அறிஞர் அண்ணாவின் புதினங்கள்

என் வாழ்வு
7
                     
“முருகன் செய்து வந்தது அத்தனையும் வெறும் ஜாலம். எப்படியாவது என்னை மெதுவாகக் கெடுத்து விட வேண்டுமென்று அவன்எண்ணினானேயொழிய, என் மீது அவனுக்கு அந்தரங்கமான ஆசை இல்லை. அது எனக்கு எப்படித் தெரிந்தது தெரியுமா? கேள் சொல்கிறேன். என்னைத் தவிர வேறுயாரையும் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டேன் என்று கூறினானே முருகன், அவன் நான் இல்லாத நேரத்திலெல்லாம் நமது வேலைக்காரியிடம் சரசமாடிக் கொண்டு இருந்தான். இவர்களுக்குள் நடக்கும் ‘சல்லாபம்’ எனக்குத் தெரியாது. இரண்டு பேரும் இரகசியமாகப் பேசுவார்களாம். என்மீது எப்படிப் பிராணனையே வைத்துக் கொண்டிருப்பதாக கூறி வந்தானோ அது போலவே, அவளிடமும் கூறினான் போலிருக்கிறது. அவள் கணவனோ ஒரு குடிகாரன். அவனுக்கு, முருகனே குடிக்கக் காசு கொடுத்து அனுப்பி விட்டு, இவளிடம் பேசிக் கொண்டிருப் பானாம், ஒரு நாள், புருஷன் இவர்களைக் கையும் களவுமாக பிடித்துவிட்டான் நல்ல உதையாம் முருகனுக்கு. முருகன் ஊரை விட்டுப் போனதற்கே முக்கிய காரணம் இதுதான். மேலுக்குத்தான், என்னால் சண்டை வந்ததாகப் பாட்டு வாத்தியார் கூறினார். உண்மையிலே நடந்தவற்றை வேலைக்காரியின் புருஷன் என்னிடம் ஒருநாள் கூறினான்; கூறிவிட்டுத்தான், அவனைக் கொல்கிறேன், வெட்டுகிறேன் என்று கூவினான். அவளும் இனி இங்கிருந்தால் ஆபத்து என்று எண்ணி தாய் வீடு போய் விட்டாள். இது சேதி. முருகனே இங்ஙனம் இருந்தான். என்னிடம் சிறு பிள்ளையிலிருந்து பழகியவன் முருகன். உன் ‘முத்து’ நேற்று முளைத்தான். அதிலும் படித்தவன் சீமைக்குப் போகிறான் என்கிறாய். அவன் எந்தச் சீமான் வீட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு சொகுசாக வாழலாம் என்று இருப்பானா, உன்னைக் கலியாணம் செய்து கொள்வானா? உன்னை மயக்குகிறான், ஜாக்கிரதை! ஏமாறாதே!” என்று கமலா விஸ்தாரமாகக் கூறினாள்.

“அக்கா, முருகன் படியாதவன்; இவர் படித்தவர். இவர் சொன்ன சொல்லை மாற்றி விடுவாரா” என்று நான் கேட்டேன். எனக்குப் ‘படித்தவர்கள்’ என்றால், அவர்கள் யாவருமே நாணய மாக நடப்பவர்கள் என்று அப்போது எண்ணம்.

“விமலா, அந்த ஆள் படித்தவன் என்கிறாய். அதனால்தான் அவன் உன்னை மணக்க மாட்டான் என்று சொல்கிறேன். அவன் படிப்பிலே, தாசிகுலம் என்பது இழிந்த வகுப்பு, கேவலமானது. ஏதோ மனிதரின் காமத்துக்குத் தாசிகள் தயவு வேண்டும் என்று இருக்கிறது? பைத்யமே, படித்தவனான
தால்தான், தளுக்கு அதிகமாக இருக்கிறது, உறுதி இருக்கிறது என்று எண்ணாதே. படித்தவர்கள் நீ நினைக்கிறபடி, உறுதியான வர்களானால் நமது ஜாதியிலே பாதிப் பெண்கள் இந்நேரம் குடும்ப ஸ்திரீகளாகி விட்டு இருப்பார்களே. படித்துப் பட்டம் பெற்றுப் பெரிய பெரிய அதிகாரிகளாக இருப்பவர்களிலே எவ்வளவோ பேர் தாசி வீடு செல்கின்றனர். தாசியைக் கலியாணம் செய்து கொண்டனரா” என்று கமலா கேட்டாள்.

