அறிஞர் அண்ணாவின் புதினங்கள்


என் வாழ்வு
18
                     

பூஜை செய்யச் சென்ற இடத்திலே, காதற் பேச்சு கள்ளக் காதல் சேட்டை நடைபெறுவது தெரிந்ததும், நான் கொஞ்சம் திடுக்கிட்டுப்போனேன். சேட், ஏழைக் குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொண்டவர். பெண் அழகி என்பது எனக்குத் தெரியும், என்றாலும், நமது நாட்டில் இதுபோல ஆயிரக்கணக்கான பொருந்தாக் கலியாணங்கள் நடைபெற்று இருப்பதால், இந்தக் கலியாணமும், ஏதும் விபரீதமான விளைவுகளின்றிச் சகஜமான தாகிவிடும் என்று எண்ணிக்கொண்டேன். ஆகவே, எனக்குத் தூக்கிவாரிப்போட்டது, கள்ளக்காதல் பேச்சு, பாவம்! சேட், எவ்வளவு பதைப்பார், இது தெரிந்தால். ஊரார் எவ்வளவு இழித்தும் பழித்தும் பேசுவார்கள் இது தெரிந்தால் என்று எண்ணினேன் - உண்மையிலே எனக்குச் சேட்டின் நிலைமையைக் கண்டு, அவனிடம் பரிதாபம் பிறந்தது. ஊரிலே, புகழ், செல்வாக்கு, வியாபாரத்திலேயோ வெற்றி அமோகம் - லட்சுமி கடாட்சம் பரிபூணரமாக இருக்கிறது - இருந்து என்ன பலன்! அவனுடைய குடும்ப வாழ்க்கை இப்படிக் கேவலமான தாக இருக்கிறது. இரும்புப் பெட்டியைத் திறந்து பார்த்ததும், அதிலே உள்ள ஆபரணக் குவியல் அவனுக்கு ஆனந்தத்தைத் தரும், ஆனால் சூரியன் மறைந்ததும், தெருக் கோடியிலும் புறக்கடை களிலும், வம்பளப்பவர்களின் வாய் திறந்துவிடுமே; அவர்கள் பேசுவது சேட்டின் காதிலே விழுந்தால், பாவம் அவன் மனம் என்ன பாடுபடும். இலட்சாதிகாரியாக இருந்து என்ன பிரயோஜனம். அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியுமா! இப்படி எல்லாம் நான் எண்ணினேன். இந்தக் காதகன் யார்? சேட்டின் குடும்பத்தைக் குலைக்கும் கொடியவன் யாராக இருப்பான்? இளம் பெண்ணின் மனதைக் கெடுத்து, மாதர்களுக்கு மகிமை தரும்கற்பு எனும் பூஷணத்தைச் சூறையாடும் இந்தக் காமாந்தகாரம் பித்தவன் யார்? - என்று கண்டறிய ஆவல் கொண்டேன். யாருக்கும் ஏற்படக்கூடிய ஆவல்தானே இது - எனக்கும் முதலில் யாருக்கும் ஏற்படுவது போன்ற ஆவல்தானே உண்டாயிற்று. ஆனால், சில விநாடிகளிலே, இந்த ஆவல், என் மனதிலே வேறு விதமான,யோசனையாக மாறலாயிற்று. சேட்டின் மனைவி நடத்தும், இந்தக் காமச் சேட்டையை நான் கண்டு பிடித்து, அந்த இரகசியத்தை என் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, அவளை மிரட்டினால், அவளிடமிருந்து, ஏராளமான பணம் பெறலாம்; இந்த இரகசியத்தைத் தங்கச் சுரங்கமாக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவளுடைய இரகசியத்தின் முழு விவரத்தையும், அறிந்து கொள்ள வேண்டும், பிறகு அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன். அவசரம், ஆத்திரம் கூடாதல்லவா! நான், என்மனதிலே முளைத்த ஆவலைக்கூட அடக்கிக் கொண்டு, அனாதரட்சகா! ஆதி பரந்தாமா! லட்சுமி மணாளா! என்று உரத்த குரலில் அர்ச்சித்துக் கொண்டிருந்தேன். இந்த வார்த்தைகள் உதட்டிலே உலவின. உள்ளத்திலேயோ, அந்த இரகசியத்தை எப்படிக் கண்டறிவது என்பது பற்றிய சிந்தனையே நிரம்பிக் கிடந்தது. கொஞ்ச நேரம் சென்றதும், அவளே, பூஜை அறைப்பக்கம் வந்தாள் - முகம், அலாதியான அழகுடன் விளங்கிற்று. ஒரு கணம் அவளைப் பார்த்ததும், எனக்கு அவள் நிலைமை புரிந்து விட்டது. என் பார்வையின் பொருள் அவள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. வழக்கத்துக்கு மாறாக அவள் மகிழ்ச்சியுடன் இருந்தாள். “ஸ்வாமீ! என்ன இன்று பூஜை நெடு நேரமாக நடக்கிறது!” என்றுகூட என்னைக் கேட்டாள். எவ்வளவு