்க்கார் செய்வது தான் நியாயமென்று துணிவோடு பெருந“தன்மையோடு சொல்பவர்களாகவும் இருக்கின்ற முஸ்லிம் சமுதாயத்தினர் ஒருவருக்கு ஒரு அமைச்சர் பதவியைத் தந்து, நமது நிதி அமைச்சர் தன்னிடம் இருக்கின்ற 2,3 இலாகாக்களில் ஏதாவது ஒன்றை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரு யோசனையை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். முஸ்லிம்களை வளைபோட்டுப் பிடிக்கிறேன். அதற்காக நான் இப்படிச் சொல்கிறேன் என்று அவர்கள் சொல்கிறார்கள். பெரியவலை காங்கிரஸ் சர்க்காரிடத்தில் இருக்கிறது என்பது நன்றாகத் தெரியும். ஆகவே, வலைபோடுவதற்காக நான் இதைச் சொல்லவில்லை என்பதைக் கூறிக்கொள்கிறேன் முஸ்லீம் சமுதாயத்திற்கு ஒருநல்ல பிரதிநிதித்துவம் இந்த அமைச்சர் அவையிலே தரப்படவேண்டு மென்ற கருத்தை நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

கைத்தறியாளர் துயர் தீர்ப்பீர்:

பொதுவாக, இந்த மாநில சர்க்காரின் நிதிநிலைமை மத்திய சர்க்காருடை நடவடிக்கைகளைப் பொறுத்திருக்கிறது என்ற காரணத்தினாலோ மத்திய சர்க்கார் எடுத்துக் கொள்கிற முயற்சிகள் அனைத்தும் சரியான வகையிலே அமைந்திருக்கின்றதா என்று பார்க்க வேண்டிய பெரும்பொறுப்பு நம்முடைய அமைச்சர் அவைக்கு இருக்கிறது. அந்த வகையில் நான் மற்றொரு உருவான யோசனையைக் கூற விரும்புகிறேன். தேங்கிக்கிடக்கின்ற கைத்தறி ஜவுளியை நம்முடைய அரசாங்கமே விலைகொடுத்து வாங்கி அதை வைத்துக்கொண்டு கைத்தறி நெசவாளர்களுடைய கஷ்டங்களை உடனடியாக நீக்கவேண்டுமென்று நான் ஆட்சியாளரை விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். ரிபேட் தொகையைக் குறைத்திருக்கின்ற மத்திய சர்க்காரின் போக்கை நமது அமைச்சர்கள் வன்மையாக கண்டித்திருக்கிறார்கள். வன்மையான கண்டனம் டெல்லி செல்கின்ற காலத்திற்குள் மிக மென்மையாக ஆகிவிடாதபடி, பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு ரிபேட் தொகையைக் குறைக்காமல் கைத்தறி நெசவாளர்களுக்கு உருப்படியான பலன் கிடைப்பதற்கு வழிவகைகள் செய்ய வேண்டுமென்று ஆட்சியாளரை நான் விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

உதகமண்டலத்தில் சட்டசபை:

இந்த மன்றம் உதகமண்டலத்தில் நடத்தப்பட வேண்டுமென்ற கருத்தை நம்முடைய நண்பர் மாதாகௌடர் அவர்கள் மிக உருக்கமாகவும் ஆத்திரமாகவும் கோபமாகவும் கடைசி நேரத்தில் கொஞ்சம் கண்ணீரும் கலக்கமும் கூட வந்ததாகக் கருதக்கூடிய அளவிலே எடுத்துச் சொன்னார்கள். நான் மெத்த வருந்துகிறேன். அவர்களுடைய இவ்வளவு உருக்கத்தைக் கேட்டும் கூட எங்களுடைய முடிவை மாற்றிக் கொள்ள முடியாமல் இருப்பதற்கு உண்மையிலேயே வருந“துகிறேன். உதகமண்டலத்தின் வளர்ச்சிக்கு இந்த மாமன்றம் அங்கே கூடப் போவது காரணமாக இருக்குமென்று அவர்கள் சொல்லியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதகமண்டலம் வளர்ச்சிடைய வேண்டும் என்று மாதாகௌடர் அவர்கள் சொன்னதை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். ஆனால் இந்த மாமன்றம் அங்கே கூடுவது அதன் காரணமாக அமையும் என்று சொல்லக்கூடிய அந்த வாதத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் தமிழர்களுடைய நன்மையை உத்தேசித்து அங்கே வரமாட்டோம் என்று சொல்கிறார்கள், உதகமண்டலத்தில் இருப்பவர்கள் தமிழர்கள் அல்லவா? என்று கேட்டார்கள். எங்களுடைய தரப்பில் அல்லவா? என்று கேட்டார்கள். எங்களுடைய தரப்பில் உள்ள யாரும் தமிழர்களுடைய நன்மையை உத்தேசித்து உதகமண்டலம் வரமாட்டோம் என்று சொல்லவில்லை. எனக்கு கவனம் சரியாக இருக்குமானால், கனம் மாதா கவுடர் அவர்கள் ஒருமுறை இந்த மன்றத்திலேயே நான் தமிழன் அல்ல, கன்னடக்காரர்! என்று கூறியிருக்கிறார். இன்றைய தினம் நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் யார் தமிழர், யார் தமிழரல்ல என்று சொல்வதற்காக அல்ல. நீண்ட காலத்திற்கு முன்னாலேயே தமிழர்கள் யாதும் ஊரே, யாவரும் கேளீர்! என்ற விரிந்த மனப்பான்மையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர் கெட்டுவிடுகிறார்களா, நன்மை அடைகிறார்களா என்ற பிரச்சினை எழவில்லை. இந்த மன்றம் உதகமண்டலத்தில் கூடுவதால் அங்கே வளர்ச்சி ஏற்படுமென்பதில் எனக்குக் கருத்து மாறுபாடு இருக்கிறது. ஆகவேதான் உதகமண்டலத்தில் இந்த மன்றம் கூடுவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