என் மனதிலே திகிலும் சந்தேகமும் குழப்பமும் உண்டாகி விட்டது. இருந்தாலும் “எல்லோருமா அக்கா சொல்கிறபடி இருப்பார்கள். முத்துவுமா அப்படி இருப்பார்” என்றே நான் வாதாடினேன்.

கடைசியில் அக்கா ஒரு யுக்தி செய்தாள்; அம்மா இல்லாத நேரமாகப் பார்த்து, நான் ஒரு நாள், உன் முத்துவின் யோக்கியதை எப்படி இருக்கிறது என்பதை, பரீட்சை செய்துபார்த்து உனக்கே காட்டிவிடுகிறேன்” என்றுரைத்தாள்.

முத்துவின் விஷயமாக என்ன பரீட்சை நடத்தப் போகிறாள் கமலா என்பது எனக்கு விளங்கவேயில்லை. மனிதரின் மனநிலை இதுவென உணர்ந்து கொள்வது என்ன அவ்வளவு சுலபமான காரியமா? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று பழமொழி கூறுவார்களே தவிர, அது அவ்வளவு தெளிவாகத் தெரியக் கூடியது அல்லவே. குழம்பிலே உப்புச் சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், வாயிலே ஒரு சொட்டு ஊற்றிப் பார்க்கிறோம். அது போன்றதா இது என்று எண்ணினேன். என்னால் ஒன்றும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எனக்கும் அக்காவுக்கும் நடந்த சம்பாஷணை அம்மாவுக்குத் தெரியாது. அக்கா மூச்சுவிடவில்லை. என்னைவிட அவள் எவ்வளவு நல்லவள் பார்த்தீர்களா? கமலா பாட்டு வாத்தியார் மகனுடன் ஏதோ ஒரு மாதிரியாக நடக்கிறாள் என்று எனக்குத் தெரிந்ததும், நான் வீட்டையே ஒரு கலக்குக் கலக்கி விட்டேன். அக்காவோ நானோ பூரா விஷயத்தைக் கூறியுங்கூட, அம்மாவிடம் ஒரு பேச்சுக்கூடக் கூறவில்லை.

வரவர, வீட்டுக் காரியங்களை அக்காவே கவனித்துக் கொண்டு வந்தார்கள். அம்மா பாரதம், இராமாயணம் படிப்பதும், கிராம நிலத்தைப் பார்ப்பதும், நகை நட்டுச் செய்வதாக இருந்தால் அதைக் கவனித்துக் கொள்வதுமாக இருந்தார்கள்.

வீட்டிற்கு ஜமீன்தாரருக்கு வேண்டியவர்கள் பலர் வருவார்கள். அவர்களை வரவேற்பது, உபரிப்பது, பேசி அனுப்பவுவது எல்லாம் அக்காவேதான். அது எப்படித்தான் கமலா கற்றுக் கொண்டாளோ தெரியவில்லை. உபசாரம் செய்வதிலே பலே கெட்டிக்காரியாகி விட்டாள்.

ஜமீன்தாரின் சுபாவமே ஒரு தினுசானது. காட்டுக்குள்ளே புலி நுழையும் போதே மோப்பம் பிடித்துக் கொண்டும், வாலை சுழற்றிக் கொண்டும் வருமாமே அதுபோல வருவார். உள்ளே நுழைந்தால் கமலாவின் ஒரு சிரிப்பு, ஒரு பேச்சு, புலியை எலியாக்கிவிடும்.