தைரியம் இவளுக்கு - பாபக்கிருத்யத்தைப் புரிந்துவிட்டு, பசப்பு மொழி பேசுகிறாள். பஞ்சாங்கக் காரனுக்கு, நமது இரகசியம் எப்படித் தெரியப் போகிறது என்ற தைரியம்! இருக்கட்டும், இருக்கட்டும் என்று மனதிற் கூறிக்கொண்டு, அவளுடைய கேள்விக்குத் தக்க பதிலளிக்க வேண்டு மென்று தீர்மானித்து, “பூஜைக்குக்கூட ஒரு அளவு உண்டா! எவ்வளவு செய்ய வேண்டும் என்று ஒரு கணக்கா இருக்கிறது. பாபங்கள், சதா சர்வகாலம் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டு நடமாடிக் கொண்டுள்ள காலமாயிற்றே இது. எந்த நேரத்திலும், நாம், அறிந்தோ அறியாமலோ, பாபகாரியம் செய்துவிடக் கூடும் - பாபம் நம்மைத் தீண்டிவிடக்கூடும். ஆகவே, எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகப பகவான் நாம் ஸ்மரணை செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது” என்று நான் கூறினேன். என் பேச்சு, அவளுடைய சிந்தனையைக் கிளறிவிட்டிருக்கும், அவ்வளவு உருக்கமாகப் பேசினேன் - “பாபம், என்ன ரூபத்திலே இருக்கும்?” என்று அவள் கேட்டாள். போக்கிரித்தனமான கேள்வியல்லவா. அது. நான், அவளுக்குப் “பெண்ணே! உன் கள்ளக்காதலை, காமச் சேஷ்டையை நான் அறிவேன்” என்று கூறிவிட வேண்டும் என்று முதலில் நினைத்தேன் - பிறகு, அந்த ஆசையை அடக்கிக் கொண்டு, மறைமுகமாகப் பேசியே அவள் மனதைக் தாக்க வேண்டும் என்று தீர்மானித்துப் “பாபம், என்ன ரூபத்தில் இருக்கு என்றா அம்மா, கேட்கிறாய். பலபேர், பாபம், கோரமான ரூபத்திலிருக்கும், கரிய உருவமும், செம்பட்டை மயிரும், நெருப்பைக் கக்கும் கண்களும் கொண்டதாக இருக்கும்; பற்களை றநறவெனக் கடிக்கும் - துர்கந்தம் வீசும் - அகோரம் கூச்சலிடும்- என்றெல்லாம் சொல்லுவார்கள். அது தவறு. பாபம், சௌந்தர்யமான வாலிபனாக, சிரித்துப் பேசம் சொகுசுக் காரனாக, மனதை மயக்க வைக்கும் சொக்குப் பொடி வீசுபவனாக ரூபமெடுத்தும் வரும்” என்றேன் கூறிவிட்டு, அவள் முகம் என்ன நிலையாகிறது பார்ப்போம் என்று கவனித்தேன். வாலிபன்! வசீகரச் சிரிப்பு! சரசப் பேச்சு! இவ்விதம் நான்தான் ஜாடையாகப் பேசினேனே. அவள் சேஷ்டையை நான் அறிந்து கொண்டேன் என்பதை விளக்க - அவள் பயப்படாமலிருக்க முடியுமா! - என்று நான் எண்ணிக் கொண்டேன். அவளுடைய முகமோ ஒருவிதமான மாறுதலையும் அடையவில்லை. இந்த ஏமாற்றம் எனக்கு வாட்டத்தைத் தந்தது. அவளுடையபேச்சோ என் வாட்டத்தை அதிகப் படுத்திற்று. “உண்மைதான்! பாபம், பயங்கரமான உருவம் கொண்டதாக இருக்குமென்று கூறுவது தவறுதான். பாபம் சுந்தர புருஷனாகக் கூடத்தான் உருவெடுக்கிறது. பார்த்தவர்களெல்லாம், என் நவரத்ன கண்டியைப் புகழ்ந்தார்கள். அதிலே உள்ள பச்சைக் கற்களையும் நீலமணிகளையும் கண்டு பரவசமடைந்தார்கள் - ஒருவரும் அந்த நவரத்னகண்டி, பாபத்தின் சொரூபங்களிலே ஒன்று என்று தெரிந்து கொள்ளவில்லை. அந்த நவரத்ன கண்டியின், மணிகள், வஞ்சகம், மோசடி,பொய், புரட்டு, தப்புக்கணக்கு ஆகியவை
கள் - பச்சை - நீலம் - வைரம் - கோமேதகம் என்று பல வசீகரமான ரூபத்தில் பாபங்கள் இருந்தன! பாபம், அவ்வளவு அழகான ரூபத்தில் இருந்திடக்கூடும் என்பதை ஜனங்கள் தெரிந்து கொள்ளவில்லை” - என்று அவள், வேதாந்தம் பேசினாள். பயப்படுவாள், திடுக்கிடுவாள் என்று நான் எண்ணி ஜாடையாக, பாபம் ஒரு சௌந்தர்யமான வாலிபப் புருஷனாக உருவெடுத்துவிடும் என்று கூறினால், அவள், எனக்கே, உபதேசம் செய்யும் விதமாக, வேதாந்தம் பேசுகிறாள் - இதென்ன விந்தை என்று நான் யோசித்தேன்.