அரசாங்கம் தயங்கவதேன்?

நான் அதை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் அது நிறுத்தப்படுகிறது என்பதை வருத்தத்தோடு சொன்னார். கனம் மாதாகவுடர் அவர்கள். நான் அவருக்குச் சொல்கிறேன், ஒரு குறிப்பிட்ட கட்சியினுடைய ஒப்புதலை கேட்ட பிறகுதான் இப்படிப்பட்ட காரியங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் கொண்டிருக்கிற பெருந்தன்மையை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தி, ஒரு குறிப்பிட்ட கட்சியாகிய நாங்கள் சொல்கின்ற தமிழ்நாடு என்ற பெயரை அரசாங்கம் இந்த மாநிலத்திற்கு வைக்காமல் இருக்கும் காரணத்தினால், அவர்களுக்கு யோசனை சொல்லி, தமிழ்நாடு என்று பெயர் வைக்கும்படி அவர்களுக்கு சிபாரிசு செய்வார்களேயானால் தமிழ்நாடு என்று பெயர் வைக்கப் பட்ட மறுநாளே உதகமண்டலம் வருவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஒப்புதலை அளிக்கும். ஏதோ பேரம் பேசுவதற்காக நான் இதைச் சொல்வதாகக் கருதவேண்டாம். உங்களால் ஆட்சியாளரை மாற்ற முடியாது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்குத்தான் இதைச் சொல்கிறேன். காங்கிரஸ் உறுப்பினராக இருந்தாலும் நீங்கள் சொல்கின்ற கோரிக்கையைக் கூட ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற அரசியல் நிலையைக் கவனிப்பதற்குத் தான் நான் இதைக் குறிப்பிடுகிறேன்.

ஆகையால், இந“த மாமன்றம் உதகமண்டலத்தில் கூடுவதால் உதகமண்டலத்திற்கு அதிக நன்மைகள் வந்துவிடாது. அதைவிட நல்ல யோசனைகளும் சொல்லப்பட்டன. அவைகளை நான் மெத்த நம்பிக்கையுடன் வரவேற்கிறேன். உதகமண்டலத்திலுள்ள எழில்களையும் வனப்புகளையும் பெருகச் செய்து அதைச் சிறந்த உல்லாச இடமாக குறைந்த செலவில் கூட எல்லோராலும் சென்று தங்கக்கூடிய இடமாக ஆக்கவேண்டுமென்று யோசனை சொல்லப்பட்டது. அவ்வாறு செய்தால் உண்மையிலேயே உதக மண்டலம் மேன்மையடையும்.

ஆகையால் உதகமண்டலத்தை அபிவிருத்தி செய்வதை கட்சிப் பிரச்சினையாகக் கருதவேண்டாமென்றும், மற்றவர்கள் பேரில் மாசு கற்பிக்க வேண்டாமென்றும், கனம் அங்கத்தினர்களைப் பணிவுடன் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொகுதிகளுக்குச் செல்லுங்கள்:

அந்த அந்தத் தொகுதிகளிலுள்ள குறைகளை கனம் அமைச்சர்கள் தெரிந்து கொள்வதற்கு ஒரு யோசனை சொல்ல விரும்புகிறேன். கனம் அங்கத்தினர்கள் தங்கள் தங்கள் தொகுதிகளில் ஆங்காங்கே உள்ள குறைபாடுகளை நேரிடையாகத் தெரிந்து கொள்வதற்குத் தங்கள் தங்கள் தொகுதிகளுக்கு கனம் அமைச்சர்கள் கனம் அங்கத்தினர்களையும், ஜில்லாவிலுள்ள அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு தொகுதிகளில் 2,3 நாட்கள் சுற்றுப்பிரயாணம் செய்ய வேண்டும். ஒரு தொகுதியிலுள்ள குறைபாடுகள் எல்லாவற்றையும் ஐந்து நிமிஷப் பேச்சில் சொல்ல முடியாது. ஆகவே, நான் கூறியபடி செய்யவேண்டுமென்று கனம் அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

வரவு செலவுத் திட்டத்தில் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பெருந்தொகைப் பணத்தை நல்லபடியாக செலவழித்து, மக்களுக்கு நன்மைகளைச் செய்ய அரசாங்கத்தார் முற்பட வேண்டும் என்று சொல்லி என் உரையை முடித்துக் கொள்கிறேன். வணக்கம்!