ஜமீன்தார் உள்ளே நுழைந்தார் என்றால், கமலா அவரை வாருங்கோ ஜமீன்தார்வாள் என்றோ, கண்ணாளனே இங்குவா என்றோ கூப்பிட்டு மகிழ வைப்பாள் என்று எண்ணுகிறீரா? இல்லை. அவர் உள்ளே நுழைந்ததும் புன்சிரிப்புடன் அவரைப் பார்ப்பாள். உடனே, “விமலா உன் அத்தான் வந்துவிட்டார், காப்பி போடு” என்று உத்தரவிட்டுவிட்டு மாடி அறைக்குச் செல்வாள். மோட்டாரை விட்டு இறங்கும்போது இருந்த முடுக்கு, உள்ளே நுழையும்போது இருந்த முறைப்பு இவைகள் மாயமாய்ப் போய்விடும். ஜமீன்தார் குழந்தை போலக் கமலாவின் பின்னால் போவார். அக்காவிடம் ‘வசிய மருந்து’ இருக்கிறது என்று ஊரிலே யாரோ பேசிக் கொண்டார்களாம். வசியத்துக்கு மருந்தாவது மந்திரமாவது. அவளுடைய புன்சிரிப்பே மந்திரம்!

கொஞ்ச நேரங்கழித்து ஜமீன்தார், கீழே வருவார்; அக்கா, நான் இருவரும் அவரிடம் பேசுவோம். வேடிக்கையாக.

“கமலா! கந்தசாமிச் செட்டியார் வந்தாரா?” என்று கேட்பார் ஜமீன்தார்.

“வந்தாரே தொந்திக் கணபதி” என்று நான் பதில் கூறுவேன். செட்டியாருக்கு வயிறு சற்றுப் பருத்துச் சரிந்து இருக்கும். அக்காவும், ஜமீன்தாரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

“செட்டியாரைத்தான் உனக்கு ஏற்பாடு செய்யப் போகிறாராம் அத்தான்” என்று அக்கா கூறுவாள்.

“போ அக்கா, உனக்கு எப்போதும் கேலிதான்” என்று நான் கூறுவேன்.

“செட்டியார் வந்தார். நான் செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தேன். அதிக நேரம் பேசுவதற்கில்லை. போய்விட்டார்” என்று அக்கா சில நாட்களிலே சொல்வாள். ஜமீன்தார் “கமலா, உனக்கு இவ்வளவு கர்வம் கூடாது. செட்டி என்ன எண்ணிக் கொண்டிருப்பான். வந்த மனுஷாளை வா, உட்காரு என்று கூடக் கேட்காது இருப்பதா மரியாதை” என்று கூறிக் கோப்பிப்பார். சில சமங்களிலே “செட்டியார் சாயங்காலம் நாலு மணிக்கு வந்தவர் இரவு ஏழு மணிவரையிலே வாயாடிக் கொண்டிருந்தார்” என்று அக்கா சொல்வாள். ஜமீன்தாருக்கு முகம் சுருங்கிவிடும். “அவனுக்கு என்ன கமலா இவ்வளவு இடம் கொடுக்கிறாய். இவ்வளவு நேரம் அவன் இங்கே பேச வேண்டிய அவசியமென்ன? என்ன அவசியம் என்றுதான் கேட்கிறேன்” என்று கோபித்துக் கொள்வார்.

ஜமீன்தாரின் மனநிலை அக்காவுக்குத் தெரியும் அவருக்கு அவருடைய நண்பர்கள் கமலா வீட்டுக்கு வர வேண்டும் என்பது விருப்பம். வருகிறவர்களால் என்ன வம்பு வந்துவிடுகிறதோ என்றும் சந்தேகம். பூந்தோட்டம் இருக்கிறது, யாரும் போய்ப் பார்க்கலாம் என்று முனிசிபாலிட்டியார் சொல்லுகிறார்கள். உள்ளே போனால், யாராவது பூவைப் பறித்துக் கொண்டால் என்ன செய்வது என்று காவலாளியை ஏற்படுத்தி இருக்கிறார்களே அதுபோல.