“பாபத்தைப் பற்றி, சாங்கோ பாங்கமாகப் பேசும் அளவுக்குத் தங்களுக்குப் பாண்டித்யம் இருக்குமென்று நான் எண்ணினதேயில்லை” என்று நான் கூற, அவள், “என் அண்ணன் ஒரு பெரிய வேதாந்தியாக இருந்தவன் - பல வருஷகாலம் பண்டிதர்களோடு வாசம் செய்தவன் - அவனுடைய சிஷ்யையாக இருந்திருக்கிறேன் ஒரு ஆறு மாதக்காலம்” என்றாள். ஓஹோ! - என்று கொஞ்சம் குறும்பாகச் சொன்னேன். “ஸ்வாமி! ஆச்சரியப்படுவீர், என் அண்ணனைப் பற்றிய முழு விவரம் தெரிந்தால். அவர், மகா பண்டிதர்களோடு வாசம் செய்தார் பல வருஷம் என்றேனே - ஏன் - எப்படி - என்பது தெரிந்தால், பயந்து போவீர் ஒரு கொலை செய்துவிட்டார் என் அண்ணன் - போலீசின் பிடியிலிருந்து தப்பிக் கொண்டு தலைமறைவாக இருந்தார் பல வருஷம் - கொலையை இவர்தான் செய்தார் என்பதற்கான சாட்சிகள் ஒவ்வொன்றாக, மறையும் வரையில், என் அண்ணன் மகா பண்டிதர்களுடன் இருந்து வந்தார். இனி வெளியே உலவினாலும் வம்பு நேரிடாது என்பது தெரிந்த பிறகு வீடு வந்தார். ஆறு மாதகாலம் தங்கியிருந்தார் - திடீரென்று மாரடைப்பு அவரைக் கொன்றுவிட்டது - அவருடைய உபதேசங்கள் நான் ஆறு மாதம் கேட்டு, பல அரிய உண்மைகளைத் தெரிந்து கொண்டேன்” என்றாள். “ஏதேது! இவள் கள்ளி - காமச் சேட்டைக்காரி - என்று எண்ணினோம். இவள், ஒரு கொலைக்காரனின் தங்கையுமாகவன்றோ இருக்கிறாள். இவள், தன் இரகசியம் வெளியானால்கூட அஞ்ச மாட்டாள் போலிருக்கிறதே என்று நினைத்தேன் - சற்று வருத்தமுமடைந்தேன். வேறோர் திக்கில், பேச்சைத் திருப்பி விடலானேன். “பூஜை ஏன் அதிக நேரம் செய்யவேண்டும் தெரியுமோ! பக்தியோடு, பகவானை ஒரு விநாடி துதித்தாலும் போதும் - ஆனால் காமக்குரோத மதமாச்சாரியாதிகள் சூழ்ந்துள்ள இந்த லோகத்திலே, வேறு எந்தச் சிந்தனையும் கொள்ளாமல், பகவானை உள்ளத்தில் ஒரு விநாடி நிலை நிறுத்துவதும், மகா கடினமான காரியம். அந்த ஒரு விநாடி கிடைக்க, மணிக்கணக்கிலல்ல, வருஷக் கணக்கிலே கூடப் பூஜை செய்யவேண்டும். உதாரணமாக, இன்று, நடைபெற்றதைக் கேளுங்கள். சுத்தமான மனதுடன்தான், நான் பூஜையைத் துவக்கினேன். கண்களை மூடிக்கொண்டு, கண்ணா, மணிவண்ணா! - என்று, ஸ்தோத் எங்கிருந்தோ ஒரு சத்தம் கிளம்பி என் சித்தத்தைக் குலைத்துவிட்டது” என்றேன்.“என்ன சத்தம்? முரளி கானமோ?” என்று அவள் கேட்டாள். குறும்பாகவோ, சகஜமாகவோ, என்பது புரியவில்லை. “முரளியல்ல! காமாந்தகாரகதானம்! எவளோ ஒரு தூர்த்தை! தன் கள்ளக் காதலனுடன், கொஞ்சி விளையாடுவது போன்ற சத்தம் கேட்டது” என்று நான் கூறினேன். வீசி விட்டோம் வெடி குண்டை, இனி அவள் வெலவெலத்துப் போவாள். வீழ்வாள் என் காலடியில், வேண்டிக் கொள்வாள் தன்னைக் காப்பாற்றாச் சொல்லி என்று நான் கருதினேன். அவளோ, நான் சொன்னது கேட்டு ஆச்சரியமுற்றதாகவோ அஞ்சியதாகவோ காட்டிக் கெள்ளவில்லை.