இதை எல்லாம் பார்க்கப் பார்க்க, எனக்கு இத்தகைய வாழ்க்கையே வேண்டாம் முத்துவை மணந்து கொண்டு நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணம் உறுதிப்பட்டது எனவே நான், மீண்டும் அக்காவிடம் இதுபற்றிப் பேசினேன். முத்துவின் மோகனப்பார்வை என்னை அதிகமாகத் தூண்டிவிட்டது. இந்தச் சமயத்திலே ஒரு நாள் எங்கள் வீட்டில் கோகுலாஷ்டமி கொண்டாடினோம். அன்று இரவு, நாங்கள் இருவரும் பாடினோம். அதற்குப் பலர் வந்திருந்தனர். எனக்கு அன்று பெரிய விருந்து. ஏன் தெரியுமா! முத்துவும், எங்கள் சங்கீதத்தைக் கேட்க வந்திருந்தார். ஆஹா நான் குதூகலத்துடன் பாடினேன். அக்காவுக்குத்தான் விஷயம் தெரியுமே, அவள் இடை இடையே என்னைக் கேலி செய்தாள். முத்துவுக்குச் சங்கீதத்திலே ஞானம் இருந்தது என்பது தெரிந்தது. தாளம் போட்டார், தலை அசைத்தார். “எல்லோரும் தானே தாளம் போடுவார்கள், தலை அசைப்பார்கள்” என்று கேட்பீர்கள். தப்புத் தாளம் போட வில்லை. அனாவசியமான இடத்திலே தலை அசைக்கவில்லை நல்ல ‘பிடி’ பிடித்தபோதுதான் தலை அசைந்தது. சும்மா தொடையைத் தட்டிக் கொண்டிருக்கவில்லை. அவர் தாளம் ஞானத்துடன் போட்டாõர். ஒரு இடத்திலே நான் ‘தாளம்’ தவறி விட்டேன். அவர் அதைத் தெரிந்து கொண்டு சிரித்தார். அக்காவும் தளுக்கிலே சொக்கித் தாளத்தை விட்டு விட்டாயா? என்று கேலி செய்தாள்.

வேணுமென்றே அக்கா, அன்று “பேயாண்டிதனைக் கண்டு நீயேண்டி மையல் கொண்டாய், பெண்களுக்கிது தகுமோ” என்ற பாடலைப் பாட ஆரம்பித்தாள். பாட்டுக்கு அர்த்தம் வேறுதான். இருந்தாலும் என்னைக் கேலி செய்யவே அக்கா அதைப் பாடினாள். குறும்புக்காரி கமலா!

கச்சேரி முடிந்தது. சந்தன தாம்பூலம் வழங்கினாள் கமலா; முத்துவிடம் சந்தக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டுபோனபோது ஒரு ‘ஸ்பெஷல்’ புன்சிரிப்புடன் கமலா, முத்துவைப் பார்த்தாள். முத்து முகமெல்லாம் மலர்ந்தான். எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஏனெனில் அவன் கமலாவைப் பார்த்த பார்வை எனக்குப் பிடிக்கவில்லை. என்மீது முத்து வழக்கமாகச் செலுத்தும் அதே மோகனப் பார்வையையே கமலா மீதும் செலுத்தினான்.

கோகுலாஷ்டமியன்று முத்து நடந்து கொண்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. என்மீது அவனுக்கு உள்ளன்பு இருப்பின், என்னைக் கண்டுகளிக்கும் சமயம் கிடைத்த போது, அதனை உபயோகித்துக் கொள்ளாது, பலகாரக் கூடையை முறைத்துப் பார்க்கும் பட்டிக்காட்டானைப் போல, அக்காளையும், மற்றும் அங்கு வந்திருந்த மற்றப் பெண்களையும் பார்த்து வந்தது குற்றமல்லவா! அதே இடத்தில் செட்டியார் - ஜமீன்தாரரின் நண்பர் - நான் பார்ப்பேனா என்று ஏங்கிக் கிடந்தார். அதுபோல் மற்றும் எத்தனை பேர் இருந்தனர். எனக்கு, ஓய்வு இல்லை மற்றவர்களைப் பார்க்க, முத்துவைப் பார்த்துப் பார்த்துத் தானே நான் பூரித்தேன். அவனுக்கு மட்டும் ஏன் அது போல் இல்லை. எனக்குக் கோபமும் வெறுப்பும் வந்ததிலே தவறு என்ன? ஆண்பிள்ளைகளின் சுபாவமே அது தானோ என்று எண்ணினேன். உருவான யார் எங்கே தென் பட்டாலும் பார்க்க வேண்டியதுதானா? ஒரு முறை, வரம்பு, அளவு, நாகரிகம் இருக்க வேண்டாமா என்றெல்லாம் எண்ணினேன். இதே வெறுப்பில், இரண்டு நாட்கள் நான் மாடிக்குச் செல்லும் வழக்கத்தைக் கூட விட்டு விட்டேன். ஆனால் முத்து மட்டும் வழக்கப்படி மாடிக்கு வந்ததாக-, அக்கா விரித்துக் கொண்டே கூறினாள். “நான் வரவில்லையே என்று தேடியிருப்பார்” என்று நான் கூறினேன். “இல்லை அவனுக்கு நேரமில்லை. என்னைப் பார்த்துப் பார்த்து எதேதோ சேஷ்டைகள் செய்தபடி இருந்தான்.” என்றாள் அக்காள். என் கோபமும் பயமும், சந்தேகமும் அதிகரித்தது.