“உங்கள் காதிலே சத்தம் கேட்டதா!” என்று தனக்குள் கூறிக் கொள்வது போலப் பேசினாள். அவள் பயப்படுவாள் என்று நான் எண்ணினேன். அவளுடைய நடத்தையோ, எனக்குப் பயமூட்டிற்று. இரண்டோர் நிமிஷம். அவள் மௌனமாக இருந்தாள். அந்த இரண்டோர் நிமிஷங்கள், எனக்கு யுகம் போலத் தோன்றிற்று. நான்தான் மௌனத்தைக் கலைத்தேன் “ஏன்! அந்தச் சத்தம் தங்கள் காதிலேயும் விழுந்தததோ?” என்று கேட்டேன். தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவள்போல அயர்ந்து, தூங்கிவிட்டேன். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அன்றுதான் நான் நிம்மதியாகத் தூங்கினேன். அவ்வளவு அயர்வு எனக்கு; இருக்காதா, உடல், உள்ளம், இரண்டும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்லவே.”

“ஆமாம் விமலா, பிறகு, நீ, இளையபூபதியைச் சந்திக்க முயற்சிக்கவே இல்லையா.”

“அதை ஏன் கேட்கிறீர்கள் டாக்டர். காலை கண்விழித்ததும், ரௌடி ரங்கன் டிபன், காப்பி கொண்டு வந்து கொடுத்தான். வேறு உடைகளும் தந்தான். நான் பட்ட கஷ்டத்தை எல்லாம் அவனிடம் சொன்னேன். எவ்வளவு கஷ்டப்பட்டு, அங்கிருந்து தப்பினேன், என்பதையும் சொன்னேன். என்னைத் தேடி அழைத்து வராமல், ஏன் என்னை விட்டுவிட்டு, வந்து விட்டீர்கள் என்றும் கேட்டேன்.”

“அதற்கு அவன், அன்று இரவு வெகுநேரம் மூவரும், அதாவது ஐயர், இளையபூபதி, ரௌடி ரங்கன், மூவரும் என்னைத் தேடினார்களாம். ஐயர், இளையபூபதியிடம் நேரமாகிவிட்டது. நாளை தேடிக் கொள்ளலாம் என்று வெளியே அழைத்துச் சென்று விட்டாராம். அதற்கு பிறகு இளையபூபதி என்னைத் தேடவேண்டும் என்று நினைத்த போதெல்லாம், ஐயர் குறுக்கிட்டு அந்தப் பெண்ணைத் தேடுவதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் கவலைப்படவேண்டாம். நாம் வந்த காரியத்தை கவனிப்போம் என்று பெரிய பெரிய தலைவர் வீட்டிற்கெல்லாம் அவரை அழைத்துச் சென்று, மாலைமரியாதைகள் நடத்தினார்களாம். ஆனால்பலன் என்னமோ பூஜ்யம் தானாம். இப்படியே பத்து நாட்கள் கழிந்ததாம். கையில் இருந்த பணம் தீர்ந்துவிட்டதாம்,அந்த நேரத்தில் ஐயர், இளையபூபதியிடம் அந்த பெண் அங்கே இல்லை. அவள் யாருடனோ மறுநாளே ஓடிவிட்டாளாம், என்று சொல்லி அவரை நம்பவைத்துப் பீடை ஒழிஞ்சதுன்னு, தலையை முழுகுங்கோ, இனிமே, நோக்கு நல்ல காலந்தான் என்று சொல்லி இவர்களை சென்னைக்கு அனுப்பி விட்டு, அவர் புண்ய ஷேத்ரங்களை தரிசிக்க கிளம்பி விட்டாராம்.”

இவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்ததும், பதவி வரும், வரும் என்று நினைத்து, இன்னும் ஏராளமாக பணம் செலவு செய்திருக் கிறார் இளையபூபதி. மேலிடத்திலிருந்து ஒரு உத்தரவும் வரவில்லையாம். ஜமீன்தாருடன் பகையும், இவருக்குத் தீர வில்லை. இருவரும் கேஸ், கேஸ் என்று எல்லாப் பணத்தையும் ஒழித்தார்களாம். ஜமீன்தார் படுத்தப்படுக்கையாகி, கை, கால் விழுந்து, பேச்சும் போய்விட்டது என்றும் கேள்விப்பட்டேன்.”

“சரி இளையபூபதி என்ன ஆனார்?”

அதையேன் கேட்கிறீர்கள் டாக்டர், இளையபூபதி கையில் இருந்த பணத்தை எல்லாம் அழித்துவிட்டு, வாங்கிய கடன் களை, பாதிவரை கொடுத்து விட்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், எங்கோ போய்விட்டாராம். என்லோரும், அவர், ‘சாமியாராகி’ வடக்கே, சென்று விட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள். இதையெல்லாம் கேட்டு, என் மனமும் என் உடலும் களைத்துப் போய், மேலும் களைந்து போய் இந்நிலையானேன்.

“ஆமாம் உன் அக்காள் என்ன ஆனாள், விமலா?”

“அந்தக் கொடுமையைக் கேளுங்கள். ஒரு வார காய்ச்சலில், என் அக்கா இறந்திருக்கிறாள் - நான் டெல்லியில் இருந்த சமயத்தில். அவளும் சரி, என் அம்மாவும் சரி, இறந்த போது கூட நான் இல்லை. அவர்கள் முகத்தைப் பார்கக்க கூட முடியாத பாவியாகி விட்டேன் டாக்டர்.”

“இப்படி உலகமே வெறிச்சோடிப்போன நேரத்தில், எனக்கு ஆறுதலாய் இருந்தது இந்த ரௌடி ரங்கன்தான் டாக்டர். நான் முன்னமே சொன்னதுபோல் என்னைப் பார்த்தால் சற்று, தள்ளி நின்று மரியாதை செலுத்தும் ரௌடி ரங்கனுக்கே, நான் பெண்டாளாகிவிட்டேன். என் நிலைமை அப்படி அப்போது. இப்போதும் அவன்தான் என் வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றுகிறான்.”

“என் இளமையை இழந்துவிட்டேன். இனிமேல் எவரையும் மடக்கி வளமாக வாழவேண்டும் என்ற எண்ணமும் போய்விட்டது. அதனால்தான் ரௌடி ரங்கனுடன், இந்த வாழ்க்கையே போதும் என்ற நிம்மதியோடு, நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் டாக்டர். டாக்டர் இப்போது சொல்லுங்கள், என்னுடைய இந்தச் சீரழிந்த வாழ்வுக்கு யார் காரணம்?

“நிச்சயமாக நீ இல்லை, விமலா! உன்னைக் காதலித்தவன் கைவிடாமல் இருந்திருந்தால், நீ இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டாய்.”

“ஆமாம் டாக்டர், இந்த என் நிலைக்கு - ஏன் என்னைப் போன்று நாட்டிலிருக்கும் எத்தனையோ விமலாக்களுக்கும் சேர்த்துச் சொல்லுகிறேன். நாங்கள் மட்டுமா இதற்குக் காரணம். இந்த பாவத்திலே சரி பங்கு ஆணுக்கும் இருக்கிறது. இந்தக் கூட்டு வியாபாரத்தில் ஒருவருக்குத்தான் தண்டனை.”