மூன்று நாட்களுக்குப் பிறகு எங்கள் கோயிலிலே தவன உற்சவம் நடந்தது. மிக அழகான உற்சவம். கோயிலருகே ஒரு சிங்காரத் தோட்டம். அதிலே ஒரு குளம். குளத்துக்கு அருகே ஒரு மண்டபம். அதிலே விதவிதமான சித்திரப் பதுமைகள் கல்லினாலேயே செதுக்கப் பட்டிருக்கும். அந்த மண்டபத்திலே தவனம், ரோஜா, முல்லை, மல்லி, வெட்டிவேர் முதலிய பூக்களால் தயாரிக்கப்பட்ட சிறு பந்தல் போடப்பட்டு இருக்கும். அதிலே மாலை ‘சாமி’ அம்மனுடன் வந்து இறங்கினால் நடுநிசிவரையிலே இருக்கும். அதுவரை தோட்டத்திலே காந்த விளக்கின் ஒளி பகல் போல் இருக்கும். தோட்டத்தின் அழகுக்கும் மண்டபத்தின் சிங்காரத்துக்கும் விளக்கின் ஒளிக்கும் கூடியிருக்கும் மக்களின் குதூகலத்துக்கும் எல்லையிராது. ஆணும் பெண்ணும் தனித்தனியாகவும் ஜோடிகளாகவும் குழந்தை குட்டிகளோடும் நல்ல நல்ல ஆடைகள் அணிந்து கொண்டும் சொந்த நகை, இரவல் நகை இரண்டு விதமும் போட்டுக் கொண்டும், சிரித்துக் கொண்டும், இளித்துக் கொண்டும் ஆயிரக்கணக்கிலே கூடுவார்கள். வாலிபர்களுக்கு அன்று கொண்டாட்டமென்றால் அவ்வளவு இவ்வளவு அல்ல. கண்ணுக்குச் சரியான விருந்துதான். இரண்டு மூன்று நாட்களுக்குப் பாவம் சரியான தூக்கமிராது அவர்களுக்கு. தவனத் திருவிழாக் காட்சியைப் பற்றிய கனவு அவர்களைத் தொல்லைப்படுத்திவிடும்.

இத்தகைய களிப்போடு நடக்கும் அந்த விழா, நள்ளிரவு வரை நடக்கும். ‘சாமிக்கு’ எதிரிலே கொஞ்ச நேரம், வேதபாரா யணம் நடக்கும், அதற்குள் ‘பிரசாதங்கள்’ வந்து விடும். அந்த வாசனை கமகமவெனக் கிளம்பியதும், வேதபாராயணக்காரர் மளமளவெனப் புறப்பட்டு விடுவார்கள். பிரசாதம் வழங்கப்பட்டு அவர்கள் அதனை உண்டு கொண்டிருக்க, மற்றவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருப்பர். அது என்ன வழக்கமோ தெரிய வில்லை ‘ஆண்டவன்’ எதிரில் இருக்கும்போதே, ஒரு கூட்டம் வருகிற பிரசாதத்தைத் தின்பதும், மற்றவர்கள் தூர நின்று பார்ப்பதுமா நியாயம்? அவர் எதிரிலேயே இந்த ‘அக்ரமம்’ நடத்துகிறார்கள். படிப்பது வேதம்! ஆனால் நடக்கிற விதமோ, அநியாயம். சிலர் வெளிப்படையாகவே இதனைப் பற்றிக் கண்டிப்பார்கள். தவளைபோல் கத்தினார்கள். உருண்டையைப் போட்டுக் கொண்டார்கள். தொப்பையில்; இனி மலைப்பாம்பு போல மரத்தடியிலே படுத்துப் புரளுவார்கள். அக்ரமம், கோயில் சொத்து யாருடையது! அதைக் கொடுத்தவர்களின் பரம்பரை பசி ஏப்பக்காரராகி விட்டனர், இவர்கள் பாடு கொண்டாட்டமாகி விட்டது. சாமி, சாமி என்ற சாக்கை வைத்துக் கொண்டு, இந்த ஆசாமிகள்தானே தின்று கொழுக்கிறார்கள் என்று பேசுவார்கள். தனியாக ஒரு பார்ப்பனர் வந்தால் போதும், அவனைக் கேலி செய்து அவன் பயந்து ஓடும்படி செய்துவிடுவார்கள்.