சமூகத்தின் விசித்திரப் போக்கைப் பாருங்கள். உடற் கூறு அமைப்பால் பெண் பழிகாரி ஆகிறாள். ஆண் இதிலிருந்து தப்பித்துக் கொள்ளுகிறான்; பணம் படைத்தவனாக இருந்தாலோ சொல்லத் தேவையில்லை. அதுவே அவனுக்குச் சமூக அந்தஸ்த்தையே உயர்த்துகிறது. ஏகபத்தினி விரதன் கதைகள் இருக்கும் அதே புராணத்திலே, ஐவருக்கும், பத்தினி என்கின்ற கதையும், இருக்கிறது, ஸ்திரீலோலனைப் பற்றியும் கதை இருக்கிறது. அந்த ஸ்திரீலோலனும், இங்கே வணங்கப்படு கிறான். ஒரு வேடிக்கையைப் பாருங்கள், இராமனைவிட கிருஷ்ணனைத் தான், இங்கே அதிகம் வணங்குகிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும், கற்பு பொது என்று ஆகாதவரை, என்னைப் போன்ற விமலாக்கள், தோன்றிக் கொண்டே தான் இருப்பார்கள்.”

“சபாஷ் விமலா, சரியாகச் சொன்னாய். என்னைக் கேட்டால், நீ சமூகபணி செய்யும் தலைவியாகலாம். உன் கதையைக் கேட்டதில், நீ பட்ட கஷ்டங்களை எல்லாம் புரிந்து கொண்டேன். இனிமேல் உன்னை நிம்மதியாக வாழவைப்பது என்றும் நான் முடிவு செய்துவிட்டேன்.”

“டாக்டர், விளையாடாதீர்கள். உங்களுக்கு ஊரிலுள்ள பெயரென்ன, உங்கள் அந்தஸ்து என்ன, இதையெல்லாம் பாழாக்கிக் கொள்ளாதீர்கள். இப்போது நீங்கள் இங்கு வந்து போவதையே வெளியே உள்ளவர்கள், தவறாகப் பேசிக் கொள்ளுகிறார்கள். உங்கள் தாயாருக்குக் கூட மனவருத்தம் என்று கேள்விப்பட்டேன். என்னைப் பார்க்க வந்த ஓரிரு நாட்களுக்குள், மரகதக்காவின் கோபத்துக்கும் ஆளாகி, கோர்ட்டு, கேஸ், என்று அலைந்து உங்கள் பெயர் கெட்டதை மறந்து விட்டீர்கள்.”

“நீ என்ன சொன்னாலும் சரி விமலா, நான் எடுத்திருக்கின்ற முடிவை யாராலும் மாற்ற முடியாது.”

“டாக்டர், நான் சொல்லுவதை தயவுசெய்து கேளுங்கள். நான் எந்தத் தவறான எண்ணத்தோடும் உங்களோடு பழகவில்லை. அந்த விமலா அல்ல. இப்போது இருக்கும் விமலா. உங்களைப் போன்ற நல்லவரைக் கெடுத்தேன் என்ற கெட்டப் பெயர், எனக்கு வேண்டாம். என் கதையை உங்களிடம் சொன்னதால் எனக்கு ஒரு பெரிய மனபாரம் இறங்கியது போல் இருக்கிறது.”

“நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டாய் விமலா. முன்னாலே சொன்னபடி, நீ சொன்ன இந்தக் கதையை அப்படியே எழுதி சினிமா படம் எடுக்கக் கொடுக்கிறேன். நீயே அதில் நடி. அதில் வரும் பணத்தை ‘பேங்கில்’ உன் பெயரில் போடுகிறேன். அதை வைத்துக் கொண்டு இனி மீதி காலத்தை நீ நிம்மதியாக கழிக்க வேண்டும் அதுதான் என் விருப்பம்.”

“என் ஆசை என்ன தெரியுமா, டாக்டர், நீங்கள் உங்கள் அம்மா விரும்பும பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, சந்தோஷமாக வாழ வேண்டும்.”

“சரி விமலா, முதலில் உன் கதை படமாக வர வேண்டும். சிலருக்காவது அது பாடமாக அமைய வேண்டும். அதில் நான் வெற்றி பெறவேண்டும். அதற்குப் பிறகு, என் கல்யாணம் நிச்சயம். நீயும் என்னுடன் வந்து தங்கிவிடவேண்டும் எனக்கு உதவியாக, ஆஸ்பத்திரியில் என்றார் டாக்டர்.”

“விமலா சிரித்தாள் - மனம் விட்டு, முதல் முறையாக அவள் வாழ்க்கையில்...”

(குடியரசு - 1940)