எங்களுக்கு மட்டும் குருக்கள், பிரசாதத்தைக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்.

இரவு முழுவதும் அந்தத் தோட்டம், கேளிக்கை மண்டபமாகத்தான் இருக்கும். சங்கீதம், நாட்டியம், சாமிக்கு முன் நடக்கும். சாமி பார்க்கிறாரா? பக்கத்திலே நிற்கிற பட்டாச்சாரிகளும், மற்றவர்களும் பார்த்துப் பூரிப்பார்கள்.

விலாசம் விசாரிப்பது, போன வருஷம் சந்தித்தோமே என்று நட்பு கொண்டாடுவது, அந்தக் குட்டி கோடி வீட்டுக் கோமளத்தின் பேத்தியாம் என்று வர்ணிப்பது போன்ற காரியங்கள் நடந்தபடி இருக்கும்.

ஊடல்காரர்கள், மீண்டும் கூடும் இடமும் தவன மண்டபந்தான். புதிதாக ஜோடிகள் சேருவதும் அங்குதான். அன்றிரவு அங்கு கண்கள் சுழலுவதைப்போல வேறு எப்போதும் சுழலுவது இல்லை என்று கூறலாம்.

இவ்வளவு சந்தோஷமாக, திருவிழா நடக்கும்போது எனக்கொரு எண்ணம் தோன்றுவதுண்டு. உலகமே அநித்தியம் - பிரபஞ்சமே மாயை - இந்த லோகத்திலே என்ன இருக்கிறது - பணம்பாஷாணம் - இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பரென்று எண்ணவோ திடமில்லை - காயமே இது பொய்யடா - மனித வாழ்வு இந்திரஜாலம் - என்று ஏதேதோ பேசுகிறார்கள் வேதாந்தம். ஆனால், அதே மக்கள், பாட்டும் கூத்தும் தேடுகிறார்கள். பெண்கள் இருக்கக் கண்டால் போதும், தேன் கண்ட ஈ போல் தேங்குகிறார்கள். எத்தனை விதமான கோணல் சேட்டைகளைச் செய்கிறார்கள். சட்டையைச் சரிப்படுத்திக் கொள்வதும் தலையைச் சீவிவிட்டது கலைந்து விட்டதோ என்ற கவலையால் விநாடிக்கொரு முறை தடவித் தடவிப் பார்ப்பதும் முகத்தை நிமிஷத்துக் கொருமுறை கைக்குட்டையால் துடைப்பதும், கண் சிமிட்டுவதும் கைத்தாளமிடுவதும், கனைப்பதும், காதல் பாட்டுகள் பாடுவதும், கலகலவெனச் சிரிப்பதும், பணத்தை எடுத்து வீசுவதும் படாடோபம் செய்வதுமாக இருக்கிறார்கள். இத்தயை ஆண்டவன் பூஜைக்கு என்ற பெயரை வைத்து நடத்தப்படுகிற திருவிழாக்களிலே மக்களின் எண்ண மெல்லாம் ஆண்டவன் அறிவார் என்று சொல்கிறார்கள் பெரியோர்கள். தவன உற்சவத்துக்கு வந்தவர்களின் எண்ணத்தை ஆண்டவன் உள்ளபடி அறிந்திருப்பின், நான் சொல்கிறேன், ஒரு நிமிடம்கூட அங்கே இருக்க மாட்டார். எழுந்து ஓடிப்போய், கோயில் கதவைத் தாளிட்டுக் கொண்டு விடுவார். “உங்கள் முகத்திலேயே நான் விழிக்க மாட்டேன். என்னைச் சாக்காக வைத்துக் கொண்டு நீங்கள் கேளிக்கையாக இருக்கவும், காமச் சேட்டைகள் செய்யவும், ஆடம்பர ஆட்டம் ஆடிவருகிறீர்கள். நான் இதற்குத்தானா பயன்பட்டேன். நான் என்ன பித்துக் கொள்ளியா?” என்று கூறுவார். மாயை, மாயை என்று வேதாந்தம் பேசும் மக்கள் உள்ளபடி மாயை என்று உலகத்தையோ உலக சுகபோகத்தையோ கருதினால், ஊரில் இவ்வளவு திருவிழாக்கள் நடைபெறுகிறது. இத்தகைய காரணங்கள் பிறருக்கு வருவதை விட, எங்கள் குலத்தவருக்கே அதிகம் வரும். ஏனெனில், எங்கள் எதிரில்தான் இந்த ‘திருவிளையாடல்கள்’ அதிகமாக நடைபெறும். எங்கள் வீடு ஏறக்குறைய ஊரார் பூராவுக்கும் தெரியும். எனவே, எங்கள் எதிரில் அதிகமான கோணல் சேட்டைகளும், குறும்புப் பேச்சும் யாரும் பேசமாட்டார்கள். அதிலும் அக்காவிடம் ஜமீன்தார் வர ஆரம்பித்த பிறகு எங்களுக்குக் கௌரவம் அதிகம். இருந்தாலும் ஓரிரு துடிதுடிப்பான இளைஞர்கள் சாக்கிட்டுப் பேசுவார்கள்.

“ஏண்டா ரங்கா? எப்படி உருப்படி?” என்பான் ஒரு வாலிபன்.

“இந்த ரகங்களிலே எது வேண்டும் சுவாமிகாள்” என்பான் வேறொருவன்.

“உருப்படி சரியானதுதாண்டா! ஆனால் அது ஜமீன்தார் சாமான்” என்பான் மூன்றாமவன்.

எல்லோருமாகப் பிறகு சிரிப்பார்கள். நாங்கள் சுளித்த முகத்துடன் நிற்போம். காலாடிகள் ஏதேதோ பேசுகிறார்கள். என்று கூறுவோம்.

தவன உற்சவக் காட்சியை நாங்கள் அன்று களித்துக் கொண்டிருக்கையில், நான் முத்துவைப் பற்றி எண்ணிக் கொண்டு, அங்கும் இங்கும் பார்த்தபடி இருந்தேன். நான் எங்காவது வெளியே போனால், முத்து வருகிற வாடிக்கை யுண்டு. அன்று வெகுநேரம் மட்டும் வரவில்லை. ஏன் வர வில்லையென்று யோசித்துக் கொண்டே இருக்கையில் முத்து வரக்கண்டேன். அவனது முகம் ஜொலித்தது. ஆனால் அவன் பக்கத்திலே வந்த இளமங்கையின் வைரக்கம்மலின் ஒளி அதைவிட அதிகமாக ஜொலித்தது. அவன் வீட்டார் பலர் கூட இருந்தனர். ஆனால் அந்த இளமங்கையும் அவனுமே தனியாகப் பேசுவதும் சிரிப்பதுமாக வந்தார்கள். முத்துவுக்கு என்னைப் பார்க்கக்கூட நேரமில்லை. என் நினைவே இல்லை. நாங்கள் இருந்த பக்கமாக அவர்கள் நடந்து சென்றபோது அந்த மங்கை தற்செயலாக என்னைப் பார்த்தாள். உடனே திரும்பி முத்துவை நோக்கி ஏதோ கேட்டாள்.

“அவள் ஒரு தேவடியாள், டி.ஜி.” என்று முத்து பதில் சொல்லிக் கொண்டே வழி நடந்தான். நடன நாட்டியமாடு வதற்காக நிஜாரும் சதங்கையும் மாட்டிக் கொண்டிருந்தேன். அதைக்கண்டே அந்தப் பெண், நான் யார் என்று கேட்டிருக்க வேண்டும். அதற்கு முத்து, என் உயிரினும் இனியவன் என நான் எண்ணிய முத்து, அலட்சியமாக நான் ஓர் தாசி என்று அவளிடம் கூறினான். அவள் சிரித்தாள்.